Tagged: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்

19122015 சேலம் – மக்களைப் பிளவுப்படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு – தீர்மானங்கள்

தீர்மானம் : 1 உரிய பயிற்சி பெற்ற எந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவரையும் அறநிலையத் துறையின் ஆளுகைக்குள் உள்ள கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என 2006 –ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்துக்கு எதிராக பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கில் அண்மையில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்தின் நோக்கத்தையே குழி தோண்டி புதைத்து விட்டது. தீண்டாமையையும், பார்ப்பன மேலாண்மையையும் நிலைநிறுத்தும் – ஆகம சாஸ்திரங்களைப் பின்பற்றுவது “தீண்டாமை” தடுப்பு சட்டத்துக்கோ – சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டப் பிரிவுகளுக்கோ எதிரானது அல்ல என்றும் தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. ஆகம விதிகள் படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆகும் உரிமைக்குரிய கோயில்களில், அதற்கு மாறாக  வேறு எந்தப் பிரிவினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்ற இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு – இந்து மதம் பார்ப்பன மதமே என்பதை உறுதியாக்கியிருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து – தமிழக அரசு...

அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகர்: தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்

அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகர்: தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்

அனைத்துப் பிரிவினரையும் அர்ச்ச கராக்கும் விவகாரத்தில் அதிமுக, திமுக கட்சிகள் ஒரே கருத்தை கொண்டுள்ளன. இந்நிலையில், அனைத்து பிரிவினரும் அர்ச்சக ராக முடியாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே வேளையில், அனைத்து பிரிவினரும் அர்ச்சகராகும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உறுதியாக செயல்பட வேண்டும். தடை விதிக்கப்படாத அர சாணையைப் பயன்படுத்தி அனைத்து பிரிவினரையும் அர்ச்சகராக்க வேண் டும். குறிப்பாக, தற்போது பயிற்சி முடித்துள்ள 207 பேரை கோயில்களில் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்.

கர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

கர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

தமிழகக் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி. இரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த நவம்.16, 2015இல் வழங்கிய 54 பக்க தீர்ப்பு, குழப்பங்களையே உருவாக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். வழக்கின் பின்னணி குறித்து சுருக்கமாக இப்படிக் கூறலாம். தமிழ்நாட்டில் ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாவதற்கு பரம்பரை அடிப்படையில் (அப்பா-மகன்-பேரன் என்று அடுத்தடுத்த வாரிசுகளாக) உரிமை உண்டு என்று 1959ஆம் ஆண்டு இந்து அறநிலையத் துறை சட்டம் ஏற்பு வழங்கியது. கோயில் கர்ப்பகிரகத்தில் கடவுளிடம் நெருங்கும் உரிமை பார்ப்பனருக்கு மட்டுமே உண்டு என்று கூறுவதன் வழியாக ஏனைய பார்ப்பனரல்லாத மக்கள் ‘சூத்திரர்’ என்ற இழிவுக் குள்ளாக்கப்படுவதை பெரியார் சுட்டிக்காட்டி, போராட்டங்களைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து அன்றைய கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் ஜாதி வேறுபாடின்றி அனைவரும் அர்ச்சகர் ஆவதற்கும், பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்தும், ‘இந்து அற நிலையத்துறை’ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு தமிழக சட்டமன்றத்திலும்,...

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை: தமிழக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை: தமிழக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மதுரை மீனாட்சி கோயில் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணை மே மாதம் முடிந்துவிட்டது. தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எல்.ராஜா என்பவர் ‘இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார். (நவம்.4, 2015) அதில், “அர்ச்சகராவதற்கு மதம் குறித்த சடங்குகள் – ஒழுக்கமுமே முக்கியம். ஜாதி முக்கியமல்ல. ஆகம அடிப்படையிலான கோயில்களிலும் பார்ப்பனரல்லாத அர்ச்சகர் பயிற்சிப் பெற்றவர்கள் அர்ச்சகர்கள் ஆவதை ஆர்.எஸ்.எஸ். எதிர்க்க வில்லை” என்று கூறியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்தக் கருத்தை வரவேற்கிறோம். பார்ப்பனர்கள் – பார்ப்பன அமைப்புகள் – இராம கோபாலன்கள் – சங்கராச்சாரியர்கள் இந்தக் கருத்தை ஆதரிக்கிறார்களா? பெரியார் முழக்கம் 12112015 இதழ்