Tagged: துண்டறிக்கை

இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் ! சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம்

‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ என்று பெருமைக்குரியவர் களாக இருந்த நாம் – இன்று வாழ்வுரிமை இழந்து நிற்கிறோம். காலம் காலமாக நமது முன்னோடித் தலைவர்கள் பெரியாரும் காமராசரும் அண்ணாவும் அவர் வழி வந்த தலைவர்களும் கட்டிக் காத்த தமிழ்நாட்டின் தனிச் சிறப்புகளை நடுவண் பா.ஜ.க. மோடி ஆட்சியிடம் பறி கொடுத்துவிட்டு நிற்கிறோம். நமது தனித்துவத்தை அழிக் கிறார்கள்; இந்தியப் பண்பாட்டை – பார்ப்பனியப் பண்பாட்டைத் திணிக்கிறார்கள்; நாம் இழந்து நிற்கும் உரிமைகளில் சூழ்ந்து நிற்கும் ஆபத்துகளில் ஒரு சிலவற்றை மட்டும் உங்கள் சிந்தனைக்குக் கொண்டு வருகிறோம். 2006ஆம் ஆண்டிலேயே நுழைவுத் தேர்வை நாம் ஒழித்து விட்டோம்; பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மருத்துவக் கல்லூரியில் நமது மாணவ மாணவிகளை சேர்த்தோம்; கடும் உழைப்பால் நல்ல மதிப்பெண் எடுத்துக்கூட நமது வீட்டுச் செல்வங்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை. ‘நீட்’ தேர்வை எழுது என்று கட்டாயப்படுத்துகிறது மோடி ஆட்சி. திக்கு...

இந்தி எதிர்ப்பு இயக்க பரப்புரை துண்டறிக்கை

திராவிடர் விடுதலைக் கழகத்தலைமை அறிவித்துள்ள ’இந்தி எதிர்ப்பு இயக்க பரப்புரைக்கான துண்டறிக்கை அச்சிட கழகத்தோழர்கள் கீழ் காணும் மாதிரியை பயன்படுத்திக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம் : இந்தித் திணிப்பை எதிர்ப்போம்! இழந்து வரும் உரிமைகளை மீட்போம்! இந்தியாவின் எத்தனையோ மாநிலங்களில் நமது தமிழ்நாட்டுக்குத் தனித்த சிறப்புகள் பல உண்டு. நம்மை வழிநடத்திய தலைவர்கள் நமக்காக போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள்தான் அதற்குக் காரணம்.ஒரு காலத்தில் நமது நாட்டுக்குப் பெயர் ‘சென்னை மாகாணம்’ என்பதுதான். அண்ணா முதலமைச்சராக வந்த பிறகு நாம் நமது நாட்டை ‘தமிழ்நாடு’ என்று அறிவித்துக் கொண்டோம். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனாலும் நமது தமிழ்நாட்டின் எல்லைக்குள் இந்திக்கு இடமில்லை என்று அறிவித்து, தமிழும் ஆங்கிலமும் எமக்குப் போதும் என்ற இரு மொழிக் கொள்கையை உருவாக்கிக் கொண்டோம். பார்ப்பனிய ஜாதி அமைப்பு, ஒருவனை மேல் ஜாதி; ஒருவனைக் கீழ் ஜாதி என்று பாகுபடுத்தியது. படிக்கவும்,...

ஜாதி ஒழிப்பு நாள் ! 1956 நவம்பர் 26 – துண்டறிக்கை

ஜாதி ஒழிப்பு நாள் ! 1956 நவம்பர் 26 – துண்டறிக்கை

(துண்டறிக்கை அச்சிட தோழர்கள் இக்கட்டுரையை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.) ஜாதி ஒழிப்பு நாள் ! 1957 நவம்பர் 26 3000 தோழர்கள் சிறையில் வாடிய மகத்தான வரலாறு. 1957 நவம்பர் 26இல் பெரியார் இயக்கம் ஜாதி ஒழிப்புக்காக சட்டத்தை எரித்த நாள். 3000 தோழர்கள் 6 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை பெற்றனர். அந்த நாள் நினைவாக சில வரலாற்றுக் குறிப்புகள். இன்றைக்கும் போர் வீரர்களின் நினைவுக் கல்வெட்டுகளில் அவர்களுடைய பெயர்கள் தெரியாத காரணத்தால் ‘பெயர் தெரியாமல் மரித்துப் போன போர்வீரர்கள்’ என்று எழுதப்படுவது வழக்கம். அதேபோல்பெரியார் நடத்திய ஜாதி ஒழிப்புக்கான அரசியல் சட்டஎரிப்புப் போரில் பங்கேற்று மாதக் கணக்கில் சிறைக்கொடுமைகளை அனுபவித்த பெயர் தெரியாத தோழர்கள்பலர் உண்டு. சட்ட எரிப்புப் போரில் பங்கேற்ற பெரியாரின் கருஞ்சட்டைத் தொண்டர்களின் உறுதிமிக்க தியாக வரலாற்றிலிருந்து சில செய்திகள்: • சிறையிலிருந்த தோழர் திருவாரூர் முத்துகிருட்டிணனின்மனைவிதான் அவரது கடையையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார். காலராவினால் திடீரென முத்துகிருட்டிணன் மனைவி இறந்து...

தீபாவளி புனிதமா? வணிகமா? விழிப்புணர்வு துண்டறிக்கை

தீபாவளி புனிதமா? வணிகமா? விழிப்புணர்வு துண்டறிக்கை திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்ட தோழர்களால் தியாகராய நகர் கடைவீதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது . மாணவர்கள், மாணவியர்கள் தாய்மார்கள் என மக்கள் ஆர்வமாக துண்டறிக்கையை வாங்கி படித்தது அவர்களின் தேடலை, தேவையை நன்கு உணர்த்தியது. சிலர் இருபது முப்பது துண்டறிக்கைகளை அவர்களின் பகுதியில் விநியோகிக்க வாங்கிச் சென்றதும், ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க கம்யூனிஸ்ட் தோழர் தாமாக முன் வந்து துண்டறிக்கை விநியோகத்திற்கு உதவியாய் வந்ததும், திருவல்லிக்கேணிதொகுதி MLA ஜெ. அன்பழகன் துண்டறிக்கையை பெற்றுக்கொண்டு தோழர்களின் பணியை பாராட்டியது, தோழர்களுக்கு பெரும் ஊக்கமாய் அமைந்தது. தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் இரா.உமாபதியுடன் தோழர்கள் துண்டறிக்கையை விநியோகம் செய்தனர். செய்தி : தோழர் உமாபதி, மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு – துண்டறிக்கை

இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறை, இன அடக்குமுறை, இனக் கொலைக் கொடுமைகளால் அங்கிருந்து உயிர்தப்பித் தஞ்சம் நாடித் தமிழகம் வரும் ஈழத் தமிழ்மக்களை ஏற்று வாழ வைக்கும் உரிமையும் கடமையும் தமிழ்நாட்டுத் தமிழ் மக்களாகிய நமக்குண்டு என்ற அடிப்படையில், இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) நலவுரிமைகளுக்காகப் பின்வரும் கோரிக்கைகளை இந்திய அரசிடமும் தமிழக அரசிடமும் வலியுறுத்துகிறோம்: இலங்கைத் தமிழ் அகதிகள் எனப்படும் தமிழீழ ஏதிலியர் அனைவர்க்கும் இந்நாட்டில் இடைக்காலக் குடியுரிமை வழங்க வேண்டும். தமிழீழ ஏதிலியரின் அரசியல், குடியியல் உரிமைகளும் பொருளியல் உரிமைகளும் சட்டத்திலும் நடைமுறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும். திபேத்து போன்ற பிறநாட்டு ஏதிலியரோடு ஒப்பிட்டால் தமிழீழ ஏதிலியர்க்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதை இந்திய அரசு கைவிட வேண்டும். சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலியர் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழக அரசு அம்முகாம்களைக்...

நம்புங்க… அறிவியலை; நம்பாதீங்க… சாமியார்களை!

பரப்புரைப் பயணத்தில் கழக சார்பில் மக்களிடம் வழங்கப்படும்  துண்டறிக்கை. இப்படி ஒரு கருத்தை நமது மக்களிடம் சொல்றதுக்கு நாங்க ஊர் ஊராவந்துகிட்டு இருக்கோம். ஏன்? நமது மக்கள் இன்னமும் சில நம்பிக்கைகளை நம்பிகிட்டு குழம்பி தப்பு தப்பான முடிவுகளுக்கு  வந்துடாறங்களே… அப்படிங்குற கவலை தான்! இதைப் படியுங்க… சாமியார்கள் அந்த காலத்துல சாமியார்கள் வீடுவாசலை விட்டு வெளியேறி ஊர் ஊராக சுத்துனாங்க. இப்ப சாமியார்கள் சொகுசு கார்ல – கோடி கோடியா பணத்துல புரளுராங்க… மக்கள ஏமாத்திட்டு சிறையில கம்பி எண்ணுற சாமியார்கள் ஏராளம். இதுக்குப் பிறகு இவங்களை நம்பலாமா? நமது சகோதரிகள்  நமது சகோதரிகள் இப்போ கல்லூரிகளுக்குப் போய் நல்லா படிக்குறாங்க… வேலைக்குப் போய் சம்பளம் வாங்குறாங்க… ஸ்கூட்டர், கார் ஓட்டுறாங்க… ஆனால், நமது தாத்தா பாட்டி காலத்துல நமது சகோதரிகளை படிக்கக் கூடாது; வேலைக்குப் போகக் கூடாதுன்னு தடுத்து வச்சாங்க… இப்ப கருத்தை மாத்திகிட்டோம்ல… இது தான் அறிவியல். பேய்-பிசாசு பயம் இன்னமும்...

நம்புங்க… அறிவியலை; நம்பாதீங்க… சாமியார்களை! – துண்டறிக்கை

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை துண்டறிக்கைகான செய்திகள் ! நம்புங்க… அறிவியலை; நம்பாதீங்க… சாமியார்களை! அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைக்கு ஆதரவு தாரீர்! ஒவ்வொரு நாளும் பத்திரிகைளைப் புரட்டினால்…. தொலைக்காட்சிகளைப் பார்த்தால்…. நெஞ்சம் பதறுகிறது.! அப்பப்பா…. நம்முடைய மக்களில் பலரும் இந்த அறிவியல் யுகத்திலும் மூடநம்பிக்கைகளில் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டுமா? • சாமியார்களிடம் ஏதோ ‘மந்திர சக்தி’ இருப்பதாக நம்பி ஏமாந்து நிக்குறாங்க… • பிறக்கப் போவது பெண் குழந்தைகள் என்றால், அந்த மழலையை கருவிலேயே அழிக்கிறாங்க… 10 வயதுலேயே 30, 40 வயது ஆணுக்கு நம்ம பெண் குழந்தைகளை கல்யாணம் கட்டி அவுங்க வாழ்க்கையை பாழடிக்கிறாங்க. • “இந்த ‘சனியன்’ பொறந்ததுலேயிருந்து குடும்பமே விளங்காமல் போச்சு”ன்னு சோதிடக்காரர்கள் பேச்சை நம்பி பெற்ற குழந்தைகளையே சாகடிக்கிறாங்க. • குடும்பத்தின் பிரச்சினைகள்; மன அழுத்தங்கள்; தங்களை கவனிப்பாரில்லையே என்ற ஏக்கம்; அச்சம்; இப்படி பல்வேறு உளவியல் காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்ட நமது சகோதரிகளை...

சமஸ்கிருத திணிப்பு துண்டறிக்கைக்கான செய்திகள்

மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 08.07.2016 அன்று மாவட்ட தலை நகரில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கான துண்டறிக்கை வாசகங்கள். ———————————————————- மத்திய அரசே ! சமஸ்கிருதத்தை திணிக்காதே ! அலுவல் மொழிகள் பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கு ! • மத்திய மனித வளத் துறை அமைச்சகம் விஞ்ஞான கருத்துகள் ஏராளம் இருப்பதாக கூறி அய் .அய் .டி.களிலும் மத்திய பாடத்திட்டத்தில் இயங்கும் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தை கட்டாயமாகத் திணித்து வருகிறது. • சமஸ்கிருதம் வழியாக இந்து, பார்ப்பனப்பண்பாட்டைத் திணிப்பதே இவர்களின் உண்மையான நோக்கமாகும். • அதன் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ்.சமஸ்கிருதமே இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்று கொள்கையாகஅறிவித்திருக்கிறது. • ஆர்.எஸ்.எஸ். தனது கிளை அமைப்புகள் அனைத்துக்கும் சமஸ்கிருதத்திலேயே பெயர் சூட்டி இருக்கிறது. • இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் சமஸ்கிருதம் பேசும் மக்களைக் கொண்ட மாநிலமாக இல்லை. • அது பேச்சு மொழியாகவும்...

“நான் பிறந்த ஜாதிதான் எனக்கு மோசமான விபத்து” – ரோகித் வெமுலா

பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்க மாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்துக்கு நீதி கேட்போம்! ‘ஏகலைவன்’ என்ற ஆதிவாசிக்கு ‘துரோணாச்சாரி’ என்ற பார்ப்பன குரு வில்வித்தை கற்றுத் தர மறுத்தான். ஏகலைவனோ, துரோணாச்சாரி உருவத்தை செய்து, அதையே குருவாகக் கருதி வித்தையைக் கற்றுத் தேறினான். உண்மை அறிந்த துரோணாச்சாரி, “கீழ் ஜாதிப் பயலே; வில்வித்தை கற்கும் உரிமை உன் குலத்துக்குக் கிடையாதுடா! குருதட்சணையாக உன் கட்டை விரலை வெட்டித் தா” என்று கேட்டான். ஏன் தெரியுமா? கட்டை விரலை வெட்டி விட்டால் வில்லிலிருந்து அம்புகளை விடவே முடியாது அல்லவா? இது வரலாறு அல்ல; ஆனால் புராணக் கதைகளின் வழியாக பார்ப்பனர்கள் சமூகத்துக்கு உணர்த்தும் பாடம்! ‘ஏகலைவன்’கள் கதை முடிந்துவிட்டதா? இல்லை. இல்லவே இல்லை. பார்ப்பன துரோணாச்சாரிகளின் வாரிசுகள் அய்.அய்.டி., அய்.அய்.எம்., அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம், மத்திய பல்கலைக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை இன்றும்...