Tagged: குழந்தைகள் பழகு முகாம்

தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு – ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாம் 30042017

“கழக செயல் வீரர் ” தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று… ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாம்…. இன்று காலை (30.04.2017) 10 மணிக்கு ஆரம்பமானது.தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தோழர்.வீ.சிவகாமி அவர்கள் வந்திருந்த அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கான சிறுகதை, விளையாட்டு பயிற்சி என பல்வேறு விதமாக கலந்துரையாடினார்…. வந்திருந்த சிறுவர், சிறுமிகளுக்கு குளிர்பானம் மதிய உணவுகளும் வழங்கப்பட்டது…. மதிய பொழுதில் சமூக கல்வி நிறுவனத்தின் தோழர்.சியாம் சுந்தர் மற்றும் தோழர்.மோகினி அவர்கள் சிறுவர், சிறுமிகளுக்கு ஓவியப்போட்டி, சிறுகதை என பல்வேறு பயிற்சிகளை அளித்து சிறுவர், சிறுமிகளுடன் பழகி கலந்துரையாடினார்கள்…. இறுதியாக, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் பழகு முகாமின் சிறுவர், சிறுமிகளை வழிநடத்திய தோழர்.சியாம் சுந்தர் மற்றும் தோழர்.மோகினி அவர்களுக்கு கழக மாத இதழ் நிமிர்வோம் புத்தகத்தை வழங்கினார். அதையடுத்து வந்திருந்து பழகு முகாமில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகளுக்கு சான்றிதழ்...

பெங்களூரில் “குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்” தேதி, இடம் மாற்றம்

பெங்களூரில் “குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்” தேதி, இடம் மாற்றம்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் குழந்தைகள் பழகு முகாம் : நாள் : 13.5.2017 முதல் 17.5.2017  (5 நாள்கள்)  இடம் : பெங்களூர் அய்.எஸ்.அய். அரங்கம். கற்பனைத் திறன் வளர்த்தல், படைப்பாற்றல், குழு உரையாடல், கதை உருவாக்கல், ஓவியப் பயிற்சி, கவிதை, கட்டுரை புனைதல், அறிவியல் விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்வுகள். 10 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். குறைந்த பட்ச பங்களிப்பு : குழந்தை 1-க்கு : ரூ.1500/- ரூ.1500/= செலுத்த இயலாதவர்கள் ரூ.1000/-= செலுத்தலாம். முன் பதிவு அவசியம். பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 98424 48175 – ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) பெரியார் முழக்கம் 04052017 இதழ்

கோடைக்கால விடுமுறை  “குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்”

கோடைக்கால விடுமுறை “குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்”

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் குழந்தைகள் பழகு முகாம் வரும் மே மாதத்தில் நடைபெற உள்ளது. நாள் : 10.5.2017 முதல் 14.5.2017 (5 நாட்கள்) இடம் : பெங்களுர் . குழந்தைகள் சிறப்பு பழகு முகாமில் கற்பனைத் திறன் வளர்த்தல், படைப்பாற்றல் பெருக்குதல், குழு உரையாடல், கதை உருவாக்கல், ஓவியப் பயிற்சி, கவிதை புனைதல், கட்டுரை வரைதல், அறிவியல் சார்ந்த விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் கோடையில் கொண்டாடுவோம் ! பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக்குவோம் ! 10 வயது முதல் 15 வயது முடிய உள்ளவர்கள் பங்கேற்கலாம். குறைந்த பட்ச பங்களிப்புக் கட்டணம் குழந்தை 1க்கு : Rs.1500/= (ரூபாய் ஒரு ஆயிரத்து ஐநூறு மட்டும்) குறிப்பு : Rs1500/= செலுத்த இயலாதவர்கள் Rs1000/= (ஒரு ஆயிரம் மட்டும்) செலுத்தலாம். முன் பதிவு அவசியம். பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 98424 48175

குழந்தைகளுக்காக 5 நாள் அறிவியல் முகாம் கலை நிகழ்வுகளோடு அறிவுத் திறன் பெற்ற குழந்தைகள் கண்ணீருடன் பிரியா விடை

குழந்தைகளுக்காக 5 நாள் அறிவியல் முகாம் கலை நிகழ்வுகளோடு அறிவுத் திறன் பெற்ற குழந்தைகள் கண்ணீருடன் பிரியா விடை

குழந்தைகளுக்காக 5 நாள் அறிவியல் முகாம் கலை நிகழ்வுகளோடு அறிவுத் திறன் பெற்ற குழந்தைகள் கண்ணீருடன் பிரியா விடை தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் நான்காம் ஆண்டு குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் 20.05.2016 முதல் 24.05.2016 முடிய திண்டுக்கல் காட்டுமடத்தில் உள்ள ஐ.சி.எம். ஹவுசில் நடை பெற்றது. திருப்பூர், கோவை,மேட்டூர், தஞ்சாவூர், நாகை,மதுரை, போன்ற மாவட்டங்களிலிருந்து 42 குழந்தைகள்கலந்து கொண்டனர்.19.05.2016 மாலையே பெரும்பாலான குழந்தைகள் முகாம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டனர். 20.5.2016 : முதல்நாள் காலை குழந்தைகளின் பெயர் முகவரி பதிவு செய்யப்பட்டது. மதுரை யாழினி  நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். பயிலரங்க அறிமுகம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல்  மன்றத்தின் நோக்கம், செயல்பாடுகள், தனித் தன்மைகளை விளக்கி ஆசிரியர் சிவகாமி பயிலரங்கை அறிமுகம் செய்தார். பின்னர் குழந்தைகள் ஒருவர் மற்றொருவரைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளும் விதமாக சுய அறிமுகம் வகுப்பு விளையாட்டு முறையில் நடத்தப்பட்டது. இவ்வகுப்பினை சந்திரமோகன் மற்றும் நீலாவதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பிற்பகல்...

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சார்பில் விடுமுறைக் காலங்களில் குழந்தைகள் பழகு முகாம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடுத்தகட்டமாக வரும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களான டிசம்பர் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் திண்டுக்கல்லில் முகாம் நடைபெற உள்ளது. 3 நாட்களுக்கான பயிற்சி, உணவு, தங்குமிடம் மற்றும் சுற்றுலா அனைத்திற்கும் சேர்த்து கட்டணம் ரூ.750. டிசம்பர் 24 இரவே பெற்றோர்கள் குழந்தைகளை திண்டுக்கல் பயிற்சி மய்யத்திற்கு அழைத்து வந்துவிட வேண்டும். பெற்றோர்கள் மய்யத்தில் தங்க இயலாது. நகைகள், செல்போன்கள் அனுமதிக்க இயலாது. – ஆசிரியர் சிவகாமி / பேசி: 9842448175 மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அறிவியல் மன்றம் பெரியார் முழக்கம் 21112013 இதழ்