Author: admin

ஜனாப் யாகூப் ஹாசன் ( எதிரிகளுக்கு ஒரு நல்ல வேட்டை ) 0

ஜனாப் யாகூப் ஹாசன் ( எதிரிகளுக்கு ஒரு நல்ல வேட்டை )

ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்று கஷ்டப்படுகிற அதன் எதிரிகளுக்கும் ஜஸ்டிஸ் கக்ஷியைத் திட்டி கூலி வாங்கிப் பிழைப்பவர் களுக்கும் இந்த மாதம் நடந்த சென்னை சட்டசபைக் கூட்டத்தினால் ஒரு நல்ல வேட்டை கிடைத்ததென்றே சொல்லலாம். மலையாளக் குடிவார மசோதாவைப் பற்றி பார்ப்பனர்கள் பேரில் ஏற்பட்டிருந்த கெட்ட பெயரை மாற்றிக் கொள்ளவும், சர்.கே.வி. ரெட்டி மலையாளக் குடிவார மசோதாவை நிறைவேற்றும் விஷயத்தில் ஆண்மையுடன் எடுத்துக்கொண்ட முயற்சியி னால் ஏற்பட்டிருந்த நல்ல அபிப்பிராயத்தை மாற்றவும், நமது பார்ப்பனர்கள் ஜனாப் யாகூப் ஹாசன் சேட்டு பெயரால் தந்திரம் செய்து வெற்றிபெற்று விட்டார்கள். அதாவது ஜனாப் சேட் அவர்கள் சட்டசபைக்கு அபேக்ஷகரா யிருக்கத் தனது சிறை வாசத்தால் ஏற்பட்டிருக்கும் தடையை நீக்கும்படி சென்னை அரசாங்கத்தாருக்கு மிதவாதிகளைப் பிடித்து ஒரு விண்ணப்பம் செய்து கொண்டார். அது பலிக்காமல் போகவே இந்தியா அரசாங்கத்தாருக்கு ஒரு விண்ணப்பம் செய்து மிதவாதிகளைப் பிடித்து சிபார்சு செய்யச் செய்து பார்த்தார். அதுவும் பலனற்றுப்...

பார்ப்பனரல்லாதார்களுக்கு                                  ஓர் வேண்டுகோள் 0

பார்ப்பனரல்லாதார்களுக்கு ஓர் வேண்டுகோள்

தற்காலம் நமது நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல்களில் வெற்றி பெறுவோர்களில் பலருக்கு மந்திரி, தலைவர் முதலிய கொழுத்த சம்பளமுள்ள உத்தியோகங்களும், தங்களுக்கு வேண்டிய பலருக்கு 1,000, 500 ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகங்கள் கொடுக்கக் கூடிய அதிகாரங்களும் கிடைக்க வசதியிருப்பதால், இத்தேர்தலுக்குப் பெரிய மதிப்பு ஏற்பட்டிருப்பதோடு, இவ்வுத்தியோகங்கள் அடைய எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு சட்டசபையில் ஆள் பலமும் கட்சிப் பெயர்களும் வேண்டியிருக்கிறபடியால் தேசத்தின் பெயராலும் சமூகத்தின் பெயராலும் பலர் பல கட்சிகளை ஏற்படுத்திக் கொண்டு, ஒவ்வொன்றிற்கும் ஜனங்கள் ஏமாறத்தக்க வண்ணம் ஒவ்வொரு பெயரை வைத்துத் தங்களைப் போன்ற சுயநலவாதிகளாகப் பலரைச் சேர்த்துக் கொண்டு கூட்டுக் கொள்ளை அடிப் பது போல் பலவித மோச வார்த்தைகளையும், பொய் வாக்குத் தத்தங்க ளையும் ஓட்டர்களிடம் சொல்லி அவர்களை ஏமாற்றி ஓட்டுப் பெற பலவித முயற்சி செய்து வருகிறார்கள். நாட்டில் எங்கு பார்த்தாலும் சில வகுப்பினர் இதே வேலையாகத் திரிந்து வருகின்றனர். இதனால் தேசத்திற்கும் ஏழை...

‘சுதேசமித்திர’னின் ஞானோதயம் 0

‘சுதேசமித்திர’னின் ஞானோதயம்

ஜுலை µ 16 ² “மித்திர”ன் “இந்து மத தர்ம ஸ்தாபனங்கள் சரியாக நடக்கும்படி செய்யத்தக்க சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டு மென்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்” என்று எழுதியிருக் கிறான். மதவிஷயத் தில் அரசாங்கத்தார் பிரவேசிக்கக் கூடாது என்று எழுதி இதுவரை பாமரர்களை ஏமாற்றி வந்த பார்ப்பன மித்திரனுக்கு இப்போதா வது சர்க்காரால் சட்டம் ஒன்று செய்யப்பட வேண்டும் என்று சொல்லும் படியான புத்தி வந்ததற்கு நாம் மகிழ்கிறோம். ஆனால் இந்தப்புத்தி தானாகத் தோன்ற வில்லை. ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடுகாரும், ஈ.வெ.இராமசாமி நாயக் கரும் தேவஸ்தானச் சட்டத்தை ஆதரித்தும் அதை எதிற்கும் பார்ப்பனர்களின் சூழ்க்ஷியைப் பொது ஜனங்கள் அறியும்படி செய்ததின் பலனாகவும் இதை ஒப்புக்கொள்ளாவிட்டால் தங்களுக்கு ஓட்டுக்கிடைக்கா மல் போகுமோ என்கிற பயமும் பார்ப்பன மித்திரனான “சுதேசமித்திர”னை “இந்துமத ஸ்தாபனம் சரியாக நடக்க ஒரு சட்டம் அவசியம்” என்று சொல்லும்படி செய்து விட்டது. ஆனால் “மித்திரன்” அதின் கீழாகவே “இந்த சட்டமானது...

தமிழ் ‘சுயராஜ்யா’ 0

தமிழ் ‘சுயராஜ்யா’

பார்ப்பனர்களின் நயவஞ்சக ஆதிக்கம் பொங்கித் ததும்பி பூரணமாய்த் தாண்டவம் ஆடப்பெறும் தமிழ் ‘சுயராஜ்யா’ பார்ப்பனரல்லா தார் கொடுத்த தமிழ்நாட்டு காங்கிரஸ் பணத்தைக் கொண்டு நடைபெறுகிற தென்பதைப் பலரும் அறிவர். அன்னமிட்டவர் வீட்டில் கன்னமிடும் படு பாவிகளைப்போல பார்ப்பனரல்லாதாரின் பணத்தாலேயே பிறந்து, பார்ப்ப னரல்லாத சந்தாதாரர்களாலேயே வளர்க்கப்பட்ட தமிழ் ‘சுயராஜ்யா’ பார்ப்ப னரல்லாதாருக்கே கேடு விளைவித்து வருகிறது. இப்பத்திரிகை பார்ப்பனரல் லாதாரின் க்ஷீனத்தைக் கோரி பார்ப்பனரல்லாதாருடன் போர் புரிந்து வரு வதை உலகமறியும். சின்னாட்களுக்கு முன் பார்ப்பனரல்லாத கட்சியின் கூட்டம் சென்னை சௌந்தரிய மகாலில் நடைபெற்றது. ‘சுயராஜ்யா’ பத்திரிகை அக்கூட்டத்தில் கூடியிருந்தோர் அனைவரையும் “உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள்” என்று மானங்கெட்டத்தனமாய் பெயரிடுகிறது. ஊரூராய்த் திண்டாடித் தெருவில் நின்று பார்ப்பனரல்லாதார் வீடுதோறும் அலைந்து திரியும் “உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள்” ‘சுயராஜ்யா’ பத்திரிகை ஆசிரியரின் இனத்தைச் சேர்ந்த பார்ப்பனக் கூட்டமேயன்றி, சௌந்தரிய மகாலில் அன்று குழுமி யிருந்த பார்ப்பனரல்லாதவர்களன்று. இதைப்பற்றி ‘திராவிடன்’ கூறியுள்ள முத்து போன்ற...

மலையாளக் குடிவார மசோதா 0

மலையாளக் குடிவார மசோதா

மலையாளக் குடிவார மசோதா என்கிற ஒரு மசோதாவின் பேரில் சென்னை சட்டசபையில் இவ்வாரம் வாதம் நிகழ்ந்து வருகிறது. இம்மசோதா வின் தத்துவம் பிராமணர் பிராமணரல்லாதார் என்கிற வகுப்பின் நன்மை தீமைகளை அஸ்திவாரமாகக் கொண்டது. எப்படியெனில், மலையாள தேசத்தில் உள்ள பூமிகள் பெரும்பாலும் அத்தேசத்திய பிராமணர்களுக்குச் சொந்தமானது. அத்தேசத்துப் பிராமணர்களில் பெரும்பாலோர் நம்பூதிரிகள் என்னும் மலையாளப் பிராமணர்கள். இவர்களுடைய சொத்துக்கள் பாதிக்கப் படுவதேயில்லை. இந்தப் பிராமணர்கள் தங்களுக்கு அதிகக் குழந்தைகள் பிறந்து விட்டால் குடும்பத்திற்கு அதிகச் செலவாகி விடுமென்றும், பங்கு போட்டுக் கொண்டே போனால் சொத்துக்களின் அளவு குறைந்து போகு மென்றும் எண்ணியே தங்கள் குடும்பங்களில் தலைவனாக உள்ளவன் (மூத்த வன்) மாத்திரந்தான் கல்யாணம் செய்து கொள்வது என்றும் மற்றவர்களெல் லாம் “சூத்திர ஸ்திரீ”களை அதாவது நாயர் ஸ்திரீகளை சம்பந்தம் செய்து (தமிழ் நாட்டு தாசி வேசிகளைப் போல் ) ஒவ்வொரு பிராமணரல்லாத ஸ்திரீ யை வைப்பாட்டியாக வைத்துக் கொள்வதென்றும், அவர்களுக்குத் தாங்கள்...

“தொட்டது துலங்காது”  கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் சம்பாஷனை 0

“தொட்டது துலங்காது” கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் சம்பாஷனை

அர்ஜுனன் : ஏ, கிருஷ்ணா! சுயராஜ்யக் கக்ஷி காங்கிரசில் சேராமல் தனித்திருந்த போது அதற்குக் கொஞ்சம் மரியாதை இருந்தாப் போல் தெரிந்ததே. இப்பொ ழுது காங்கிரசில் சேர்ந்து சுயராஜ்யக் கக்ஷியே காங்கிர சாக மாறி மகாத்மா காந்தியும் ஆசீர்வாதம் பண்ணியும் அவர் சிஷ்யர்களும் எவ்வளவோ அதற்கு வெளிப்படையாயும் இரகசியமாயும் உதவி செய்தும் இப்படி துள்ளத் துள்ள செத்துப் போய் விட்டதே அதன் காரணம் என்ன? கிருஷ்ணன் : ஓ , அர்ஜுனா! இது உனக்குத் தெரியவில்லையா? கலியுக பத்மா சூரன் கை வைத்தால் எதுதான் வாழும்? அர்ஜுனன்: அது யார்? எனக்குத் தெரியவில்லையே. கிருஷ்ணன் : உண்மையாய் தெரியாதா? அர்ஜுனன் : ஆம், தெரியாது. கிருஷ்ணன்: அதுதான் நமது ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் . அர்ஜுனன்: ஓஹோ! அவர் தலைவரானதினால்தான் போய்விட்டதோ? சரி, சரி, அதனால்தான் நமது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட செத்துப் போய்விட்டது. இப்பொழுது எனக்குப் புரிந்தது. கொஞ்ச காலத்திற்கு...

க ற் பு 0

க ற் பு

– சித்திரபுத்திரன் கற்பு என்கின்ற வார்த்தையானது மனித சமூகத்தில் சரிபகுதியான எண்ணிக்கையுள்ள பெண்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காக மாத்திரமே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்கின்ற தத்துவத்தின் மேல் இதை எழுதுகின்றேன். கற்பு என்கின்ற வார்த்தையை பகுபதமாக்கி பார்ப்போமானால் கல் என்பதிலிருந்து வந்ததாகவும் அதாவது படி – படிப்பு என்பது போல் கல் – கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்படுகிறது. அன்றியும் “கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை” என்கின்ற வாக்கியப்படி பார்த்தால் கற்பு என்பது சொல் தவறாமை. அதாவது நாணயம், சத்தியம் என்கின்ற கருத்து கொண்டதாக இருக்கின்றது. அதை பகாப்பதமாக வைத்துப் பார்த்தால் ‘மகளிர் நிறை’ என்று காணப்படுகின்றது. இந்த இடத்தில் மகளிர் என்கின்ற பெண்களையே குறிக்கும் பதம் எப்படி சம்மந்தப்பட்டது என்பது விளங்கவில்லை. நிறை என்கின்ற சொல்லுக்கு பொருள் பார்த்தால் அழிவின்மை, உறுதிப்பாடு, கற்பு என்கின்ற வார்த்தைகள் காணப்படுகின்றது. ஆகவே கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்மந்தப்பட்டது என்பதற்கு ஆதாரம் கிடைக்கா விட்டாலும் அழிவில்லாதது, உறுதி...

ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு                ஒரு புது யோகம் – சித்திரபுத்திரன் 0

ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஒரு புது யோகம் – சித்திரபுத்திரன்

கோயமுத்தூர் ஜில்லா தலைவர்கள் மகாநாடு ஒன்று கோயமுத்தூரில் கூட்டப்பட்டது வாசகர்களுக்குத் தெரியும். அக்கூட்டத்திற்கு ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படவில்லை. அழைப்புக் கடிதம் அனுப்பப்படாததற்கு ஸ்ரீமான் அய்யங்கார் பொறுப்பாளி யா, அல்லது அய்யங்காரின் கூட்டு அபேக்ஷகர்களில் எவராவது பொறுப் பாளியா, அல்லது கூட்டப்பட்டவர்கள் பொறுப்பாளியா என்பது அவ்வளவு சுலபமாய் வெளியில் சொல்லக்கூடிய விஷயமல்ல. இதனால் நமது அய்யங்காருக்கு ஒரு புது யோகம் பிறந்து விட்டது. அதாவது தன்னை அக்கூட்டத்திற்கு அழைக்காத காரணத்தைக் கொண்டு ஒவ்வொரு பார்ப்பனர்கள் வீட்டுக்கும் போய், பார்ப்பனரல்லாதார் எல்லாம் தன்னைத் தள்ளிவிட்டதாகவும், இந்தக் காரணத்திற்காகவே பார்ப்பனர்கள் எல்லாம் கட்டுப்பாடாக பார்ப்பனர்களுக்கே தனி ஓட்டு (சிங்கிள் ஓட்டு) போட வேண்டுமென்றும், ஒரு பார்ப்பனனாவது பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டுச் செய்யக்கூடாது என்றும் சொல்லி ஒவ்வொரு பார்ப்பன ஓட்டரிடத்திலும் பிரமாணமும் வாக்குத் தத்தமும் வாங்கி கட்டுப்பாடு செய்து வருகிறா ரென்றும், பார்ப்பனர்களும் கூட்டம் கூட்டமாகப் போய் அய்யங்காருக்குப் பிரமாணம் செய்து கொடுத்துவிட்டு வருகிறார்களென்றும்...

எவரை பாதிக்கும்?  சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்திரவு 0

எவரை பாதிக்கும்? சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்திரவு

ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சியின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகுமும்மு ரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்ப வற்றிற்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்பவற்றிற்குப் பெருகி வருகின்றன. எனவே, இப்பொழுது நடக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களும் தலை சிறந்து மிளிர்வது ஜஸ்டிஸ் கட்சியினருடையதே. ஆதலால் கூட்டங் கூடக் கூடாதென உத்திரவு ஏதேனும் கிடைக்குமேல் அது ஜஸ்டிஸ் கட்சியின் கூட்டத்தை பாதிப்பதாகவேயிருக்கும். ஏனெனில் முற்கூறியது போன்று சுயராஜ்யக் கட்சியின் கூட்டத்தைக் கண்டு மதிப்பாருமில்லை மகிழ்வாரு மில்லை. இவ்வாறிருக்க, சென்னை நகர போலீஸ் கமிஷனர், “சென்னை நகர எல்லைக்குட்பட்ட எந்தத் தெருவிலும், வீதியிலும், தெரு மூலையிலும், ரஸ்தா மூலையிலும், பொதுமக்கள் நடமாடும் எந்த ராஜ பாட்டையிலும், பொதுஜன நடமாட்டத்திற்குத் தடையாயிருக்கக் கூடிய வேறெந்த பொது இடத்திலும் தேர்தல் கூட்டங்களோ ஊர்வலங்களோ நடத்த இனி அனுமதிக்க முடியாது.” என்றதொரு தடை உத்திரவை...

கிறிஸ்தவ மதப் பிரசாரமா? 0

கிறிஸ்தவ மதப் பிரசாரமா?

“கிறிஸ்தவ மதப் பிரசாரமா?” என்ற மகுடமிட்டு, சென்னைப் பார்ப்பன மித்திரன் சென்ற 5-7-26-ல் குறிப்பொன்றெழுதி, சென்னைக் கடற்கரையில் ஸ்ரீமான் ஆரியா இந்து மத அநுஷ்டானங்களைப் பற்றியும், இந்து தெய்வங்களைப் பற்றியும் குறிப்பாக விக்ரஹ ஆராதனையைப் பற்றியும் தூஷித்துப் பேசியதாகவும், அவர் பேச்சைக் கேட்டு ஜஸ்டிஸ் கட்சியினர் ஆனந்தங் கொண்டதாகவும், இத்தகைய கிறிஸ்தவ மதப் பிரசாரம் செய்ய ஸ்ரீமான் ஆரியா தங்களோடு காங்கிரசிலிருந்த காலத்தில் தைரியங் கொள்ளவில்லையென்றும், இந்து மதத்தை ரட்சிக்கு முகத்தான் எச்சரிக்கை செய்திருக்கிறான். இக் குறிப்பில் அயோக்கியத்தனமும் சூழ்ச்சியும் ததும்பி வடிகிறது. யோக்கியமானவன் ஆரியாவின் பேச்சுக்களை முற்றிலும் பிரசு ரித்து, தகுந்த ஆதாரத்தோடு கண்டித்திருப்பான். அவ்வாறின்றி “தூஷித்தார், மதப் பிரசாரம் செய்தார், ஆனந்தங் கொண்டனர், சட்டிக் கூழுக்கு மதத்தைப் புறக்கணித்தது யார்?’’ என்று எழுதி பொதுவாகக் கிறிஸ்தவ மதத்தின் பேரிலும், சிறப்பாக ஆரியாவின் பேரிலும் பொது மக்களி டையே துவே ஷத்தை விளைவிக்கப் பார்ப்பது எவ்வளவு அயோக்யத் தனமும் சூழ்ச்சி...

மற்ற மகாநாடுகள் 0

மற்ற மகாநாடுகள்

ஆசாரத் திருத்த மகாநாடு இதற்கு ஸ்ரீமான் கே. நடராஜன் அக்கிராசனாதிபதி – இவர் வாயால் வெகு வேகமாகப் பேசிவிட்டு காரியத்தில் ஒன்றும் செய்யக் கூடாது என்பதையே கருத்தில் வைத்துத் தலைமை உபன்யாசம் செய்தார். இம்மகா நாட்டுக்கு காரியதரிசி ஸ்ரீ கந்தசாமி செட்டியார். இவர் ஜஸ்டிஸ் கட்சியையும் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கத்தையும் சேர்ந்தவர்கள் ஆசாரத் திருத்த மகாநாட்டுக்குப் பிரதிநிதிகளாக வரக்கூடாது என்றும், மீறி வந்தால் அவர் களுக்குப் பிரதிநிதிச் சீட்டு கொடுக்கமுடியாது என்றும் காரிய தரிசி ஹோதா வில் எழுதிவிட்டார். அக்கடிதம் சமீபத்தில் பிரசுரமாகும். மகாநாட்டுக்குச் சென்ற ஸ்ரீமான் ஆரியா அவர்களை பார்ப்பனர்கள் அவமானப்படுத்தினார்கள் – இதை கண்டிக்க அக்கிராசனாதிபதிக்கு சக்தியோ சௌகரியமோ சம்மதமோ இல்லாமல் போனதோடு தந்திரமாக சமா தானம் சொல்ல முன்வந்தார். சமஸ்தானப் பிரஜைகள் மகாநாடு இதற்கு ஸ்ரீ. சீனிவாசய்யங்கார் தலைவர். ஸ்ரீமான். சத்தியமூர்த்தி உபசரணைத் தலைவர். இவர்கள் தீர்மானம் எழுதி ஓட்டு எண்ணாமலே நிறைவேறி விட்டதாக தீர்மானம் செய்தவர்கள்...

இந்து முஸ்லீம் சந்தேகத்தை ஒழிக்க வழியாம் “பயித்தியம் தெளிந்து போய்விட்டது                  உலக்கை எடு கோவணங் கட்ட” 0

இந்து முஸ்லீம் சந்தேகத்தை ஒழிக்க வழியாம் “பயித்தியம் தெளிந்து போய்விட்டது உலக்கை எடு கோவணங் கட்ட”

5. 7. 26 – தேதி ‘மித்திரன்’ தன் தலையங்கத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு ஒரு புது வழி கண்டுபிடித்ததாக சாமர்த்தியம் காட்டி விஷச் சிரிப்பு சிரிக்கிறான். அதாவது, சட்டசபைகளிலோ மற்றும் பொது ஸ்தாபனங் களிலோ சமூக சம்பந்தமான பிரச்சினைகள் வரும்போது அந்தந்த சமூகத் தைச் சேர்ந்த அங்கத்தினர்களில் முக்கால் வாசிப்பேர் ஆnக்ஷபித்தால் அந்த பிரச்சினைகள் கொண்டு வரக்கூடாதாம். இந்த மாதிரி ஒரு தீர்மானம் செய்து விட்டதால் முஸ்லீம்களுக்கு பத்திரம் ஏற்பட்டு போய்விட்டதாம். இனி முஸ்லீம்கள் சுயராஜ்யக் கட்சியாரோடு இரண்டறக் கலந்துபோக வேண்டியது தானாம். இது “பைத்தியம் தெளிந்து போய்விட்டது, உலக்கை கொண்டு வா கோவணம் கட்டிக் கொள்ள” என்று ஒருவன் தனது பைத்தியம் தெளிந்து போனதற்கு அடையாளமாகப் பேசினது போல் இருக்கிறது. மகமதிய மெம்பர்களில் முக்கால் வாசிப்பேர் ஆnக்ஷபித்தால் இந்து முஸ்லீம் சம்பந்த மான பிரச்சினை சபைகளில் வரக்கூடாது என்பது சரிதான். உதாரணமாக, ஒரு முனிசிபாலிட்டியில் ஒரு பள்ளிவாசலை இடித்து...

பார்ப்பனப் பத்திரிகைகள் 0

பார்ப்பனப் பத்திரிகைகள்

நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளும் பார்ப்பனப் பத்திராதி பர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரையும் திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ‘ராஜரிஷீ’ ‘பிர்ம ரிஷீ’ என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும். இப்பேர்ப்பட்ட இருவர்களையும் இன்று என்னமாய் நடத்துகிறார் கள் என்று பார்த்தால் இவ்விரு கனவான்கள் எழுதியனுப்பிய ராஜினாமாக் களை சரியாய் தங்கள் பத்திரிகையில் போடவே இல்லை. எங்கோ ஒரு மூலை யில் ஒன்றரை அங்குலத்தில் பொது ஜனங்கள் ராஜினாமாவின் முழுக் காரியங்களையும் அறியாதபடி போட்டிருக்கிறது. இவர்கள் ராஜினாமாவை மதித்ததாகக்கூட காட்டவில்லை. வேறு ஏதாவது உபசார வார்த்தைகூட எழுதவில்லை. ஒரு வயிற்றுச் சோத்து பார்ப்பனன் ஒரு உத்தியோகத்திலும் இல்லாமல் வெறும் ராஜினாமா அனுப்பியிருந்தால் அதை மகாத்மா காந்தியிடம் கொண்டுபோய் இந்தத் தலைவர் போய்விட்டால் தமிழ்நாடே முழுகிவிடும் என்று சொல்லி மகாத்மாவையே ராஜி செய்யச் சொல்லி ராஜினாமா கொடுத்த தாலேயே அவனை பெரிய தலைவராக்கி விடுவார்கள்....

காங்கிரஸ் என்னும் ஏமாற்றுந்திருவிழாவின் முடிவு 0

காங்கிரஸ் என்னும் ஏமாற்றுந்திருவிழாவின் முடிவு

சென்ற வாரம் சென்னையில் ஏமாற்றுந் திருவிழா என்பதாகப் பெயரிட்டு, தலையங்க மெழுதியிருந்தோம். இவ்வாரம் அத்திருவிழா முடிந்து விட்டதால் அதைப்பற்றி சிலவார்த்தைகள் கூறுவோம் நாம் சென்ற வாரம் கூறியபடியே காங்கிரஸ் என்பது பாமர மக்களை படித்த கூட்டத்தார் ஏமாற்றுவதற்கென்று ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனம் என்றும், அதிலும் அப்படித்த கூட்டத்தார் என்பதில் முக்கியமானவர்கள் நமது தென்னாட்டுப் பார்ப்பனர்களே என்றும் அவர்கள் இஷ்டப்படியெல்லாம் ஏறக்குறைய காங்கிரஸ் ஆரம்பமான காலம் முதற் கொண்டு ஆட்டப்பட்டு வந்திருக்கின்றது என்றும், காங்கிரஸ் என்பதாக ஒன்று நமது நாட்டில் ஏற்பட்ட பிறகே, மக்களின் ஒற்றுமை குலையவும், ஒழுக்கங்கெடவும், ஏழை மக்களுக்குப் பலவழிகளிலும் கஷ்டம் ஏற்படவுமான காரியங்கள் ஏற்பட்டுக் கொண்டு வருகின்ற தென்றும் எழுதி வந்திருக்கின்றோம். நிற்க, இவ்வருஷம் சென்னையில் நடந்த காங்கிரசானது, காங்கிரசையும், பார்ப்பனர்களையும் பற்றி நாம் இவ்வளவு காலம் எழுதி வந்ததையும், பேசி வந்தததையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் மெய்ப்பித்து விட்டது என்றே சொல்லுவோம். இக்காங்கிரசில் நிறைவேற்றி இருக்கும் தீர்மானங்கள்...

எதிர்பார்த்த வண்ணமே! 0

எதிர்பார்த்த வண்ணமே!

நாம் எதிர்பார்த்த வண்ணமே திருவாளர் திரு. வி.கலியாணசுந்தர முதலியாரவர்களும் காங்கிரஸ் காரியக் கமிட்டியிலிருந்த தன் தொடர்பை விலக்கிக் கொண்டார். “இது முடிந்த மொழியன்றி மீண்டு முன்னு மொழி யன்று” என்னும் சொற்களால் இனி மீண்டும் புனராலோசனை செய்வதில்லை எனவும் கூறிவிட்டார். இவரது இராஜினாமாவைப் பிரிதொரு பக்கம் பிரசுரித்துள்ளோம். டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரவர்களும் திரு. முதலியாரவர்கட்கு முன்னரே விலகி விட்டார். அவரும் இனி புனராலோசனை செய்ய முடியாது என்பதாக தமிழ் நாடு காங்கிரஸ் நிர்வாகக் கூட்டமும் பொதுக் கூட்டமும் நிகழ்ந்த 29-ந் தேதியில் தலைவருக்குக் கிடைக்கும்படியும் அதைக் கூட்டத்தில் படித்துக் காட்டுமாறு கடிதம் அனுப்பியிருந்தும், நமது பார்ப்பனத் “தலைவர்” அதைப் படித்துக் காட்டாமலும் விஷயத்தையே வெளியிடா மலும் மூடிவைத்துவிட்டு புனராலோசனை செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக திருட்டுத் தீர்மானம் செய்து ஏமாற்றினார். திரு. முதலியார், திரு. நாயுடுகார் ஆகிய இருவரும் காங்கிரஸ் காரியக் கமிட்டியினின்று விலகியே விட்டார்கள். இதன் தத்துவம் என்ன? இது போழ்து இவர்களுக்கு...

0

தமிழினப் படுகொலைக்கு நீதி வழங்கிட பன்னாட்டுப் பொறிமுறையன்றி வேறேதும் ஏற்றிடோம்!

தமிழினப் படுகொலைக்கு நீதி வழங்கிட பன்னாட்டுப் பொறிமுறையன்றி வேறேதும் ஏற்றிடோம்! திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை, இளந்தமிழகம் இயக்கம் ஆகியவற்றின் கூட்டறிக்கை துருக்கி நாட்டின் கோஸ் தீவில் போட்றம் கடற்கரையில் மூன்று வயதுச் சிறுவன் அயலன் சடலமாக ஒதுங்கிய நிழற்படம் ‘கரையொதுங்கிய மானிடம்’ என்ற தலைப்புடன் இணையத்தில் உலவி ஐரோப்பியர்களை உலுக்கிப் போட்டுள்ளது. அம்மக்கள் குற்றஞ்சுமந்த இதயத்துடன் ஏதிலியர்களை இருகை நீட்டி வரவேற்று அரவணைக்க முன்வந்துள்ளனர். ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 2 முடிய நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் நடைபெற்ற அமர்வில் நடைமுறையில் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழி செய்யும்படியான கூறுகளுடன் ஒரு தீர்மானம் அம்மன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய மனித உரிமை மன்ற ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் புலனாய்வுக் குழுவையும், மார்த்தி அத்திசாரி (பின்லாந்து), சில்லிய காட்ரிட் (நியூ சிலாந்து), அசுமா...

மன்னையில் செங்கொடி நினைவு நாள் 0

மன்னையில் செங்கொடி நினைவு நாள்

திராவிடர் விடுதலைக்கழகம், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் சார்பில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனையை இரத்து செய்யக் கோரி கடந்த 2011ம் ஆண்டு தீக்குளித்து உயிர்நீத்த செங்கொடியின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் மன்னார்குடி பேருந்து நிலையம் முன்பு அனுசரிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மதிமுக நகர செயலாளர் சன்சரவணன், மாவட்ட பிரதிநிதி மீனாட்சி சுந்தரம், விடுதலை தமிழ்புலிகள் கட்சி ஆதவன், சிபிஎம்எல் மாவட்ட செயலாளர் மருத செல்வராஜ், பாமக மாவட்ட தலைவர் சீனி தனபாலன், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் பௌத்தன், திக நிர்வாகிகள் சந்திரபோ°, இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முரளி சங்கர். திவிக நிர்வாகிகள் சசிகுமார், கவிஞர் கலைபாரதி, நெடுவை வாசுதேவன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு செங்கொடியின் உருவப்படத்திற்கு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி...

ஜாதிய வன்கொடுமைகளைக் கண்டித்து மாணவர்கள் முழக்கம் 0

ஜாதிய வன்கொடுமைகளைக் கண்டித்து மாணவர்கள் முழக்கம்

23.8.2015 அன்று மாலை சென்னையில் கழக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ‘சமகால வாழ்வியலும் ஜாதிய வன்கொடுமை களும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தென்சென்னை திராவிடர் கழக இளைஞரணி தலைவர் செல்வேந்திரன், தமிழ்நாடு மாணவர் நடுவம் தலைவர் இளையராஜா, தமிழ் இளைஞா மாணவர் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.கே. பிரபாகரன், தமிழ்நாடு மாணவர் நடுவம் தலைவர் ஜோ. பிரிட்டோ, மாற்றம் மாணவர் இளையோர் இயக்கத் தலைவர் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு சாதியத்திற்கு எதிராக கருத்துரை வழங்கினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் வே. மதிமாறன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். நிகழ்ச்சி மாலை 5.30 முதல் 9 மணி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சிதம்பரம் மதன்குமார் வரவேற்புரை வழங்கினார். செயப்பிரகாசு நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும், சிறப்பாக...

0

காஞ்சி மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவு நாள்

மூன்று தமிழர்களை தூக்கிலிருந்து விடுவிக்க மரணதண்டனையை எதிர்த்து, தன்னைத்தானே தீக்கிரையாக்கிக் கொண்ட ‘தழல் ஈகி’ செங்கொடியின் நினைவு நாள் செப். 28. செங்கொடியின் பொது வாழ்வகமாகிய காஞ்சி மக்கள் மன்றம், அன்று செங்கொடியின் நினைவுநாளை செங்கொடியின் இலட்சியத் திருநாளாக பின்பற்றியது. வெகு மக்களும் இயக்கங்களும் சாரை சாரையாக அணி வகுத்து, செங்கொடி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து ஈழத் தமிழர் விடுதலைக்கும், மரணதண்டனை ஒழிப்புக்கும் சூளுரைத்தனர். பிற்பகல் 4 மணியிலிருந்து மக்கள் மன்றத்தின் கலைக் குழுவினர், ஜாதி, மத எதிர்ப்பு, ஈழ விடுதலை ஆதரவு ஈழப் போராளிகளின் வீரங்களைப் பறை சாற்றும் எழுச்சி இசை நிகழ்ச்சிகளை வழங்கினார். ‘ஜாதி-பெண்ணடிமை’ ஒழித்த சமத்துவபுரியாக விளங்கும் காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர்கள் வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கி அன்பைப் பரிமாறினர். காஞ்சி மக்கள் மன்றத்தின் அடுத்த இளைய தலைமுறை பறைகளை கையில் எடுத்தது; குழுக்களாக நடனமாடியது; பாடியது. மக்கள் தொண்டினை வாழ்க்கையாக்கிக் கொண்ட மன்றத்தின் செங்கொடி...

மதிப்பு என்பது.. 0

மதிப்பு என்பது..

ஓட்டல்காரன் அன்னதானப் பிரபு ஆவானா? சம்பள உபாத்தியாயர் குருநாதனாவானா? தாசி காதலியாவாளா? என்பதுபோலதான் தன் தன் நலனுக்கு, தன் தன் பொறுப்புக்கு ஆக காரியம் செய்யும் எவனுடைய காரியம் எப்படிப்பட்ட தாயினும் அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழிய போற்றக் கூடியதாகாது. அப்படியில்லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் அதாவது தன்னைப் பற்றிய கவலையில்லாமல், பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துக் கொண்டு தொண்டாற்றுகிறவன் மதிக்கப்பட்டே தீருவான். அத்தொண்டால் பாதக மடையும் தனிப்பட்டவர்கள் தனிப்பட்ட வகுப்புகள், கும்பல்கள் அவனை மதிக்காமல் இருக்கலாம்; அவமதிக்கலாம். அது, பொதுவாக மதிக்காததாகாது. பெரியார், ‘விடுதலை’ – 08.04.1950 பெரியார் முழக்கம் 10092015 இதழ்

பேராசிரியர் இராமு மணிவண்ணனுக்கு ஆதரவாக பல்கலை முற்றுகை: கழக மாணவர்கள் கைது 0

பேராசிரியர் இராமு மணிவண்ணனுக்கு ஆதரவாக பல்கலை முற்றுகை: கழக மாணவர்கள் கைது

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் அமைப்பாளர் பாரி. சிவா தலைமையில் 4.9.2015 அன்று மாலை 3.30 மணிக்கு பேராசிரியர் இராமு. மணிவண்ணன் அவர்களை மீண்டும் துறைத் தலைவர் பணியில் அமர்த்தவும், இடை நீக்கம் செய்யப்பட்ட 10 மாணவர்களை உடனடியாக பல்கலையில் அனுமதிக்கவும வலியுறுத்தி, தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் சென்னைப் பல்கலைக்கழகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தோழர்கள் பல்கலைக்கழகத்தைக் கண்டித்து முழக்கம் எழுப்பியபடி நேப்பியர் பாலத்திலிருந்து முற்றுகையிட சென்றபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 30 மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு மாணவர் கழகம் பிரகாசு, விஜயகுமார், செங்கல்பட்டு சட்ட கல்லூரி மாணவர் திருநாவுக்கரசு, பிரதிப், அருண், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மாரிமுத்து, பிரகாசு, விழுப்புரம் அய்யனார், மாவட்ட செயலாளர் இரா. உமாபதி உள்ளிட்ட தோழர்கள் கைதானார்கள். பெரியார் முழக்கம் 10092015 இதழ்

சாகித்ய அகாடமி விருதை திருப்பி அனுப்பினார்! 0

சாகித்ய அகாடமி விருதை திருப்பி அனுப்பினார்!

பிரபல கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொலை செய்யப்பட்டது, நாடு முழுவதும் படைப்பாளிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ் தான் பெற்ற அகாடமி விருதை மீண்டும் அரசிடம் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளார். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவிப் பேராசிரியரான இவர், தன்னுடைய முடிவை தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அவர் தனக்கு அளிக்கப்பட்ட விருதுடன், ரூ.1 இலட்சம் ரொக்கப் பரிசையும் திருப்பி அளிக்க உள்ளதாகக் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறும்போது, “இந்த முடிவு பற்றி வேறு எந்த எழுத்தாளர்களுடனும் நான் விவாதிக்கவில்லை. இது முழுக்க முழுக்க நானே எடுத்த முடிவு. கல்புர்கியின் கொலைக்கு இந்துத்துவ சக்திகளே காரணம். இந்தச் சம்பவம் என்னை உலுக்கியிருக்கிறது. இப்போது நான் மவுனித்திருக்கக் கூடிய நேரம் கிடையாது. மவுனம் இதுபோன்ற நடவடிக்கைகளை இன்னும் அதிகரிக்கவே செய்யும்” என்றார். 2010-2011ஆம் ஆண்டு...

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்!  இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்!” 0

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்!”

ஏன் இந்த முழக்கம்? எதற்காக இந்த பரப்புரை? இதோ நமது இளைய தலைமுறையின் கவனத்துக்கு சில சிந்தனைகளை முன் வைக்கிறோம். தமிழர்களாகிய நாம், தாழ்த்தப்பட்ட ஜாதிகளாக பிற்படுத்தப்பட்ட ஜாதிகளாக எப்போது ஆனோம்? நமது பாட்டன், முப்பாட்டன் காலங்களில் நாம் எப்படி வாழ்ந்தோம்? பார்ப்பனருக்கும், பண்ணையார்களுக்கும் அடிமைகளாகக் கிடந்தார்கள் நமது முன்னோர்கள். அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. உழைப்பு, அடிமை வேலை, குலத்தொழில் – இவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்பது அன்று சமுதாயம் விதித்த கறாரானக் கட்டளை. ஜாதியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த இழிவுகளை எப்படித் தகர்த்தோம்? ஜாதியத்தை எதிர்த்த பெரியாரும் அம்பேத்கரும் போராடிப் பெற்றுத் தந்த கல்வி, வேலை வாய்ப்புகளுக்கான உரிமைகளைப் பெற்றதால் தகர்த்தோம். இந்த இடஒதுக்கீடுகளை அமுல்படுத்துவதில் – காமராசர் ஆட்சியில் தொடங்கி, தமிழகத்தில் தொடர்ந்து, அதிகாரத்துக்கு வந்த ‘திராவிட’ கட்சிகள் ஆர்வம் காட்டின; அடைக்கப்பட்ட கல்விக் கதவுகள் திறந்தன; படித்தோம்; சுயமரியாதைப் பெற்றோம். ‘ஜாதி’யைக் காட்டி, ‘...

கோழைகளின் மிரட்டலுக்கு  அஞ்ச மாட்டோம்: பகுத்தறிவாளர்கள் உறுதி 0

கோழைகளின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்: பகுத்தறிவாளர்கள் உறுதி

“எங்கள் உயிரைப் பறித்தாலும், பகுத்தறிவு கொள்கைகளைத் தடுத்து நிறுத்த முடியாது” என்று பகுத்தறிவாளர்கள் உறுதியுடன் பதிலடி தந்தள்ளனர். கருநாடக மாநிலத்தின் தலைசிறந்த சிந்தனை யாளர், மூடநம்பிக்கை எதிர்ப்பாளர், முன்னாள் துணைவேந்தர் எம்.எம். கல்புர்கி, தார்வாரில் அவரது இல்லத்தில் மதவெறி சக்திகளால் சுட்டுக் கொல்லப் பட்டவுடன் அடுத்த சில மணி நேரங்களிலேயே புவித் ஷெட்டி என்ற பஜ்ரங் தளத்தைச் சார்ந்த ஒரு மதவெறியன், “இந்து மதத்தை எதிர்த்தால் அதற்கு இதுதான் தண்டனை. இனி அடுத்த இலக்கு – மைசூர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர், கே.எஸ்.பகவான்” என்று ‘டிவிட்டர்’ தளத்தில் பதிவேற்றினான். அந்த ஆசாமியை கைது செய்து, கருநாடக சிறையில் அடைத்த அதே நாளில், நீதிமன்றம் பிணை வழங்கிவிட்டது. இந்த மிரட்டலுக்கு கே.எஸ். பகவான் அளித்த பேட்டி, ‘இந்துஸ்தான் டைம்ஸ்’, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடுகளில் வெளி வந்திருக்கிறது. “அந்த இளைஞர் தவறாக வழி நடத்தப்படுகிறார். ஆசிரியர்களோ, பெற்றோர்களோ அவரை சரியாக வழி நடத்தவில்லை....

அறிவியல் போர்வையில் புதிய மோசடி 0

அறிவியல் போர்வையில் புதிய மோசடி

நவீன மூடநம்பிக்கைகள் இப்போது அறிவியல் பெயரில் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று, ‘நடு மூளை செயலாக்கம்’  (மிட் பிரைன் ஆக்டிவேஷன்) என்ற பெயரில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டெல்லி, பம்பாய் நகரங்களைத் தொடர்ந்து இப்போது சென்னையிலும் இது பரவி வருகிறது. மனித மூளையின் இடப்பகுதி, வலப்பகுதி இரண்டுக்கும் இடையில் உள்ள நடுமூளைப் பகுதியைத் தீவிரமாக இயக்கினால், அது செயல்படும்போது கண்களை மூடிக்கொண்டு கூட படிக்கலாம்; படித்தவை நன்றாக பதியும். தேர்வுகளில், போட்டிகளில் குழந்தைகள் சாதனை படைப்பாளர்கள் என்ற ஒரு நம்பிக்கை பரப்பப்பட்டு, இதற்காக 10 நாள் பயிற்சி, 15 நாள் பயிற்சி என்ற மய்யங்கள் உருவாகி வருகின்றன. குழந்தைகளின் படிப்புக்காக எதை வேண்டு மானாலும் செய்யத் தயாராக இருக்கும் பெற்றோர்கள் ரூ.25000 வரை கட்டணம் செலுத்தி இந்த மய்யங்களில் சேர்க்கிறார்கள். சென்னையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய நிகழ்வில் பேசிய பகுத்தறிவாளர் பேராசிரியர் நரேந்திர நாயக், ‘இந்த மய்யங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு...

இனியும் ஆதாரம் வேண்டுமா? 0

இனியும் ஆதாரம் வேண்டுமா?

சட்டசபைத் தேர்தலுக்குப் பார்ப்பன ஆதிக்கத்திற்கென சுயராஜ்யக் கட்சியின் சார்பாக காங்கிரசின் பெயரால் ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்கார் கம்பெனியார் நிறுத்தும் அபேக்ஷகர்களைப் பற்றி அப்போதைக்கப்போது எழுதி வந்திருக்கிறோம். அவற்றுள் ஒரு சந்தர்ப்பத்தில் “ஜில்லாவிற்கு இரண் டொரு பார்ப்பனரல்லாதாரை நிறுத்தி பொது ஜனங்களுக்குப் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார் பெயரைத் தெரியும்படியாகச் செய்து கடைசியில் ஒவ்வொரு ஜில்லாவிற்கும் ஒவ்வொரு பார்ப்பனர் பெயரைப் போட்டுவிட் டார்கள்” என்று எழுதியிருந்தோம். அது இப்போது நிஜமாகவே போய் விட்டது. திருநெல்வேலி ஜில்லாவிற்கு ஒரு பார்ப்பனர் பெயரை நுழைத் தார்கள். அது ஸ்ரீமான் சாது கணபதி பந்துலுவின் பெயரேயாகும். மதுரை ஜில்லாவிற்கு இப்போது இரண்டு பார்ப்பனர்களை நிறுத்தத் தீர்மானித்து விட்டார்கள். அதாவது, ஸ்ரீமான் முத்துராமலிங்கய்யரை ஒரு ஸ்தானத்திற்கு. மற்றொரு ஸ்தானத்திற்கு இப்பொழுதுதான் மெள்ள வேறொரு பார்ப்பனர் தலையை நீட்டப்படுகிறது. அதாவது, ஸ்ரீ கே. ஆர். வெங்கட்டராமய்யரேயா கும். திருச்சி ஜில்லாவிற்கும் ஒரு பார்ப்பனர் பெயர் நுழைந்து விட்டது. இன்னும் மற்றொரு ஆசாமியின் பெயரும்...

டாக்டர் கிச்சுலுவின் உபதேசம் முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது           நிர்மாண திட்டத்தால்தான் ஒற்றுமை ஏற்படும் 0

டாக்டர் கிச்சுலுவின் உபதேசம் முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது நிர்மாண திட்டத்தால்தான் ஒற்றுமை ஏற்படும்

டாக்டர் கிச்சுலு கல்கத்தா இந்து முஸ்லீம் கலவரத்தைப் பற்றி சமா தானம் செய்யப் பிரசாரம் செய்வதில் மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். 1. “இந்து முஸ்லீம் இருவரும் நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்ற வேலை செய்தாலொழிய ஒற்றுமை என்பது ஏற்பட முடியவே முடியாது”. 2. “முஸ்லீம்கள் கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்”. 3. “முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது”. என்று பேசியிருக்கிறார். ( இது 5.7.26 ² ‘மித்திரன்’ 4 – வது பக்கம் 5 – வது கலத்தில் காணப்படுகிறது) இப்படியிருக்க, டாக்டர் கிச்சுலு அப்படிச் சொன்னார், இப்படிச் சொன்னார், மகமதியர்களை காங்கிரசில் சேரச் சொன் னார் என்று எழுதுவதின் பொருள் என்ன? பாமர மக்களை ஏமாற்றுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது ராஜதந்திரமாய்ப் போய் விட்டது. ஒன்றா நிர்மாணத்திட்டம் அல்லது வகுப்புக் கட்டுப்பாடு; இரண்டி லொன்றுக்கு உழைக்க வேண்டுமே அல்லாமல் ஒரு வகுப்பை அழுத்தி, ஒரு வகுப்பு ஆதிக்கம் செலுத்த...

இந்து முஸ்லீம் அபிப்பிராய பேதங்களும் கலகங்களும் ஏற்படக் காரணம் என்ன? 0

இந்து முஸ்லீம் அபிப்பிராய பேதங்களும் கலகங்களும் ஏற்படக் காரணம் என்ன?

தேசத்தின் விடுதலைக்காகவென்றும் சுதந்திரத்திற்காகவென்றும் படித்த வகுப்பார்களால் (பார்ப்பனர்களால்) கிளர்ச்சி ஏற்படும் போதெல்லாம் இந்து முஸ்லீம் கலவரங்களும் அபிப்பிராய பேதங்களும் ஏற்படாமலிருப்ப தில்லை. ஆனால் மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் ஏற்பட்டிருந்த ஒத்துழையாமையின்போது மாத்திரம் கலவரமும் அபிப்பிராய பேதமும் இல்லாமல் இருந்ததோடல்லாமல் நாம் அறிய இதுவரை நமது நாட்டில் ஏற்பட் டிராத இந்து முஸ்லீம் பரஸ்பர நம்பிக்கையும் அபிப்பிராய பேத மின்மையும் ஒற்றுமையும் சகோதரத் தன்மையும் தலைசிறந்து விளங்கிற்று. ஆனால் இதற்கு சில பொறுப்பற்றவர்கள், அது சமயம் மகமதியர் களுக்குக் கிலாபத் சங்கடம் இருந்ததால் அவர்கள் இந்துக்களோடு ஒத்திருந் தார்கள் என்ற உள் எண்ணம் கற்பிக்கிறார்கள். அதற்கு ஒரு சிறிதும் ஆதார மில்லை என்றே சொல்லுவோம். ஒத்துழையாமை மகாத்மாவினால் அமுலில் ஆரம்பிக்கும் காலத்திலேயே கிலாபத்து விஷயம் பெரும்பாலும் முடிவ டைந்து விட்டது. அதோடு துருக்கி நாட்டில் கமால் பாஷாவின் ஆதிக்கம் ஏற்பட்ட தும் கிலாபத்து விஷயம் வெளிநாட்டு மகமதியர்களால் கைவிடப்பட்டும் போய் விட்டது....

“தமிழன்” 0

“தமிழன்”

முன்னர் காலஞ்சென்ற திரு. அயோத்திதாஸ் பண்டிதரவர்களால் ‘‘தமிழன்’’ என்னும் பெயர் கொண்ட பத்திரிகை நடாத்தப் பெற்று அவர் காலத்திற்குப் பின்னர் அப் பத்திரிகை நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. பிறகு சில காலம் மற்றொருவரால் நடாத்தப் பெற்றது. அதன் பிறகும் ஆதரிப்பா ரற்று நின்று போயிற்று. மீண்டும் இப்பொழுது சாம்பியன் ரீப்ஸ், கோலார் தங்கவயல் சித்தார்த்த புத்தகசாலை வைத்திருக்கும் திரு. பி. எம். இராஜ ரத்தினம் அவர்களால் ஜுலை மாத முதல் வெளியிடப்படுமென தெரிவிக் கப்படுகிறோம். திரு. இராஜரத்தினம் அவர்களின் நிர்வாகத் திறமையால் நன்கு நடைபெறுமென நம்புகிறோம். குடி அரசு – செய்திக் குறிப்பு – 04.07.1926

திரு. சக்கரையும் திரு. ஆரியாவும் – சித்திரபுத்திரன் 0

திரு. சக்கரையும் திரு. ஆரியாவும் – சித்திரபுத்திரன்

திரு. சக்கரைச் செட்டியார் அவர்கள் ஹிந்துவாயிருந்து கிறிஸ்துவராக மதம் மாறியவர்; அவர் சென்னை திருவாளர்கள் ஒ. தணிகாசலம் செட்டியார், ஒ.கந்தசாமி செட்டியார் ஆகியவர்களுக்கு நெருங்கின உறவினராயிருந்தவர். பி.ஏ.,பி.எல்.,பட்டம் பெற்ற வக்கீல். 1906-ல் அதாவது ஏறக்குறைய 20 வருஷங் களுக்கு முன்னிருந்தே அரசியல் துறையில் இறங்கினவர். வங்காளப் பிரிவினையின் காரணமாக இந்தியா வெங்கும் ஏற்பட்ட “சுதேசி”க் கிளர்ச்சி யின் போதே திரு. சக்கரைச் செட்டியாரும் திரு. சுரேந்திரநாத் ஆரியாவும் சென்னை மாகாணத்தில் – தமிழ்நாட்டில் – மேடை மீதேறி தைரியமாய்ப் பிரசங்கம் செய்த பார்ப்பனரல்லாத வீரர்கள். தேசத்தின் உழைப்பிற்காகவும், உழைத்ததின் பலனாகவும், தங்கள் தங்கள் வரும்படிகளை விட்டவர்கள். உண்மைத் தேசாபிமானம் என்பது இவ்விரு கனவான்களுக்கும் இல்லா திருந்து பார்ப்பனர்கள் போலும் மற்றும் இரண்டொரு பார்ப்பனரல்லாதாரைப் போலும் வயிற்றுப் பிழைப்பு தேசாபிமானிகளா யிருந்திருந்தால் திரு. சக்கரைச் செட்டியார் வயிற்றுப் பிழைப்பு தேசாபிமானத்தால் ஜட்ஜி ஸ்தானம் பெற்ற பார்ப்பனர்களுக்கு முன்னாலேயே, ஹைக்கோர்ட் ஜட்ஜியாக இருப் பார்....

“சுதேசமித்திர”னின் பித்தலாட்டம் 0

“சுதேசமித்திர”னின் பித்தலாட்டம்

சென்ற இதழ் ‘குடி அரசி’ல் திரு.டி.எ. இராமலிங்கம் செட்டியார் அவர்கள் சுயராஜ்யக் கட்சியிலிருந்து விலகுகிறார் என்பதாக வரைந்திருந்த விஷயத்தை வாசகர்கள் கண்ணுற்றிருக்கலாம். அதைப் பார்த்தவுடன் பார்ப்ப னர் கக்ஷியாய சுயராஜ்யக் கட்சிக்குப் பேராபத்து வந்து விட்டதெனக் கருதி “குடி அரசின் கட்டுக்கதை – ஸ்ரீமான் இராமலிங்க செட்டியாரின் மறுப்பு” என்ற தலைப்பில் ‘சுதேசமித்திரன்’ ஒரு மறுப்பு எழுதியிருக்கிறது. அதில் திரு.டி.எ. இராமலிங்கம் செட்டியாரவர்கள் ‘மித்திரன்’ நிரூபரி டம் கூறுவதாக எழுதியிருக்கும் விஷயங்களைக் கவனித்துப் பார்த்தால் ‘குடி அரசு’ விஷயம் கட்டுக்கதையா, ‘சுதேசமித்திரன்’ விஷயம் அயோக்கியத் தனமா என்பது புலனாகும். திரு. செட்டியார் மறுபடி கூறுவதாவது:- “என்னுடைய அபிப்பிராயம் எதுவும் மாறவில்லை. நான் சுயராஜ்யக் கட்சி அங்கத்தினராக இருந்ததே இல்லை. ‘பார்ப்பன ரல்லாத கட்சி’ என்பது ஜஸ்டிஸ் கட்சியைக் குறிப்பிடுவதானால் அதன் சார்பாக நான் தேர்தலுக்கு நிற்கப் போவதாக எவரிடமும் சொல்லவே யில்லை. உத்தியோகங்களை ஏற்றுக் கொள்ளுவதன் சம்பந்தமாக நான் எவ்வித அபிப்பிராயம்...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 0

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

சென்னையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் வீட்டில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகக் கூட்டத்தின் நடவடிக்கைகள் இவ்வாரப் பத்திரிகைகளில் வெளியானதை நண்பர்கள் வாசித்திருக்கலாம்.  ஆனால் அதில் நடந்த விஷயங்களை ஒவ்வொரு பத்திரிகை ஒவ்வொரு விதமாய் தத்தம் சௌகரி யப்படி பிரசுரித்திருக்கின்றன. ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியாரின் தீர்மானமானது ஒரே அடியாய் தூக்கி அடிக்கப்பட்டு உயிர் வாங்கப்பட்டுப் போயிற்று, அதாவது ‘‘காங்கி ரசால் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட அபேக்ஷகர்கள் பட்டதாரியாகவாவது அரசாங்க நியமனம் பெற்றவர்களாகவாவது இருப்பரேல், பட்டத்தையும் நியமனத்தையும் விட்டுவிடும்படியும் கதருடையில் பற்றுக் கொள்ளும் படியும் தீர்மானிக்கிறது’’ என்பதே ஸ்ரீமான் முதலியார் தீர்மானத்தின் தத்துவம்.  அப்படியிருக்க திருத்தப் பிரேரேபணையாக ஸ்ரீமான் சத்திய மூர்த்தியால் இம்மாதிரி தீர்மானமே கொண்டுவர ஒழுங்கில்லையென்றும், ஆனால் ஸ்ரீமான் முதலியார் தங்களுக்கு ஓட்டுப் பிரசாரம் செய்யவும் முதலியார் பெயரை விற்று தாங்கள் ஓட்டுப் பெறவும் அவருடைய தயவு வேண்டியிருப்பதால் அவரை ஏமாற்று முகத்தான் ஏதாவது சமாதானம் சொல்ல வேண்டுமே யென்றும், இல்லாவிட்டால் முதலியார் தனக்கு ஏதாவது...

சட்டசபையை விட்டு வெளிவந்த               ‘வீரர்’களின் செய்கை 0

சட்டசபையை விட்டு வெளிவந்த               ‘வீரர்’களின் செய்கை

சட்டசபையில் ஒரு பலனும் இல்லை என்றும், சட்டசபையிலிருந்து கொண்டு சர்க்காரை எவ்வளவு கெஞ்சிக் கூத்தாடியும் சர்க்கார் மனம் கொஞ்ச மாவது இளகவில்லை என்றும், ஆதலால் இனி சட்ட சபையிலிருப்பது அவ மானம் என்றும், இந்த சர்க்காரின் யோக்கியதையை எடுத்து வெளியில் சொல்லப் போகிறோம் என்றும் வீரப்பிரதாபம் பேசிவிட்டு வெளியில் வந்த ‘வீரர்கள், என்ன செய்கிறார்களென்று பார்த்தால், மறுபடியும் சட்டசபைக்குப் போக ஓட்டர்களிடம் போய் எங்களை சட்டசபைக்கு அனுப்பினால் நாங்கள் உங்களுக்கு சாதித்து விடுகிறோம் என்று ஓட்டுப் பிச்சை எடுத்துக் கொண்டு திரிகிறார்கள். இம்மட்டோடு நிற்கிறார்களா வென்று  பார்த்தால், வீரப்பிரதாபம் பேசி, விட்டு விட்டு வந்த சட்டசபைக்கு அடுத்த கூட்டத்திற்கே போகிறார்கள். ஒரு கூட்டத்தின் பிரயாணப் படியை வாங்காமல் இருப்பதற்கு நமது ‘வீரர்(?)’ களுக்கு மனம் வரவில்லை. இதை அறிந்து “அகில இந்திய ஒப்பற்ற தலைவர்(?)” திரு. சீனிவாசய்யங்கார் போகும்படி உத்திரவு கொடுத்துவிட்டார்; அகில இந்திய காங்கிரஸ் காரியதரிசி திரு. எ.ரெங்கசாமி ஐயங்கார்...

முஸ்லீம்கள்  “சுதேசமித்திர”னும் “ஸைபுல் இஸ்லா”மும் 0

முஸ்லீம்கள் “சுதேசமித்திர”னும் “ஸைபுல் இஸ்லா”மும்

தென்னாட்டுப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை பொறுமையோடு ஜாக்கிரதையாய் கவனித்து வந்த “ஸைபுல் இஸ்லாம்” பத்திரிகையானது ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்களைப் போலும் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களைப் போலும் திடீரென்று ஒரு வெடிகுண்டைப் போட்டு விட்டது. அதாவது, “மாகாணச் சட்டசபைகள் இந்தியா சட்டசபைகள் முதலிய வற்றிற்கு முஸ்லீம் பிரதிநிதிகள் தங்களது சமூகத்தின் சார்பாக நிற்பது நலமா, அல்லது சுயராஜ்யக் கட்சியாரின் சார்பாக நிற்பது நலமா?”  என்றும் , திருச்சி மௌலானா ஸையத்  முர்த்தூஸா சாஹிபு அவர்கள், முதலில் சுயராஜ்யக் கட்சிக்கு எதிராக நின்று இந்தியா சட்டசபை ஸ்தானம் பெற்ற பிறகு சுயராஜ் யக் கட்சியில் சேர்ந்ததைப் பற்றியும், எல்லைப்புற முகமதியர்களுக்கு சீர்திருத்தம் வேண்டுமென்று மௌலானா தீர்மானம் கொண்டு வந்த காலத்தில் அதை சுயராஜ்யக் கட்சியார் எதிர்த்ததின் காரணமாய் சுயராஜ்யக் கட்சியை விட்டு விலக்கிக் கொள்ளும்படி மௌலானாவைக் கேட்டுக் கொண்டிருக்க இப்போது மறுபடியும் சுயராஜ்யக் கட்சியில் மௌலானா சேர்ந்திருப்பதின் காரணமென்ன வென்றும்  இம்மாதிரி சுயராஜ்யக்...

0

எனக்கு ‘வீர சொர்க்கத்தில்’ நம்பிக்கையில்லை – பெரியார்

பெரியார் சமதர்மக் கொள்கைகளை கைவிட்டார் என்று சுயமரியாதை இயக்கத்திலிருந்த பொது வுடைமையாளர்கள், ஜீவா என்றழைக்கப்பட்ட ஜீவானந்தம், சிங்காரவேலர் போன்றோர் பெரியார் மீது கடும் விமர்சனங்களை வைத்தனர். 1936ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட 5ஆவது சுயமரியாதை மாநாடு திருத்துறைப்பூண்டியில் நடந்தது. மாநாட்டில் ஜீவா, பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டு பெரியாரை விமர்சித்ததற்கு பதிலளித்து பெரியார் நிகழ்த்திய உரை இது. தோழர்களே! சுயமரியாதை இயக்கம் மிக நெருக்கடி யில் இருப்பதாகவும், சீக்கிரத்தில் செத்துப் போகும் என்றும் இங்கு சொல்லப்பட்டது. இயக்கம் ஒன்றும் நெருக்கடியில் இல்லை என்பது என் அபிப்பிராயம். சிலருக்கு, அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பை உத்தேசித்து அப்படித் தோன்றலாம். அதற்கு, நான் காது கொடுக்க முடியாது. இந்த இயக்கம் ஆரம்பித்த காலம் முதற்கொண்டு அனேகர் தங்கள் சுயநலத்துக்கு, சௌகரியமில்லாது கண்டு இது போலவேதான் இயக்கம் நெருக்கடியில் இருக்கிறது, செத்துப்போய் விட்டது என்று சொல்லிக்கொண்டே போய்விட்டவர்களும், வெளியில் போய்விட்ட பின்பும் அவர்களால் கூடுமானவரை தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருந்தவர்களும் இருக்கிறவர்களும் திரும்பி வந்தவர்களும் பலர் உண்டு....

பேராசிரியர் ஜெரோம் சாம்ராஜ் ஆய்வுரை நில உரிமைகளை பறித்தது ஜாதியமே 0

பேராசிரியர் ஜெரோம் சாம்ராஜ் ஆய்வுரை நில உரிமைகளை பறித்தது ஜாதியமே

நிலவுடைமைக்கு எதிரான போராட்டத்தின் வழியாகவே ஜாதியமைப்பை தகர்க்க முடியும் என்று மார்க்சிய லெனினிய தத்துவத்தை ஏற்றுக் கொண்ட சில இடதுசாரி அமைப்புகள் கூறி வருகின்றன. ஆனால், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை நில உரிமையை ஜாதியமைப்பே கட்டமைத்திருக்கிறது என்று புதுவை மத்திய பல்கலை பொருளியல் பேராசிரியர் ஜெரோம் சாம்ராஜ் கூறினார். தமிழகத்தில் ஜாதிக்கும் நிலவுரிமைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தியவர் ஜெரோம். சென்னை திருவான்மியூரில் பனுவல் நூலக அரங்கில் ‘புதிய தமிழ் ஆய்வுகள்’ என்ற அமைப்பின் நிகழ்வில் ஆக°டு 21ஆம் தேதி மாலை அவர் இது குறித்து விரிவான ஆய்வுரையை முன் வைத்தார். ஒருவரிடம் நிலம் இல்லை என்பதற்கான காரணமாக அவரது வறுமை சொல்லப்படுகிறது. அது உண்மையானால், பார்ப்பனர், வேளாளர் ஜாதி சமூகம் மட்டுமே நிலவுடைமை யாளர்களாக எப்படி மாற முடிந்தது? உண்மையில் வறுமை காரணமாக நில உரிமை கிடைக்காமல் போக வில்லை. நிலஉரிமை மறுக்கப்பட்டதால்தான் பார்ப்பன-வெள்ளாளர் அல்லாத மக்கள் குறிப்பாக...

மாவட்டப் பொறுப்பாளர்கள் 0

மாவட்டப் பொறுப்பாளர்கள்

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங் களில் கழகத் தலைவர் அறிவித்த மாவட்டப் கழகப் பொறுப்பாளர்கள். தருமபுரி மாவட்டம் தலைவர் – வெ. வேணு கோபால்; செயலாளர் – ம. பரம சிவம்; அமைப்பாளர் – அ. சந்தோஷ் குமார். தருமபுரி நகரம் : தலைவர் – கு. நாகராஜ்; செயலாளர் – அ. சுதந்திர குமார். அமைப்பாளர் : பெண்ணாகரம் ஒன்றியம் – எம்.பலராமன்; காரிமங்கலம் ஒன்றியம் – கோ. செந்தில்குமார்; நல்லம் பள்ளி ஒன்றியம் – எம். இராமதாசு. அறிவியல் மன்றம் : எஸ். வையாபுரி, சி. பிரியா. கிருட்டிணகிரி மாவட்டம் தலைவர் – தி. குமார், காவேரிப்பட்டினம்; செயலாளர்-கா. குமார், அலேசீபம்; அமைப்பாளர்-சிவ. மனோகரன்-காவேரிப் பட்டினம்; இராஜேஷ் – கிருட்டிணகிரி. மாவட்ட துணைத் தலைவர் : கிருஷ்ணன், நீலகிரி.  மாவட்ட துணைச் செயலாளர் : ப. வாஞ்சி நாதன். தமிழ்நாடு அறிவியல் மன்றம் : மூங்கப்பட்டி ஆசிரியர் சக்திவேல். காவேரிப்பட்டினம் ஒன்றியம்...

தலையங்கம் ஈழப் பிரச்சினையில் அமெரிக்காவின் துரோகம் 0

தலையங்கம் ஈழப் பிரச்சினையில் அமெரிக்காவின் துரோகம்

சிறீலங்காவில் இரண்டு பெரும் சிங்களர்களின் கட்சிகளான அய்க்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசு என்ற பெயரில் சிங்களப் பேரினவாத ஆட்சியை அமைத்து விட்டன. தமிழர்களின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர் பிரதேசத்தில் 16 இடங்களில் தேர்வு பெற்று நாடாளுமன்றம் சென்றாலும் தமிழரின் முக்கியத்துவம் திட்டமிட்டுக் குறைக்கப்பட்டு விட்டது. சிங்கள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து ‘போர்க் குற்றங்கள்’ தொடர்பாக இலங்கைக்கு எதிரான தனது நிலைப் பாட்டை அமெரிக்கா மாற்றிக் கொண்டு விட்டது. இலங்கை அரசின் ‘ஒப்புதல் கலந்தாலோசனை’யுடன் இலங்கை அரசே நடத்தும் உள் நாட்டு விசாரணையை மட்டுமே அய்.நா.வில் தீர்மானமாகக் கொண்டு வரப் போவதாக அமெரிக்காவின் தெற்காசிய நாடுகளுக்கான அதிகாரி நிஷா பி°வால் கூறியிருக்கிறார். (இவர் பிறப்பால் குஜராத்தி பனியா – அமெரிக்காவில் குடியேறியவர்) நடந்து முடிந்த இலங்கை தேர்தலில் எதிரும் புதிருமான சிங்களர் கட்சிகள் கைகோர்த்து ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இந்த அறிவிப்பையும் இணைத்துப்...

0

பட்டேல்கள் நடத்தும் கலவரம்:  இடஒதுக்கீட்டை ஒழிக்கும் சதி!

தற்போது முன்னேறிய வகுப்பில் உள்ள பட்டேல் இன மக்கள் தங்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் இணைத்து இட ஒதுக்கீட்டு உரிமையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி குஜராத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 22 வயது இளைஞரான ஹார்த்திக் பட்டேல் தலைமையில் பல இலட்சக்கணக்கான பட்டேல் இன மக்கள் திரண்டு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கையே பாதிக்கும் வகையில் தீவிரமான  போராட்டத்தை நடத்தி வருவது குறித்து ஊடகங்கள் நாள்தோறும் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. இந்த போராட்டம் குறித்த பல்வேறுவிதமாக கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது. இந்த போராட்டத்தை, அதன் போக்கை அந்த போராட்டத்தை முன்னெடுக்கும் தலைவரின் கருத்துக்களை கூர்ந்து நோக்குகையில் இந்த பட்டேல் இன மக்களின் போராட்டத்தின் நோக்கம் என்பது, இட ஒதுக்கீட்டு உரிமையை பெறுவதை விட இடஒதுக்கீட்டு உரிமையை முழுமையாக இரத்து செய்ய வைப்பதுதான் முதன்மையானதாக தெரிகிறது. போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் ஹார்த்திக் பட்டேல் தன்னுடைய பேட்டிகளில், “இட ஒதுக்கீடு எங்களுக்கும் வழங்க வேண்டும்,...

0

பகுத்தறிவாளர் கல்புர்கிக்கு வீர வணக்கம். கோழைகளின் வெறிச் செயலுக்கு கண்டனம்.

சீரிய பகுத்தறிவாளரும், முற்போக்கு எழுத்தாளர், மத மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து செயலாற்றி வந்த பேராசிரியர், எழுத்தாளர் முன்னாள் துணை வேந்தருமான கல்புர்கி, பார்ப்பன பாசிச இந்து மதவெறி கும்பல்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. கல்புர்கி 30.08.2015 ஞாயிறு காலை தன் வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவர் மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார். மூட நம்பிக்கைக்கு எதிராக கர்நாடக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தான் அடையாளப்படுத்தப்பட்ட லிங்காயத்து சமூகத்தின் பிற்போக்கு சிந்தனைகளை அவர் எதிர்த்தார். 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு லிங்காயத்துத் தலை வருக்கு ‘தெய்வீக அருள்’ இருப்பதாக கூறப் பட்டதை இலக்கிய-அறிவியல் சான்று களுடன் மறுத்தார். ‘விநாயகன்’ ஊர்வலத்தின் மத அரசியல் அம்பலப் படுத்தினார். மூடநம்பிக்கைக்கு எதிராக இவர் தொடர்ந்து பரப்புரை செய்ததால் மூட நம்பிக்கையை...

0

”சர்வதேச காணாமல் போனோர் தினம்” ஆர்ப்பாட்டம்

2015 ஆக.30ஆம் தேதி ‘காணாமல் போனோர் நாள்’ என்று அய்.நா. கடைபிடித்து வருகிறது. இதையொட்டி, ஈழத்தில் காணாமல் போன தமிழர்களின் கதி என்ன? இலங்கை அரசு இது குறித்து ஏன் மவுனம் சாதிக்கிறது என்ற கேள்வியை எழுப்பி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. அய்.நா. நிறுவனங்களில் ஒன்றான ‘யுனிசெப்’ அமைந்துள்ள அடையாறு காந்தி நகரில் 31ஆம் தேதி காலை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல் முருகன், தியாகு (தமிழ் தேசவிடுதலை இயக்கம்), ஆனந்தி சசிதரன் (இலங்கை வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்), பேராசிரியர் சரசுவதி (நாடு கடந்த தமிழீழ அரசு, தமிழக பொறுப்பாளர்), மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), லோகு ஐயப்பன் (புதுவை திராவிடர் விடுதலைக் கழகம்), கழகத் தோழர் தபசி. குமரன், இரா. உமாபதி (மாவட்ட செயலாளர்) மற்றும்...