Tagged: இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு
மத்திய பா.ஜ.க ஆட்சி இந்தித் திணிப்பை தீவிரமாக்கி வரும் நிலையில் இந்த வரலாற்றுப் பின்னணியை அரசியல் நிர்ணயசபையில் நடந்த விவாதங்களை விளக்குகிறது. இந்தக் கட்டுரை; கட்டுரையை படிப்பதற்கு முன் சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. இந்தியா “சுதந்திரம்“ பெறும் 1947 ஆகஸ்ட் 15க்கு முன்பே 1946ம் ஆண்டிலேயே அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்டுவிட்டது. இந்த அரசியல் நிர்ணயசபையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் யார்? 1935ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியர்களுக்காக ஒரு அரசியல் கூட்டத்தை தயாரித்து அதனடிப்படையில் தேர்தல்களை நடத்தியது. அந்தத் தேர்தலில் அனைத்து குடிமக்களுக்கும் வாக்குரிமை கிடையாது சொத்து-கல்வி அடிப்படையில் நூற்றுக்கு 14 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து தேர்ந்தெடுத்து நாடாளுமன்றம் அப்படியே அரசியல் நிர்ணயசபையாக மாற்றப்பட்டது. இதில் பெரும்பான்மை எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்; 1946ம் ஆண்டில் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணயசபை அரசியல்சட்டத்தைதயாரித்து -1949ம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் அரசியல் நிர்ணயசபையின் ஒப்புதலைப் பெற்றது. அரசியல் நிர்ணயசபையின் தலைவர்...
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தெருமுனைக் கூட்டம்…. ஈரோடு சேனாதிபதிபாளையத்தில் 28.05.2017 மாலை 6:30 மணிக்கு மத்திய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டம்.. ஆத்தூர் மகேந்திரனின் மந்திரமல்ல தந்திரமே அறிவியல் நிகழ்ச்சியும், இந்தி திணிப்பு சிறப்புரை தோழர் வீரா கார்த்தி ( தமிழ்நாடு அறிவியல் மன்றம்) தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி….. தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க அழைக்கிறோம்….
வெகுஜன மக்களின் மனதில் இந்தி படிப்பது அறிவென்றும், இந்தியை படித்தால் உயர்வென்றும் திட்டமிட்டு திணிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இந்தியை மொழியாக வட மாநிலத்தவர்கள் பிழைப்பிற்காக தென் மாநிலங்களில் கூலி வேலைக்கும், கட்டிட வேலைக்கும் என புலம் பெயர்ந்தபடி உள்ளனர். வட மாநிலங்களில் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளவர்கள் கூட, தரமான கல்விக்கு தென் மாநிலங்களை, குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளை தேர்ந்தெடுக்கின்றனர். காரணம் தமிழர்களுக்கு என்று தனித்துவமாக கலாச்சாரம், நாகரிகம் போன்றவையே காரணம். இந்தி படிப்பதில் என்ன தவறு இருக்கிறது? நிச்சயம் இல்லை அந்நிய மொழி அறிதல் அறிவே. ஆனால் அதுவே கட்டாயமாக்கப்பட்டு திணிக்கையில் நிச்சயமாய் எதிர்க்கக் கூடியதே . இந்தி ஏன் திணிக்கப்படுகிறது. பெரிதாய் ஆய்வுகள் தேவையில்லை. தனக்கென நாடில்லா ஆரியம், அகன்ட பாரத கனவிற்கு இந்து மதம் கொண்டு இந்தியாவை வடிவமைப்பது போலவே, அதை மேலும் பலப்படுத்தும் வண்ணம் ஒருமொழி கலாச்சாரத்தை கொண்டுவர முயலும் மொழி திணிப்பே இந்தியை அறிவென்பது. உலகத்தின் ஆதி...