Tagged: கலந்துரையாடல்

சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் கோவை அணி கலந்துரையாடல் திருப்பூர் 16072017

“இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து, “சமூக நீதி – சமத்துவ பரப்புரைப் பயணம்” என்ற தலைப்பில் தொடங்கும் நிகழ்வை ஒட்டி கோவை திருப்பூர் மாவட்ட கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் 16072017 அன்று பிற்பகல் 3 மணிக்கு தோழர் துரைசாமி, மாநில பொருளாளர் அவர்களின் தலைமையில் திருப்பூரில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் 35 தோழர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் சூலூர் பன்னிர்செல்வம், நிர்மல் மதி அவர்கள்  பயண ஏற்பாடுகளுக்கு தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர். 5 நாட்களிலும் 18 தோழர்கள் கலந்துகொள்வதாக உறுதியளித்தனர்.  

சென்னை மாவட்ட கலந்துரையாடல் 30062016

30062016 அன்று மாலை 5:30 மணிக்கு பொதுச்செயலாளர் தலைமையில் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் துவங்கியது . சென்னை மாவட்ட செயலாளர் தோழர். இரா .உமாபதி உரையை துவங்கி வைக்க , அதைத் தொடர்ந்து மாவட்ட மாணவரணி செயலாளர் ஜெயபிரகாசு தலைமை செயலவையின் தீர்மாணத்தை வாசித்தார். அதை தொடர்ந்து தலைமை நிலைய செயலாளர் தோழர் .தபசி குமரன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தோழர் . அன்பு தனசேகரன், தோழர் அய்யனார், வழக்கறிஞர் தோழர். துரை அருண் போன்ற நிர்வாகிகளும் , மாவட்ட தோழர்களும் அவர்களின் கருத்தை தொடர்ச்சியாக பதித்தனர் . சமஸ்கிருத திணிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் பற்றியும், பிரச்சார பயணம் பற்றியும் , அடுத்தக்கட்ட மாவட்ட செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர் . நிகழ்வின் முடிவாக பொதுச்செயலாளர் கேள்விகள் அனைத்திற்கும் விளக்கமாக நீண்ட உரையாற்றினார் . அவரின் உரை தோழர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தரும் விதமாக அமைந்தது ....

இடஒதுக்கீடு பற்றிய கலந்துரையாடல் திருச்செங்கோடு 26062016

திருச்செங்கோடு பெரியார் மன்றத்தில் 26062016 அன்று தோழர் பால் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இடஒதுக்கீடு பற்றிய நீண்ட நெடிய கலந்துரையாடல் நிழற்படங்கள்

இடஒதுக்கீடு கலந்துரையாடல் – நாமக்கல் 26062016

இடஒதுக்கீடு நீண்ட நெடிய போராட்ட வரலாறு குறித்த கலந்துரையாடல் இடம் பெரியார் மன்றம், திருச்செங்கோடு நாள் 26062016 முன்பதிவு அவசியம்

திருச்சி மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

திருச்சி மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருச்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 2.12.13 மாலை 7.30 மணிக்கு சகிலா விடுதியில் மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கியசாமி தலைமையில் நடை பெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக செயலகத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டக் கழகத்திலிருந்து தோழர்கள் மண்டல அமைப்புச் செயலாளர் புதியவன், மாவட்டச் செயலாளர் கந்தவேல் குமார், மாவட்ட அமைப்பாளர் குணராஜ், மாவட்ட பொருளாளர் மனோகரன், திருவரங்கம் அமைப்பாளர் அசோக், பெரியார் பெருந் தொண்டர் டாக்டர் எ°.எ°.முத்து, பொன்னு சாமி, பழனி, முருகானந்தம், தமிழ் முத்து, ஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழகத் தலைவர் மற்றும் தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ள தமிழக அரசை கண்டிக்கிறோம். ஆதித் தமிழர் பேரவையின் மாநில மகளிரணி செயலாளர் இராணி, அருந்ததியினருக்கான 6 சதவீதம் உள்ஒதுக்கீட்டை...

தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல்

தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல்

29-11-2015 அன்று தூத்துக்குடி மாவட்ட கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் சோமா விடுதியில் மாவட்ட தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் நடைபெற்றது. இயக்க வளர்ச்சியைப் பற்றியும், அடுத்த கட்ட செயல் திட்டங்கள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தோழர்கள் தங்களது கருத்துகளை கூறினர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தமிழ் நாடெங்கும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் “பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை” 2016 ஜனவரி மாதத்தில் தூத்துக்குடியில் சிறப்பாக நடத்து வது. 2. தூத்துக்குடி மாவட்ட கழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக மாவட்ட தோழர்கள் அனைவரும் மாதம் ரூ.50ஐ சந்தாவாக கொடுப்பது. 3. புரட்சிப் பெரியார் முழக்க சந்தா வினை இந்த ஆண்டு (2016) அதிக அளவு உறுப்பினர்களை சேர்ப்பது.. 4. 2016ம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர் சந்தாவினை விரைவாக கொடுப்பது. என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்த கலந்துரை யாடலில் மாவட்ட செயலாளர் ச.ரவிசங்கர், மாவட்ட அமைப்பாளர்...

கழக வளர்ச்சி-கழக ஏடு குறித்து விவாதம்: கோவை மண்டல கழக கலந்துரையாடல் முடிவுகள்

கழக வளர்ச்சி-கழக ஏடு குறித்து விவாதம்: கோவை மண்டல கழக கலந்துரையாடல் முடிவுகள்

21-03-2014 வெள்ளிக்கிழமை அன்று காலை 11-00 மணியளவில், பொள்ளாச்சி ‘பர்வானா இல்லத்”தில் (வங்கி பணியாளர்கள் சங்க கட்டிடம்) கோவை மண்டல கழக கலந்துரையாடல் கூட்டம் மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விஜயன் தலைமையில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் கடவுள் மறுப்பும், பொள்ளாச்சி விஜயராகவன் ஆத்மா மறுப்பும் கூற, கோவை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பொள்ளாச்சி மாவட்டம் என தனியாக பிரித்தல், மாவட்ட அமைப்புகளை புதுப்பித்தல், பயிற்சி வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பல்லடம் விஜயன் உரையாற்றி துவக்கி வைத்தார். தலைமை சொல்லும் வேலைகளை மட்டும் செய்தால் போதாது; கிராமப்புற பிரச்சாரம் உள்ளிட்ட பல வேலைகளை நாமே முன்னெடுக்க வேண்டும் என்று செயலவைத் தலைவர் துரைசாமி வலியுறுத்தினார். உயர்கல்வி நிலையங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு எதிராகவும், ஜோதிடக் கல்விக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியம் குறித்து வழக்குரைஞர் பன்னீர்செல்வம் பேசினார். தலைமைக் கழகம் சொல்லும் அனைத்து பணிகளுக்கும் முழுமையான...