விடுதலைப் போராட்ட வீரர் பொல்லான் நினைவுநாளில் கழகத் தலைவர்!
விடுதலைப் போராட்ட வீரர் பொல்லான் அவர்களின் நினைவு அரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மரியாதை செலுத்தினார்!
23.08.2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.00 மணியளவில் ஈரோடு மொடக்குறிச்சி வட்டம், ஜெயராமபுரத்தில் கடந்த 2025-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பாக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர் பொல்லான் அவர்களின் நினைவு அரங்கிற்கு வந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தி, நினைவு அரங்கத்தைப் பார்வையிட்டார்.
சமூக நீதி மக்கள் கட்சித் தலைவர் வடிவேல் ராமன், அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் செல்வராஜ், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், ரவிக்குமார், சந்திரன், பொன்னுசாமி, செட்டியூர் மாரி, காவை அவினாசி மற்றும் சமூக நீதி மக்கள் கட்சியினர், தி. மு. க – வினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
பெரியார் முழக்கம் இதழ் 10092026
