சார் பதிவாளர் சீனு.தமிழ்ச்செல்வி பணி நிறைவு பாராட்டு விழா!
தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறையில் 36 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி, கடந்த 30.04.2026 தேதியன்று பணி நிறைவு பெற்ற தமிழர் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளர் மா.கந்தசாமி அவர்களின் இணையர், “பெரியார் கொள்கையாளர்” சார்பதிவாளர் சீனு. தமிழ்ச்செல்வி பணி நிறைவு பாராட்டு விழா 02.05.2026 சனிக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சீதா திருமண மண்டப்பதில் நடைபெற்றது.
பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையேற்று தலைமையுரையாற்றினார். தற்சார்பு விவாயிகள் சங்கத்தின் தலைவர் கி.வே.பொன்னையன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் “அரசுப் பணியில் நியாமாகவும், நேர்மையாகவும் செயல்பட்டதால் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகளிலும் மற்றவர்கள் ஏற்படுத்திய பிரச்சனைகளிலும் தைரியமாக எதிர்வினையாற்றியும், பெரியாரிய கொள்கையில் (கல்லைப்) போன்று உறுதியாக நின்று செயலாற்றி பணி ஓய்வு பெறும் சீனு. தமிழ்ச்செல்வியை பாராட்டி வாழ்த்துரையாற்றினார்.
கே.ஏ.செங்கோட்டையன் (பொது பணித்துறை அமைச்சர்), சத்யபாமா (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்), வழக்கறிஞர் ப.பா.மோகன், வந்தியத்தேவன் (ம.தி. மு. க கொள்கை பரப்புச் செயலாளர்) மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்று பாராட்டி வாழ்த்துரையாற்றினர்.இந்நிகழ்ச்சியில் துரைசாமி (கழகப் பொருளாளர்), ப. ரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்), முத்து (திருப்பூர் மாநகர அமைப்பாளர்), கழகத் தோழர் அவினாசி ஆகயோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 21052026
