Tagged: தோழர் ஃபாருக்

தோழர் ஃபாரூக் குடும்பநிதி !

தோழர் ஃபாரூக் குடும்பநிதி !

தோழர் ஃபாரூக் அவர்கள் கடந்த 16.03.2017 அன்று சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தோழர் பாரூக் அவர்களுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பம் உள்ளது. பெரிய பொருளாதார பிண்ணனி இல்லாத நிலையிலும் கூட தன் குடும்ப வருமானத்திற்கான உழைப்பின் இடையேயும் இந்த சமூகம் குறித்த அக்கரையோடு சிந்தித்து அதற்காக ஜனநாயகத் தன்மையோடு இயங்குகிற எமது கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சமுதாய பணியாற்றியவர். தோழர் ஃபாரூக் அவர்களின் எதிர்பாராத படுகொலையை அடுத்து அவரின் குடும்பம் சொல்லொனா துயரத்தில் ஆழ்ந்துள்ள இச்சமயத்தில் அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். இப்போது நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து தோழர் ஃபாரூக் அவர்கள் குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வோம். வாய்ப்பு உள்ள தோழர்கள் தங்களால் இயன்ற நிதியை கீழ் உள்ள கழகத்தின் பொருளாளர் தோழர் துரைசாமி அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தியுதவுமாறு வேண்டுகிறோம். K.S.Duraisamy Savings A/c No :...

தோழர் ஃபாருக் படுகொலைக்கு காரணமான மதவெறியர்களை கைது செய் ஆர்ப்பாட்டம்

மதவெறியர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட கோவை திராவிடர் கழக தோழர் பாரூக் படுகொலைக்கு காரணமான மதவெறியர்களை கண்டித்து காவல் துறையே கைது செய் என்று ஆர்ப்பாட்டம் என ஆரம்பித்து பின் சென்னை அண்ணா சாலையில் தந்தை பெரியார் சிலைக்கருகில் சாலை மறியலில் ஈடுப்பட்ட திவிக, தபெதிக, சேவ்தமிழ் இயக்க தோழர்கள் 60 கைது.  

பாரூக் இறையை மறுத்ததற்கா இரையானாய்?

பாரூக் இறையை மறுத்ததற்கா இரையானாய் மதவெறி மலத்திற்கு நீ மனிதம் பேசியதற்கா மரணம் பூசியிருக்கிறார்கள் மலம் தின்னிகள் … பாரூக் பெயருக்காக சிறையை தந்த மதமே கொள்கைக்காக மரணம் தந்ததும் நீயோ … நீ கழுத்தறுப்பட்டு வீசப்பட்டிருக்கிறாய் மனிதமற்ற மதங்களுக்கு புதிதில்லை மக்களின் கழுத்தறுப்பது … மதங்கள் அன்பை போதிக்கின்றன கைமாறாய் பாரூக் போன்ற மனிதங்களை தின்று … பாரூக் உன் குடும்பம் அழுகை நிறுத்தும் நேரம் காத்திருக்கிறோம் எங்கள் கையாலாகாத்தனத்தை சொல்லி அழ … இரா. செந்தில் குமார்

தோழர் கோவை ஃபாரூக் படுகொலை !

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கழகத் தலைவர் வலியுறுத்தல் உடன் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் தோழர் கு.ராமகிருட்டிணன் அவர்கள். (கோவை அரசு தலைமை மருத்துவமனையில் கழகத் தலைவர் பேட்டி 17.03.17. கோவை.) நேற்று (16.03.2017)இரவு 11.00 மணிக்கு கோவை கழகத் தோழர் ஃபாருக் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.