Tagged: ஏன் இந்த பரப்புரைப் பயணம்?

தமிழக மருத்துவ சேவையை  முடக்கும் ‘நீட்’

தமிழக மருத்துவ சேவையை முடக்கும் ‘நீட்’

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை நாம் உருவாக்கிய கல்வி அமைப்பு. அந்த அமைப்பை நாம் பார்ப்பன ஆதிக்கத்தி லிருந்து பறித்து, அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் பகிர்ந்தளித்தோம். பிரிட்டிஷ்காரர் நாட்டை ஆண்டபோது பிரிட்டிஷார் வழங்கிய நமக்கான சொற்ப அதிகாரங்களோடு மாகாண சபையை நமது முன்னோர்களான நீதிக் கட்சியினர் வழியாக ஆட்சி செய்தோம். 1928ஆம் ஆண்டிலேயே நாம் இந்த கல்வி வேலைவாய்ப்புகளை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தோம். “சுதந்திர”த்துக்குப் பிறகு காமராசர் ஆட்சி யில் சமூகநீதி இலவசக் கல்வி மடை திறந்த வெள்ளம்போல் பரவியது. தொடர்ந்து அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஆட்சி யிலும் நாம் நமக்கான இடஒதுக்கீடு என்ற சமூக நீதிக் கொள்கையைக் கொண்டே முன்னேறினோம். அதனால்தான் மண்டல் பரிந்துரையை அமுலாக்கி, மத்திய அரசுப் பணிகளில் 27 சதவீத பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து, அதன் காரணமாகவே பிரதமர்...

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதத் திமிர் நடவடிக்கை

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதத் திமிர் நடவடிக்கை

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் தமிழ்நாட்டின் கனிமவளங்கள் மிக மோசமாக சுரண்டப்பட்டு வருகின்றன. இதற்கு இந்திய நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. குறிப்பாக காவிரி பாசனப் பகுதி, பாலாற்றுப் பகுதிகள் குறிவைக்கப்படு கிறது. இந்தப் பகுதிகளில் 500 அடி ஆழத்தில் நிலக்கரி பெருமளவில் இருக்கிறது. அதன் இடுக்குகளில் மீதேன் எரிவாயு இருக்கிறது. இந்த எரிவாயுவை எடுக்க ‘கிரேட் ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்’ என்ற தனியார் நிறுவனத் துக்கு 2010ஆம் ஆண்டு  அனுமதி அளித்தது இந்திய  அரசு. 32 ஆண்டுகள் மீத்தேன் எடுப்பதும் 100 ஆண்டுகள் நிலக்கரி எடுப்பதும் திட்டம். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி, பாசனப் பகுதி நிச்சயமாக பாலைவன மாகிவிடும். பூமியின் சராசரி வெப்ப நிலையை கடுமையாக உயர்த்துவது மீத்தேன் வாயு. இதை எடுக்கும் முறைக்கு ‘நீரியல் விரிசல்’ என்று பெயர். பூமிக்கடியில் இருக்கும் பாறைகளை உடைத்து நொறுக்கி ‘மீத்தேன்’...

சிறு குறுந் தொழில்களை நசுக்சி, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜி.எஸ்.டி. வரி

சிறு குறுந் தொழில்களை நசுக்சி, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜி.எஸ்.டி. வரி

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் ‘ஒற்றை ஆட்சி; ஒற்றைப் பண்பாடு’ நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் மத்திய பார்ப்பனிய ஆட்சி – நீட் வழியாக மாநில கல்வி உரிமையை பறித்ததுபோல், ‘ஜி.எஸ்.டி.’ வழியாக மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையையும் பறித்துவிட்டது. இந்திய அரசியல் சட்டம் இந்தியா வின் மாநிலங்களின் உரிமைகளில் வரிவிதிப்பு உரிமைகளையும் வழங்கியிருக்கிறது. நாடு முழுதும் ஒரே வர்த்தக சந்தை – ஒரே வரி என்று கூறி மோடி மத்திய சரக்கு மற்றும் சேவை வரியை ஜூலை முதல் தேதி முதல் அமுல்படுத்திவிட்டார். அம்பானி, அதானி போன்ற பெரும் பணமுதலைகள் இதை ஆதரிக்கிறார்கள் என்பதிலிருந்தே இது யாருக்கு சாதகமானது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த ஜி.எஸ்.டி. சிறிய நடுத்தர நிறுவனங்கள், வர்த்தகர்கள் சாமான்ய மக்கள் தலை மீது சுமையை ஏற்றியிருக்கிறது. ஜவுளி, பீடி, மருந்துத் தொழில்கள், கட்டுமானம், போக்குவரத்து, தையல், தீப்பெட்டித் தொழில்கள்,...

உணவு உரிமையைப் பறிக்கும் பார்ப்பனியம்

உணவு உரிமையைப் பறிக்கும் பார்ப்பனியம்

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம்  மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை போடுகிறது பா.ஜ.க.  ஆனால் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாதான் முதலிடம். • கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியா ஏற்றுமதி செய்த மாட்டிறைச்சி 1850 கிலோ மெட்ரிக் டன். • 2015-2016இல் இந்தியாவுக்கு மாட்டிறைச்சி மூலம் கிடைத்த வருமானம் ரூ. 28,802 கோடி. • கடந்த ஆண்டு இந்தியாவும் பிரேசிலும் தலா 19.60 சதவீதம் தனித்தனியாக மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்து முதலிடத்தில் சரிசமமாக நிற்கின்றன. ஆனால் பிரேசில் நாட்டில் ‘பசு தெய்வம்’ என்ற கூப்பாடுகள் ஏதும் இல்லை. • ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் புரதச் சத்து மாட்டிறைச்சி. • வேத கால பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை விரும்பி சாப்பிட்டார்கள். ‘இந்திரன்’ என்ற கடவுளுக்குப் பிடித்த மாட்டிறைச்சியை பார்ப்பனர்கள் ‘அக்னி’ யாகத்தில் பலியிட்டதை ரிக்வேதம் கூறுகிறது. • பலியிடப்பட வேண்டிய பசு உள்ளிட்ட மிருகங்களை எப்படி...

தமிழ்நாட்டை இந்தி மாநிலமாக்கத் துடிக்கிறது மோடி ஆட்சி

தமிழ்நாட்டை இந்தி மாநிலமாக்கத் துடிக்கிறது மோடி ஆட்சி

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் மோடியின் பா.ஜ.க. ஒவ்வொரு நாளும் திணித்து வரும் இந்தி – இந்துத்துவா எதிர்ப்பை, தமிழ்நாடு, கருநாடகம், கேரள மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கிவிட்டன. தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. குழுக்கள் பா.ஜ.க.விடம் அடங்கிப் போய் சரணாகதி நிலையில் இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் கொந்தளிக்கின்றனர். மாட்டிறைச்சி விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் மோடி ஆட்சியின் சட்டத்தை புறந்தள்ளிய கேரள அரசு, அந்த சட்டத்தை நீக்கி மாநிலத்துக்கு தனி சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. வீடுதோறும் மக்களை சந்தித்து இந்த சடங்கு கலாச்சாரங்களை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ். ‘குடும்ப பிரபோதன்’ திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் பிரணாய் விஜயன், இது மனுதர்ம திட்டம் என்று அறிவித்தார். மீண்டும் ‘திராவிட நாடு கோரிக்கை எழும்’ என்று கேரளாவில் சமூக வலைதளங்களில் எழுதத் தொடங்கிவிட்டார்கள். இப்போது கருநாடக முதல்வர் சித்தராமய்யாவும் இந்திக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார். கருநாடக அரசு மும்மொழித்...

பறி போகிறது திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை

பறி போகிறது திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் 1966ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருச்சியில் தொடங்கப் பட்டது துப்பாக்கித் தொழிற்சாலை, பொதுத் துறை நிறுவனம். இந்திரா காந்தி திறந்து வைத்தார். இந்திய இராணுவத்துக்குத் தேவையான தளவாட உற்பத்தியில் முதலிடத்தில் நிற்கும் இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்கப் போகிறது, மோடி ஆட்சி. நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் 72,500 கோடி நிதி திரட்டு வதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியிருக்கிறது மோடி ஆட்சி. இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் இந்தத் தொழிற் சாலையைச் சார்ந்து வாழும் அய்ந்து கிராமங்களைச் சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. ‘மேக் இன் இந்தியா’ மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் மோடி ஆட்சி, பாதுகாப்பு தொடர்பான அனைத்து துறைகளையும் செயலிழக்கச் செய்கிறது. யூத மத வெறி இஸ்ரேலிடம் அதிகமான இராணுவத் தளவாடங்கள் வாங்கப்படுகின்றன. பார்ப்பனியமும் ஜியோனிசமும்...

அடிபணியும் தமிழக அரசு

அடிபணியும் தமிழக அரசு

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்காக களமிறங்கிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 தோழர்களை கைதுசெய்து சிறையிலடைத்திருக்கிறது தமிழக அரசு. அவர்களை பிணையில் விடுவிக்கவும் கூடாது என்று ‘ஓ.என்.ஜி.சி.’ பார்ப்பன அதிகாரவர்க்கம் தனது முழு அதிகாரச் செல்வாக்கையும் பயன்படுத்துகிறது. நெடுவாசல் – கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்காக அவர்கள் கோரிக்கையின் நியாயங்களை விளக்கி சேலத்தில் அரசு மகளிர் கல்லூரி அருகே துண்டறிக்கை வழங்கிய மாணவி வளர்மதியை காவல்துறை ஜூலை 16ஆம் தேதி கைது செய்து குண்டர் சட்டத்தை ஏவியிருக்கிறது. 23 வயது வளர்மதி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் பட்டம் பெற்றவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு இதழியல் படிக்கிறார். ‘ஓ.என்.ஜி.சி.’யை எதிர்ப்போர் எல்லோருமே தேச விரோதிகளாம். மத்திய அரசிடம், ‘ஓ.என்.ஜி.சி.’க்கு அவ்வளவு செல்வாக்கு! தமிழக அரசுக்கு மத்திய அரசிடம் அவ்வளவு குலை நடுக்கம்! தமிழ் மக்கள் உரிமைக்குக் குரல் கொடுப்பவர்கள் தேச விரோதிகளா?...

கீழடியில் நடக்கும் கீழறுப்பு

கீழடியில் நடக்கும் கீழறுப்பு

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் சிவகங்கை அருக உள்ள கீழடியில் தமிழர் சங்ககால வாழ்வியல் குறித்து சான்றாதாரங்களை தொல்பொருள் ஆராய்ச்சித் துறை கண்டறிந்திருக்கிறது. ஜாதி, மதங்கள் இல்லாத ஒரு வாழ்வே சங்ககாலத் தமிழர்கள் வாழ்வு என்று இந்தத் தடயங்கள் உறுதி செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்துத்துவா திணிப்புக்கு இது எதிரானது என்பதால் தொல்பொருள் தடயங்களை ஒரு மூட்டையில் கட்டி பெங்களூருவில் உள்ள தலைமையகத்தில் வீசி விட்டனர். நீதிமன்ற வழக்குகள், பொது மக்கள் எதிர்ப்பு வந்த பிறகு மீண்டும் ஆய்வுகள் தொடங்கின. நேர்மையான ஒரு அதிகாரி முறையாக தொல்பொருள் ஆய்வுகளைத் தொடங்கினார். அவரை திடீரென்று இடமாற்றம் செய்தது மோடி ஆட்சி. மக்கள் கொதித்தெழுந்தார்கள். கீழடியைப் பார்வையிட வந்த மத்திய அமைச்சர் பொன் இராதாகிருட்டிணன், நிர்மலா சீத்தாராமனை முற்றுகையிட்டார்கள். தமிழர்கள் பண்பாடு பார்ப்பனிய இந்துத்துவா பண்பாடு அல்ல என்பதை உறுதிப்படுத்தும் ஆய்வுகளை முடக்க முயலுகிறது மோடி ஆட்சி....

மூடப்படுகிறது ‘செம்மொழி ஆய்வு நிறுவனம்’

மூடப்படுகிறது ‘செம்மொழி ஆய்வு நிறுவனம்’

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?  தமிழ் செம்மொழியாக ஏற்கப்பட்ட பிறகு ‘செம்மொழி தமிழ் ஆய்வு மய்யம்’ சென்னையில் அமைக்கப்பட்டது. தனித்து இயங்கிய இந்த ஆய்வு மய்யத்தை இழுத்து மூடிவிட்டு, திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ஒரு துறையாக மாற்ற மோடி ஆட்சி முடிவெடுத்திருக்கிறது. சமஸ்கிருதம், இந்தி மொழியைத் தவிர்த்து பிறமொழி நிறுவனங்கள் அனைத்தையும் ஆங்காங்கே இருக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒரு துறையாக இணைக்க மோடியின் மனித வள மேம்பாட்டுத் துறை முடிவெடுத்திருக்கிறது. இந்தி, சமஸ்கிருதம் தவிர ஏனைய மொழிகளை ஒரு இனத்தின் பண்பாட்டு அடையாளங்கள் என்பதை மோடி ஆட்சி ஏற்கத் தயாராக இல்லை. தேசிய இனங்களை இந்த பார்ப்பனிய கட்டமைப்புக்குள் கொண்டு வந்து, தேசிய இனங்களின் மொழிகளை சமஸ்கிருத, இந்தி ஆளுகைக்குக் கீழே அடக்க முயலும் பார்ப்பன சதியை தமிழர்களே! தமிழ் மொழிப் பற்றாளர்களே புரிந்து கொள்ளுங்கள்! பெரியார் முழக்கம் 03082017 இதழ்