கழகத்தை பாராட்டி குரோஷியாவிலிருந்து ஓர் உணர்ச்சி மடல்!

கழகத்தில் புதிதாக தன்னை இணைத்துக் கொண்ட தோழர் மனோஜ் ரூ.5,000 வளர்ச்சி நிதி அளித்துள்ளார். அய்ரோப்பா குரோஷியாவில் பணியாற்றி வரும் இவர் கழக செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருகிறார். பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.தீண்டாமை, ஜாதிய வன்கொடுமைகள், பெண் அடிமைத்தனம் மற்றும் ஆதிக்க மனப்பான்மையோடு சக மனிதர்களை இழிவுபடுத்தும் பிற்போக்குச் சக்திகளிடமிருந்து, உழைக்கும் எளிய மக்களைக் காத்து நிற்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தில் என்னை ஒரு துரும்பாக இணைத்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.

ஜாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் மனிதர்களைப் பிரித்து, “இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன்; இவன் படிக்க வேண்டும், இவன் குலத்தொழில் செய்ய வேண்டும்” என்று மனித மாண்பைச் சிதைக்கும் ஆரிய பார்ப்பனிய அடக்குமுறைகளுக்கு எதிராகத் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் சமரசமற்ற போர்க்களத்தில் என்னையும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்கிறேன். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் புரட்சிகரமான கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, சமகாலப் பெரியாராகத் திகழும் தோழர்களோடு கைகோர்த்துத் திராவிடச் சித்தாந்தத்தை நிலைநிறுத்த நான் கடமைப்பட்டுள்ளேன். அமைப்பின் மீதான என் பற்றின் அடையாளமாகவும், கொள்கைப் பரப்புரையின் தேவையை உணர்ந்தும் என்னுடைய சிறிய பங்களிப்பாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார இதழுக்கு வளர்ச்சி நிதியாக ரூ. 5,000/- வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். “சனாதனம் ஒழிப்போம்! சமத்துவம் காப்போம்!”
இவண், மனோஜ், காரைக்குடி
(தற்போது பணி: குரோஷியா, ஐரோப்பா)
பெரியார் முழக்கம் இதழ் 21052026

You may also like...