கழக தோழர்களுக்கு ஒரு அறிவிப்பு ! விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பாக காவல்துறை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கோரிக்கை மனு
விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் சிலைகளை கரைப்பது குறித்து உச்சநீதி மன்றம் மற்றும் அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கழகத்தின் சார்பில் தமிழகத்தின் மாவட்ட காவல்துறை மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் மற்றும் இந்து அறநிலையத்துறை ஆகிய அலுவலகங்களுக்கு கடிதங்கள் கொடுக்கப்பட உள்ளதை அறிவோம்.
அவ்விண்ணப்பங்களை தயாரிப்பதற்கான மாதிரிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனை தோழர்கள் தங்கள் பகுதிற்கேற்ப மாற்றியமைத்து அந்தந்த அலுவலங்களில் கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.
மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் கோட்டாட்சியர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர், அந்தந்த பகுதி காவல் நிலையங்கள் ஆகியவற்றிலும் மேலும் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்து அறநிலையத் துறை ஆகியவற்றிலும் கடிதங்கள் கொடுக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்வை பதிவு செய்து கழக தலைமைக்கு செய்தியாக அனுப்பவும். அந்தந்த பகுதி நாளிதழ்களில் இச்செய்தியை இடம் பெற செய்வது இன்னும் சிறப்பானதாக இருக்கும்.
சிலை கரைப்பு குறித்து 2004 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலும் இப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதனையும் இக்கடிதங்களுடன் இணைத்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.