பிரதமர் அலுவலகமா? பார்ப்பன பாதுகாப்பு அலுவலகமா?
ஒன்றிய ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மநுசாஸ்திரத்துக்கும் பார்ப்பனர்களுக்கும் எதிரான பாடத்திட்டங்கள் இடம்பெற்று இருக்கின்றதா? என்று விளக்கம் கேட்டு பல்கலைக்கழகங்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி இருக்கிறது பிரதமர் அலுவலகம்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பெயர் குறிப்பிடாத செய்தி ஒன்று முகநூலில் பதிவிடப்பட்டிருந்தது. அதில் பல உயர்கல்வி நிறுவனங்களின் அம்பேத்கர், ஜோதிராவ் பூலே போன்ற தலைவர்களின் ஜாதி, மத எதிர்ப்பு சிந்தனையின் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. பாட நூல்களிலும் இடம்பெற்றுள்ளன என்றும், ஆண் ஆதிக்கம், ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் பார்ப்பன எதிர்ப்பும் மநுசாஸ்திர எதிர்ப்பும் மாணவர்களிடம் திணிக்கப்படுகிறது என்றும் இந்த விஷம் பரப்பும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என்றும் பதிவிடப்பட்டிருந்தது.
பெயர் குறிப்பிடாத இந்தப் பதிவை உடனடியாக கவனத்தில் எடுத்து பிரதமர் அலுவலகம் அடுத்த நாளில் செப்-27 உயர் கல்விநிறுவனங்களிடம் இது குறித்து மின்னஞ்சல் வழியாக விளக்கம் கேட்டுள்ளது பிரதமர் அலுவலகம். பார்ப்பனர்கள் பாதுகாப்பு அலுவலகமாக செயல்படுகிறது.
( ‘இந்து ஆங்கில நாளேடு’ செப்-30 அன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது)
பெரியார் முழக்கம் இதழ் 08102026
