பெரியார் பற்றாளர் சாலமன் பாப்பையா முடிவெய்தினார்.

மறைந்த பெரியார் தொண்டர் சாலமன் பாப்பையா (91) “ஜாதி, மத கோட்பாடுகளில் இருந்து விலகி எப்பவும் பெரியார் கொள்கைப்படி வாழ்வதால் தனது உடலை அடக்கம் செய்யாமல், எரியூட்ட வேண்டும் என உயில் எழுதி வைத்துள்ளார் – என்று பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் உதவியாளர் ராஜா சன்நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கிறித்துவ மத சடங்குகளில் உடலை அடக்கம் செய்வதே மரபு.
பெரியார் திராவிடர் கழகம் ’குடி அரசு’ தொகுப்புகளை வெளியிட்ட போது தன்னிடம் இருந்த `குடிஅரசு’ இதழ்களை வழங்கி உதவியவர். அண்ணாவின் ’வேலைக்காரி’ திரைப்படத்தை பார்த்த பிறகு தீவிர திராவிட இயக்க ஆதரவாளராக மாறியதை சன்நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பதிவுசெய்துள்ளார்.
தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டு, மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புகழ் வணக்கம் செலுத்துகிறோம்.
பெரியார் முழக்கம் இதழ் 17092026

You may also like...