ஜாதிவெறிப் பேச்சு: தூரி முனுசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கழகம் மனு!
ஆகஸ்ட்-16, 2026 அன்று இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன்னில் நடந்த DNT மாநாட்டில் ஆணவக்கொலைகளைத் தூண்டும் விதமாகவும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் தூரி.முனியசாமி என்பவர் பேசியது சமூக வலைதளங்களில் ஊடகங்களில் பரவி வந்ததையடுத்து இவர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்யக்கோரி கோவை மாவட்டக் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் கழகத்தினர் ஆக-27, 2026 அன்று காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட கோவை காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பெரியார் முழக்கம் இதழ் 10092026
