Tagged: ஈஷா

குலுங்கியது கோவை – எங்கெங்கும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 24022017

கோவை வந்த மோடிக்கு கருப்பு கொடி. வனங்களை அழிக்கும் ஈஷா யோகா விழாவிற்க்கு வருகை தரும் மோடிக்கு எதிராக #திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 24022017 மாலை கருப்பு கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் காட்டப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர் ஈஷா மையத்தில் 122 அடி உயர சிவன் பொம்மையைத் திறக்க வந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அணி அணியாய் தோழர்கள் ஆர்ப்பாட்டம்-கருப்புக் கொடி-கைது.. # முதல் அணியில் த.பெ.தி.க, த.மா.கா,வி.சி ,விவசாய சங்கங்களின் தோழர்கள்.. # இரண்டாம் அணியில் தி.க தோழர்கள்.. # மூன்றாம் அணியில் தி.வி.க, சமூக நீதிக் கட்சி,மாதர் சங்கம், DYFI தோழர்கள்.. குறிப்பு: கைது செய்து நேரே மண்டபத்திற்கு கொண்டு சென்றிருந்தால் கூட, நிகழ்வுகளை பொதுமக்கள் அறிய முடியாமல் போயிருக்கும்.. ஆனால் திவிக தோழர்களை கைது செய்து, மண்டபம் கிடைக்காமல் கோவை முழுதும் வீதிவீதியாய்...

மோடிக்கு கருப்புக்கொடி ! கோவை சூலூரில் 24022017

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் ! நாள் : 24.02.2017 மாலை 4 மணிக்கு. இடம் : சூலூர் விமானப்படை தளம் அருகில். மோடியே, ஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்! எனும் முழக்கத்துடன்பிப். 24இல் கோவையில் தோழர்கள் திரளுகிறார்கள் கோவை வனப்பகுதியில் யானைகள், மிருகங்கள் வாழும் பகுதிகளை முறைகேடாக ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பி வரும் ஈஷா மய்யத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், புதிய கட்டுமானங்களைத் திறந்து வைக்க பிரதமர் மோடி பிப்.24 ஆம் தேதி வருகிறார். இதை எதிர்த்து கோவை வரும் மோடிக்கு பிப். 24ஆம் தேதி கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறுகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், சுற்றுச் சூழல் மனித உரிமை அமைப்புகள் இணைந்து இந்த கருப்புக் கொடிப் போராட்டத்தை நடத்துகின்றன. கழகத் தலைவர் கொளத்தூர் மணி போராட்டத்தில் பங்கேற்கிறார். தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் பல்வேறு முற்போக்கு...

ஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்! மோடிக்குக் கருப்புக் கொடி

ஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்! மோடிக்குக் கருப்புக் கொடி

பிப். 24இல் கோவையில் தோழர்கள் திரளுகிறார்கள் கோவை வனப்பகுதியில் யானைகள், மிருகங்கள் வாழும் பகுதிகளை முறைகேடாக ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பி வரும் ஈஷா மய்யத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், புதிய கட்டுமானங்களைத் திறந்து வைக்க பிரதமர் மோடி பிப்.24 ஆம்  தேதி வருகிறார். இதை எதிர்த்து கோவை வரும் மோடிக்கு பிப். 24ஆம் தேதி கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறுகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், சுற்றுச் சூழல் மனித உரிமை அமைப்புகள் இணைந்து இந்த கருப்புக் கொடிப் போராட்டத்தை நடத்துகின்றன. கழகத் தலைவர் கொளத்தூர் மணி போராட்டத்தில் பங்கேற்கிறார். தமிழகம் முழுது மிருந்தும் கழகத் தோழர்களும் பல்வேறு முற்போக்கு சமுதாய இயக்கத்தைச் சார்ந்த தோழர்களும் கோவை நோக்கி திரளுகிறார்கள். சமூக வலைதளங்களில் இந்த செய்திகள் வேகமாகப் பரவி வருகின்றன. சட்ட விரோத, சமூக விரோத நடவடிக்கை களில் ஈடுபட்டு வரும் ஜக்கி வாசு தேவுக்கு ஆட்சி...

‘ஈஷா’ ஜக்கி வாசுதேவ் ‘கிரிமினல்’ பின்னணி

2011ஆம் ஆண்டு சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு ‘ஈஷா’ மய்யத்தின் ஜக்கி வாசுதேவ் உரையாற்ற  அழைக்கப்பட்டதை எதிர்த்து சேலம் நகர பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட துண்டறிக்கை – ‘ஜக்கி வாசுதேவ்’  மோசடிகளை கிழித்துக் காட்டுகிறது. இந்த செய்திகள் ‘இலஷ்மி நரசிம்மா’ என்ற மாத இதழில் (15.4.2011)  வெளிவந்துள்ளது. இத் துண்டறிக்கை, “யோக்கியன் வருகிறான்… சொம்பெடுத்து உள்ளே வையுங்கள்!” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. ஈஷா மய்யத்தில் தங்களுடைய இரண்டு மகள்கள் கட்டாயப்படுத்தப்பட்டு மொட்டையடிக்கப்பட்டு  சன்யாசியக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை மய்யத்திலிருந்து மீட்டுத் தர வேண்டும் என்றும் கோவை வடவள்ளியைச் சார்ந்த பேராசிரியர் காமராஜ், கோவை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புகார் தந்துள்ளார். இந்த நிலையில் ஜக்கி வாசுதேவ் என்பவர் , யார் என்பதை விளக்குகிறது இந்தத் துண்டறிக்கை. “சேலம் அரசு கலைக் கல்லூரியில் வருகிற 30.9.2011 முதல் 2.10-2011 வரை ஈஷா யோகா என்கிற பெயரில் தியானலிங்கம் என்கிற மதப் பிரச்சாரம் செய்ய ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ணமூர்த்தி’...

ஈஷா மையத்தில் குழந்தைகள் சித்திரவதை: அதிர்ச்சித் தகவல்கள்

ஈஷா யோகா மையத்தில் அத்துமீறல்கள் நடப்பது உண்மைதான் என அந்நிறுவனத்தில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி விலகி வந்த நிர்வாகி ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார். மதுரை திருப்பாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்ற ஓய்வு பெற்ற உளவுத்துறை காவலர் ஞாயிறு அன்று ஈஷா யோகாமையம் குழந்தைகளின் சித்தரவதைக் கூடமாக செயல்படுவதாகவும், அதிலிருந்து தனது மகன்களை மீட்டு வந்து விட்டதாகவும், மற்ற பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு மதுரையில்  இருந்து தனது பிள்ளைகளையும் அழைத்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் ஈஷா யோகா மையம்  குறித்தும், அங்குள்ள சமஸ்கிருத குருகுல பள்ளிகளின் சிறப்புகள் குறித்தும் தொடர்ச்சியாக வந்த செய்திகள்  எனது பிள்ளைகளை அங்கு சேர்க்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. இதனையடுத்து எனது  மூத்த மகனை ஐந்து இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை ஈஷா யோகா மையத்தில் செலுத்தி 2012 ஆம் ஆண்டு சமஸ்கிருத பள்ளியில் சேர்த்தோம்....