தமிழர்களுக்கான விழா பொங்கல் மட்டுமே பெரியார்
17.1.1968 அன்று கரூரில் பொங்கல் விழா சிறப்புக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி. இந்த பொங்கல் விழா என்பது அறுப்புப் பண்டிகைன்னும் சொல்லுவார்கள். அதேபோல நாமும் அறுத்துப் பண்டங்களைக் குடும்பத்துடன் உபயோகப்படுத்துகிற நாள். மற்றும் நம்மாலான வசதிகளை விவசாயத்துக்காக நமக்கு உதவியாய் இருந்து தொண்டாற்றின ஆளுகளுக்கு – அவர்களுக்கு நாம ஏதாவது திருப்தி பண்ணுகிறதுக்கு – சாப்பாடு போடுகிறதோ, அவர்களுக்கு துணிமணி எடுத்துக் கொடுக்கிறதோ அல்லது ஏதாவது காசு கொடுத்து அவர்களைச் சந்தோஷப்படுத்துகிறதோ – இதெல்லாம், நாம் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தோம். நேற்று (16.1.968இல்) இந்த நேரத்துக்கு, நான் சேலத்திலே பெரிய மிராஸ்தார் இரத்தினசாமி பிள்ளை என்கிறவர், அவர் தோட்டத்திலே இந்த பண்டிகை வைச்சார். என்னைத்தான் தலைமையாய் அவர் விரும்பினார், போயிருந்தேன். பொங்கல் தடபுடலாக ஒரு அய்ம்பது, அறுபது மாடுகளை வைச்சி நம்ம எதிரிலேயே நடத்தினாரு. இம்மாதிரி இருநூறு பேருக்குச் சீலை வேட்டி தந்தார். ஒரு புலவர் அம்மையார் காமாட்சி...