ஈரோடு முனிசிபாலிடி கவனிக்குமா ?
வைத்திய உதவி இன்றைய நிலையில் ஈரோடு முனிசிபல் எல்லைக்குள்பட்ட ஜனங்க ளுக்கு பொது வைத்திய உதவி பொருப்புள்ளதாகவும், போதுமானதாகவும் இல்லை என்பதைக் குறிக்க வருந்தவேண்டியிருக்கின்றது. ஈரோட்டிலிருந்த முனிசிபல் ஆஸ்பத்திரியானது சுமார் 12-வருஷங்களுக்கு முன் சர்க்கார் ஆஸ்பத்திரியாக மாறின போது முனிசிபல் நிர்வாகத்தைவிட சர்க்கார் நிர்வாகம் சற்று மேலாகவே இருக்குமென்று ஜனங்கள் கருதினார்கள். அந்தப் படியே சில காலம் நடந்தும் வந்தது. ஆனால் நாளாக நாளாக அந்த ஆஸ்பத்திரிக்கு பொது ஜனங் களுடைய தயவைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்கின்ற மாதிரி யிலேயே அதன் மேலதிகாரிகளால் நடைபெற்று வருவதாய் காணப் படுகிறது. இதற்கு முக்கியகாரணம் சர்க்கார் நிர்வாகமேயாகும். ஈரோடு ஆஸ்பத் திரி டவுன் ஜனங்கள் 35000 பேருக்கும், சமீப சுற்றுப் பக்கத்து ஜனங் கள் சுமார் 20000 பேருக்குமாக 50000 பேருக்கு மேல் பயன்பட வேண்டிய தாய் இருந்து இவர்களில் பெரிதும் ஏழைமக்களுக்கு ஆகவே இந்த ஆஸ்பித் திரி இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட ஆஸ்பத்திரியில்...
