Tagged: ஜாதி வெறி

ஜாதி வெறியர்களை கண்டித்து சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் 03112016

தலித்துகள் மீதான வன்கொடுமை தாக்குதல் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மையனூர் கிராமத்தில் ஏசு குழந்தை பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமையாளர் பாதிரியார் சகாயராஜ் இந்த பள்ளியில் படிக்கும் நான்கு சிறுவர்களை செப்டம்பர் 5 அன்று அங்கு படிக்கும் மாணவர்களின் செருப்பை திருடியதாக பிடித்து, அதற்கு தண்டனையாக அடித்தும், விளையாட்டு திடலை சுற்றிவர சொல்லியும் கொடுமை படுத்தியுள்ளனர். நான்கு பேரில் இருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிட்டு,இருளர் சமூகத்தை சேர்ந்த இருவரை கடுமையாக தாக்கியுள்ளனர் .அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று வெளியூர் போக பணம் இல்லாததால் வீடு திரும்ப முயன்றபோது, பள்ளி ஊழியர்கள் பார்த்து பள்ளிக்கே கொண்டு சென்றனர். செய்தி பெற்றோர்களுக்கு தெரிந்து அவர்கள் பாதிரியார் சகாயராஜை சந்தித்து விவரம் கேட்டபோது, அவர் பெற்றோர்களை மிரட்டியதோடு இது பிற்படுத்தப்பட்டோர் பலம் வாய்ந்த பகுதி அவர்களை அழைத்து உங்களை தாக்குவேன். நாளை காலை வந்து விடுப்பு சான்றிதழ் ( TC...

தலையங்கம் – ஜாதி வெறிக்கு மற்றொரு  தலித் இளைஞர் பலியானாரே!

தலையங்கம் – ஜாதி வெறிக்கு மற்றொரு தலித் இளைஞர் பலியானாரே!

உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் மனைவி கண்முன்னே கணவரை மர்மக் கும்பல் வெட்டிய சம்பவம் திட்டமிட்ட ஜாதி வெறி படுகொலையாகும். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர் (21). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் பழனியைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகள் கவுசல்யா(19)க்கும் கடந்த 8 மாதங் களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர் கள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில் ஞாயிறன்று இருவரும் உடுமலை பேருந்து நிலையத்திற்கு வந்தபோது (மார்ச் 13) மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சங்கரை அவரது மனைவி கண் முன்னே சரமாரியாக வெட்டி யுள்ளனர். இந்த சம்பவத்தில் கவுசல்யாவும் படுகாயம் அடைந்தார். அங்கு...

பிப்.1இல் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்!

பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்க மாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்துக்கு நீதி கேட்போம்! கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் 24.01.2016 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 7 சதவீதத்தையும் தாண்டாத இடஒதுக்கீடு மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு ஆணை அமுலுக்கு வந்து 23 ஆண்டுகள் –கடந்த பிறகும் குரூப் ஏ, குரூப் பி போன்ற முதல்நிலைப் பதவிகளில் 7 சதவிகிதத்தைக் கூட எட்டவில்லை என்று அண்மை யில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டு கின்றன. அரசு உயர் அதிகாரப் பதவிகளை கைப்பற்றிக் கொண்டிருக்கும் – பார்ப்பன – உயர் ஜாதி அதிகார வர்க்கம் – அவற்றோடு இணைந்து நிற்கும் நடுவண் ஆட்சிகள் – பார்ப்பன உயர்ஜாதி கட்டுப் பாட்டில் உள்ள உச்சநீதிமன்றம் ஆகியவை சமூக நீதிக்கான...

செயற்கைக் கருத்தரிப்பிலும் ஜாதி வெறி

செயற்கைக் கருத்தரிப்பிலும் ஜாதி வெறி

பண்டைய பீகார், கல்வியில் மிகவும் சிறந்து விளங்கியது. அங்கேதான் ‘நாளந்தா’, ‘விக்கிரமசீலா’ போன்ற பௌத்தப் பல்கலைக் கழகங்கள் இருந்தன. ஆனால் இன்று, கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக்கிறது. வேலை கிடைக்காமல் பிழைப்பு தேடி, மாநிலம் விட்டு மாநிலம் அலையும் பீகாரிகளை எல்லா இரயில் நிலையங்களிலும் காண முடிகிறது. பீகாரிகளின் வாழ்க்கை அவலத்தை, சாதியக் கொடுமைகளைக் காண முடிகிறது. பௌத்த சமயம் வேர் ஊன்றிய பீகாரில் ஏன் இன்னும் சாதிப் பிரச்சினை அப்படியே இருக்கிறது? காரணம், நிலப்பிரபுத்துவம் அப்படியே இருக்கிறது. விவசாயக் கிராமங்களில் இன்றும் உயர்சாதியினரே தலைவர்களாக இருக்கிறார்கள். சாதிய ஒடுக்குமுறை வெளிப்படையாகவே நடைபெறுகிறது. பாட்னாவில் உள்ள விந்து வங்கிகளில் சாதிவாரியாக விந்து சேகரித்து வைக்கப்பட்டள்ளது. ‘செயற்கைக் கருத்தரிப்பில்கூட சாதிக் கலப்பு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்’ என்கிறார் மருத்துவர் சின்ஹா. இதை உறுதிப்படத்துவதுபோல ஒரு சம்பவம் கயா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. செயற்கைக் கருத்தரிப்பு செய்து, கர்ப்பம் தரித்த மாலா என்கிற...