Tagged: உயர்நீதிமன்றம்

கழகத் தலைவர்-தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது

கழகத் தலைவர்-தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது

கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் கழகத்  தோழர்கள் அருண்குமார், அம்பிகாபதி, கிருட்டிணன் ஆகியோர் மீது தமிழக அரசு பொய்யாக போட்டிருந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் 13.2.2014 அன்று ரத்து செய்தது. இது தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற நீதிதிகள் இராஜேசுவரன், பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் பிப்.12 ஆம் தேதி வந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சார்பில் மூத்த வழக்கறிஞர் வைகை வாதிட்டார். அவர் தனது வாதத்தில், “பொது ஒழுங்கு சீர்குலைவு நடக்கும்போது மட்டுமே தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது. இந்த வழக்கில் அப்படி எந்த சீர்குலைவும் நடைபெறாதபோது சட்டம் முறை கேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்பது வேறு; பொது ஒழுங்கு சீர்குலைவு என்பது வேறு. காவல்துறையின் குற்றச்சாட்டில்கூட பொது ஒழுங்கு சீர்குலைந்திருக் கிறது என்ற எந்தக் குறிப்பும் இல்லை. குற்றம் சாட்டப்...

கழகத்தின் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் : உயர்நீதிமன்றம் அனுமதி

கழகத்தின் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் : உயர்நீதிமன்றம் அனுமதி

6.11.2015 அன்று வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாட்டிறைச்சி வைத்திருந்ததாக உத்திரபிரதேசத்தில் கொல்லப்பட்ட அக்லக் படுகொலையை கண்டித்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ள மாட்டிறைச்சிக்கான தடையை நீக்கக் கோரியும், தொடரும் ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோரியும், 30.10.2015 அன்று வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி கழகத்தின் சார்பில் வேலூர் சத்துவாச்சேரி காவல்நிலையத்தில் 21.10.2015 அன்று மனு அளிக்கப்பட்டது. மனு அளித்த அன்றைய நாளே வேலூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வேலூர் மாவட்டத்தில் காவல்துறை சட்டம் அமுலில் இருப்பதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்தால் பதட்டமான சூழல் உருவாகும் எனவும் கூறி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு 29.10.2015 அன்று விசாரணைக்கு வந்தது. 30.10.2015 அன்று அரசு தரப்பின் விளக்கங்களைக் கேட்ட நீதிமன்றம் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட...