கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ‘திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம்
அனைத்து தமிழர் சிக்கல்களுக்குக் காரணம் ‘திராவிடம்’ என்ற சொல் தானா? எந்த ஒரு மனிதரையும் ஒற்றை அடையாளத்தில் பொருத்தி விட முடியுமா? என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகளோடு கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. தமிழர் என்பதன் திரிந்த வடிவமே திராவிடர் என்றால், பிற மொழியாளர்கள் ‘திராவிடர்’ என்று எப்படி தங்களை அழைப்பார்கள்? திராவிடர் இயக்கம் வேறு; திராவிட இயக்கம் வேறு. தமிழ்மொழி பேசுவதால் பார்ப்பனரை தமிழர்களாக ஏற்பீர்களா? திராவிடர் வடமொழிச் சொல்லாக இருந்தும் பார்ப்பான் அதை ஏற்க மறுப்பது ஏன்? பிற மன்னர் படையெடுப்பால் வென்ற பகுதி யில் தமது முகவர்களைக் குடியமர்த்தியதற்குக் காரணம் என்ன? இன்றைய நிலையில் சமுதாயத்தில் நிலவும் ஏராளமான சிக்கல்கள் உரிய அளவுக்கு கவனிக்கப் படாமலும், கவனத்துக்கு வந்தாலும் அதைத் தீர்ப் பதற்கான உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படாமலும் உள்ளன. சமூக தளத்தில் சாதிய அடக்குமுறைகள்;...