விளம்பரத்துக்கு வீண்செலவு செய்யும் மோடி அரசு
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ஷபி பரம்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த 5 ஆண்டுகளில் மட்டும் விளம்பரத்துக்கு ரூ2,447 கோடியை ஒன்றிய அரசு செலவிட்டுள்ளது. இதன்படி நாளொன்றுக்கு ரூ.1.34 கோடி செலவாகியுள்ளது. மின்னணு, அச்சு ஊடகங்கள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வாரியாக 2020-21 நிதியாண்டில் ரூ.409.55 கோடி, 2021-22 ஆண்டு ரூ.317.48 கோடி, 2022-23 ஆண்டு ரூ.408.37கோடி, 2023-24 ஆண்டு ரூ.656.6 கோடி, 2024-25 ஆண்டு ரூ.654.9 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மோடி அரசின் விளம்பர செலவில் 5 அமைச்சகங்கள் மூலம் மேற்கொண்ட விளம்பரங்கள் மட்டுமே 60 சதவீதத்தை தாண்டிவிட்டன. கடந்த 2024-26 நிதியாண்டில் ரூ.526.90 கோடி விளம்ப ரத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. இதில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ரூ.208.35 கோடி, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் ரூ.42.51 கோடி, பாதுகாப்பு அமைச்சம் ரூ.31 கோடி, நிதியமைச்சகம் ரூ.16 கோடி, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் ரூ.21.5 கோடி செலவிட்டுள்ளன என புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.
மேலும், மேற் கண்ட நிதியாண்டில் டிவி மற்றும் டிஜிட் டல் விளம்பர செலவு மட்டும் ரூ.406.12 கோடியாகி விட்டது. இதன் பங்களிப்பு 77.2 சதவீதம். அதேநேரத்தில் அச்சு ஊடகங்களுக்கான செலவு 40 சதவீதம் குறைந்து ரூ.119.78 கோடியாகி விட்டது முந்தைய ஆண்டில் இது ரூ.202 கோடியாக இருந்தது. இதுபோல், சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்ய ரூ.9.85 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த 2025-26 நிதியாண்டில் ரூ.14.06 கோடியாக உயர்ந்துள்ளது. தெரியவந்துள்ளது.
பெரியார் முழக்கம் இதழ் 16042026
