படத் திறப்பு படையலுக்கு அல்ல; பாடம் கற்க!
“படத் திறப்பு படையலுக்கு அல்ல; பாடம் கற்க” என்று தோழர் ‘ஏ.ஜி.கே’ வின் முழக்கத்தை முன் வைத்து அவரது படத்திறப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 4ஆம் தேதி பகல் 11 மணியளவில் அவரது சொந்த கிராமமான நாகை அந்தணப் பேட்டையில் நடந்தது. முன்னதாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த நினை விடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது. தோழர் ஏ.ஜி.கே. எனும் அ.கோ. கஸ்தூரிரங்கன் படத்தை தோழர் தியாகு திறந்து வைத்தார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், தோழர் மணியரசன் மற்றும் பல்வேறு இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், முடிவெய்திய தோழர் ‘ஏ.ஜி.கே.’ அர்ப்பணிப்பு, போர்க் குணம், மனித நேயம், போராட்ட வடிவங்கள், கீழத் தஞ்சை மாவட்டத்தில் ஜாதி – பண்ணையடிமை ஆதிக்கத்தை ஒழிப்பதில் ஆற்றிய பங்களிப்பு குறித்து விரிவாகப் பேசினர். ஏ.ஜி.கே. அவர்களின் மகள் வழக்கறிஞர் கல்பனா நன்றி கூறினார். மன்னை காளிதாசு, மயிலாடுதுறை இளையராசா, சாக்கோட்டை இளங்கோ, பசு. கவுதமன் உள்ளிட்ட தோழர்கள் பலரும் பங்கேற்றனர்
. – நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 08092016 இதழ்