வைக்கத்தில் குடும்பவிழா நடத்தியது கோபி மாவட்டக் கழகம்
ஈரோடு வடக்கு (கோபி) மாவட்டக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குடும்பச் சுற்றுலா செல்வது என தீர்மானிக்கப்பட்டு அக்டோபர்-2 வெள்ளி இரவு தோழர்கள் குடும்பமாக ஜாதி அடிமை – த்தனத்திற்கு எதிராக தந்தை பெரியார் களமாடிய கேரளா மாநிலம் வைக்கம் பகுதிக்கு குடும்பச் சுற்றுலா சென்றனர்.
எந்த வீதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என்று தடுக்கப்பட்ட அநீதிக்கு எதிரானப் போராட்டம் நடத்தப்பட்டதோ அந்த வீதியில் இருந்து ஊர்வலமாக தோழர்கள் பெரியார் நினைவகத்தை அடைந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து தோழர்கள் குடும்பமாக கொச்சின் மற்றும் செரயாய் கடற்கரை சென்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 15102026
