Tagged: சங்கர்

உடுமலை சங்கர் படுகொலை கண்டித்து நெமிலியில் ஆர்ப்பாட்டம் 20032016

20.03.2016 காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், உடுமலை சங்கர் அவர்களின் ஆணவப் படுகொலையை கண்டித்து நெமிலியில் கழக பிரச்சார செயலாளர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்.இரா.பா.சிவா (திவிக) தோழர்.திலீபன் (திவிக) தோழர்.விழுப்புரம் அய்யனார் (திவிக) தோழர்.சங்கர் (திராவிடர் கழகம்) மற்றும் தோழமை அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஜாதி ஆணவக்கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுக – பொதுக்கூட்டம் சென்னை 22032016

சென்னையில் பொதுக்கூட்டம் ! திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நட்டநடுத் தெருவில் சங்கர் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த காணொளி கண்டிருப்பீர்கள். சங்கரின் காதல் துணைவி கௌசல்யாவையும் கொடூரமாகத் தாக்கியது கௌசல்யாவின் தந்தை அனுப்பிய கூலிப்படை! இதைத்தான் ஆணவக் கொலை என்கிறோம். இதற்கு எதிராகத்தான் தனிச்சட்டம் கோருகிறோம். நம் கண்கள் கண்ட இப்படுகொலை நம்மையெல்லாம் நிலைகுலையச் செய்தது. படுகொலை செய்யப்படும் அளவுக்கு சங்கர் செய்த குற்றம் காதலித்ததும் அவரையே மணமுடித்ததும் எந்த அச்சுறுத்தலுக்கும் மீறி எதிர்காலத்தை காதல் துணையோடு எதிர்கொண்டதும் மட்டும்தான். மட்டும்தான். காதலித்ததிலிருந்து எதிர்கொண்டிருந்தது வரை இந்தச் சமூகம் எவ்வகையிலெல்லாம் அவர்களுக்குத் துணை நின்றது? குறிப்பாக சாதி ஒழிப்பை இலட்சியமாய்க் கொண்ட நாம் என்ன செய்தோம்? சாதி ஒழிப்பிலேயே அவரவர் காட்டும் வழிமுறைகளும் கண்ணோட்டங்களும் கோட்பாடுகளும் வேறு வேறாக இருக்கின்றன. அவற்றை பற்றி நாம் நமக்கும் மாறி மாறி விவாதித்துக்  கொண்டிருக்கிறோம். ஆனால், இளவரசனுக்குப் பிறகு, கோகுல்ராஜுக்குப் பிறகு காதலர்க்குத்...

தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டம்!

தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டம்!

முற்றுகைப் போராட்டம்! காவல்துறையின் தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில். உடுமலை சங்கர் அவர்களை ஜாதி வெறியர்கள் ஆணவப் படுகொலை செய்ததை கண்டித்தும், தொடர்ந்து நடைபெறும் ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்கத் தவறும் செயல்படாத காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவை கண்டித்தும், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க கடுமையான தனிச் சட்டம் இயற்றக்கோரியும் முற்றுகைப் போராட்டம். நாள் : 16.03.2016.புதன் கிழமை காலை 10 மணி. இடம்: காவல்துறை இயக்குனர் (I.G.) அலுவலக வளாகத்தில் உள்ள தீண்டாமை ஒழிப்பு பிரிவு அலுவலகம்,மயிலாப்பூர், சென்னை. தொடர்புக்கு: தோழர் உமாபதி, செல் : 7299230363 சென்னை மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். ஜாதி வெறி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக அணிதிரள்வோம் வாருங்கள்.