திருப்பூரில் தெருமுனைக் கூட்டங்கள்!
தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டக் கழகம் சார்பாக காரைக்குடி மாநாட்டு தீர்மானங்கள் விளக்க தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தெருமுனைக் கூட்டங்கள் அக்டோபர்-15,16 ஆகிய 2 நாள்களில் 4 இடங்களில் நடைபெற்றன.
முதல் நாள் : 15.10.2026 வியாழன் மாலை 3.00 மணி அளவில் வீரபாண்டி, கொளத்துப்பாளையம் (பல்லடம் சாலை), இடுவம்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
தெருமுனைக் கூட்டத்தில் கழக சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன், மாநகர அமைப்பாளர் முத்து,தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் வீ.சிவகாமி ஆகியோர் கருத்துரையாற்றினர். கழகப் பொருளாளர் துரைசாமி நிறைவுரையாற்றினார். தோழர் குணா, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், ஆறுமுகம் ஆகியோர் நன்றியுரையாற்றினர். தொடக்கமாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் யாழினி பெரியார் குறித்த பாடல் பாடினார். மாவட்டத் தலைவர் முகில் இராசு, மாநகரச் செயலாளர் மாதவன், தெற்குப் பகுதி அமைப்பாளர் ராமசாமி, தோழர்கள் அமுதா, பெரியார் பிஞ்சு பிரனேசு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இரண்டாம் நாள் : 16.10.26 வெள்ளி மாஸ்கோ நகர், பகுதியில் மாலை 05.30 மணிக்கு தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகரச் செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். தோழர் யாழினி பாடல் பாடினார். மாவட்டத் தலைவர் முகில் இராசு, மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் உரையாற்றினார்கள். கழகப் பொருளாளர் துரைசாமி நிறைவுரையாற்றினார். மடத்துக்குளம் ஒன்றிய அமைப்பாளர் கடத்தூர் ஐயப்பன் நன்றி கூறினார். நிகழ்வில் மாநகரத்துணைத் தலைவர் மாரிமுத்து, குணா,ஆறுமுகம், ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
பெரியார் முழக்கம் இதழ் 05112026
