கோபியில் பெரியார் இயக்கங்கள் – தமிழர் அமைப்புகள் இணைந்து பெரியார் விழா; இளம்பிள்ளையில் ஜாதி ஒழிப்பு பரப்புரை; சேலம்-கோவை மாவட்டங்களில் பெரியார் விழா கழகத்தின் எழுச்சிப் பணிகள்

கோபிசெட்டிபாளையம் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கட்சியினர் கலந்துகொண்ட ஊர்வலம் தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி எழுச்சியுடன் நடைபெற்றது.
ஈரோடுமாவட்டம். கோபிசெட்டிபாளையம், தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக தமிழர் கூட்டமைப்பின் சார்பில் கொண்டாடிவருகின்றனர். இவ்வாண்டு தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழாவை திராவிடர் விடுதலைக்கழகம், திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மதிமுக, வி.சி.க, நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் ஒன்றிணைந்து தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பேரணியாக வந்து பெரியார்திடலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டன. பேரணி ல.கள்ளிப் பட்டியில் தொடங்கி கச்சேரிமேடு, எம்.ஜி.ஆர். சிலை, தினசரி மார்க்கெட் வீதி, கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக பெரியார் சிலை வந்தடைந்தது. பேரணியின் போது பெரியாரின் கொள்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும், பெரியாரின் கொள்கைகளை ஒலிபெருக்கி மூலம் எடுத்துரைத்தும் பேரணியாக வந்தனர். முன்னதாக பேரணியை காந்திமன்றத் தலைவர் பச்சியப்பன் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்பேரணியில் அனைத்து அமைப்பைச் சார்ந்த தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேட்டூரில் இரு சக்கர வாகனப் பேரணி
17.09.2015 தந்தை பெரியார் 137ஆவது பிறந்த நாளன்று சேலம் மேற்கு மாவட்ட கழக சார்பில் மேற்கு மாவட்டத் தலைவர் கு. சூரியகுமார் தலைமையில் செயலாளர் கோவிந்தராசு முன்னிலை யில் குஞ்சாண்டியூர் கோனூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தோழர்கள் கீழ்கண்ட ஊர்களுக்கு இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று கொடியேற்றினார்கள். தந்தை பெரியார் சிலைக்கு தோழர் சொக்கலிங்கம் மாலை அணிவித்தார். கொடியேற்றிய தோழர்கள் மற்றும் பகுதிகள். ஆ.சி பிளான்ட் – சக்திவேல், ராமன்நகர் – கொளத்தூர் குமார், சாம்பள்ளி – சொக்கலிங்கம், வைதீஸ்வரா – முரளி, என். எஸ்.கே. நகர் – சுகுமார், ஆர்.எஸ். படிப்பகம் – விவேக், கரி கையாளும் பகுதி- ராஜா, தங்கமாபுரி பட்டினம் – ராமச்சந்திரன், சேலம் கேம்ப் – விஜயகுமார், காந்தி நகர் – மார்ட்டின், காவேரி கிராஸ் – சுந்தரம், நாட்டாமங்கலம் – கதிரேசன், மாதையன் குட்டை- பழனிசாமி, காவேரிநகர்- பூவழகன், புதுக்காலனி – பிரகாஷ், சின்னபார்க் – பாஸ்கர், நேருநகர் – பிரகாஷ், கட்டபொம்மன் நகர் – அண்ணாதுரை, பாரதி நகர் – முத்துராசு, பொன்னகர்- கோவிந்தராசு, மருத்துவமனை – சித்துசாமி, குமரன் நகர் – அருள் மொழி, ஓர்க்சாப் கார்னர் – சீனிவாசன், மேட்டூர் படிப்பகம் – சதாசிவம், மூலக் கடை – அபிமன்யூ, காந்தி நகர் – பச்சியப்பன், காவலாண்டியூர் – சரசுவதி, செ.செ. காட்டுவளவு – பழனிசாமி, கண்ணாமூச்சி – காவை சசி, கொளத்தூர் பேருந்து நிலையம் – குமார், தெற்கு ராஜ வீதி – சம்பத் குமார், வால்குறிச்சி – அம்ஜத்கான், வடக்கு ராஜ வீதி – நல்லதம்பி, பெரிய கொட்டாய் – ராமமூர்த்தி, பூதப்பாடி – டைகர் பாலன், உக்கம்பருத்திக்காடு – செல்வம், தார்காடு – தர்மலிங்கம், இலக்கம்பட்டி – சக்திகுமார், நீதிபுரம் – வெங்கடேஷ், மல்லிகுந்தம் – அன்பழகன், மேச்சேரி – தமிழ் இளஞ் செழியன், நங்கவள்ளி கே.ஆர்.வி ஸ்பின்னிங் மில் – அருள்குமார், நங்கவள்ளி பேருந்து நிலையம் – கண்ணன், பனங்காடு – செந்தில்குமார். அனைத்து ஊர்களிலும் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் துண்டறிக்கை வழங்கப்பட்டது. காவலாண் டியூர் படிப்பகத்தில் உணவு வழங்கப்பட்டது. காவல்துறையின் நெருக்கடி சூழ்நிலையிலும் அனைத்து ஊர்களுக்கும் பேரணியாக சென்று கொடியேற்றப்பட்டது.
வீரபாண்டி பிரிவு : கழகக் கிளை திறப்பு
தந்தை பெரியாரின் 137- வது பிறந்த நாள் விழா கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை புறநகர் மாவட்ட வீரபாண்டி பிரிவில் கழகக் கிளை திறப்பு விழா வெள்ளமடை மோகன் முன்னிலையில் காளிபாளையம் கணேஷ் மற்றும் வீரபாண்டி பாபு முன்னிலையிலும் பெயர்ப் பலகையை பொருளாளர் துரைசாமி திறந்து வைத்தார். அறிவியல் மன்றம் பொறுப்பாளர் சிவகாமி கழகக் கொடியேற்றி வைத்தார். நிகழ்வில் திருப்பூர் மாவட்ட சார்பில் திருப்பூர் மாவட்ட செய லாளர் முகில்ராசு, அறிவியல் கோவை மாநகர மாவட்டத் தலைவர் திருமணி, மாவட்ட செயலாளர் நிர்மல்குமார், புறநகர் சார்பாக புறநகர் மாவட்டத் தலைவர் இராமசந்திரன், சூலூர் ஒன்றியப் பொறுப்பாளர் பன்னீர் செல்வம், மாநகரப் பொருளாளர் கிருட்டிணன், சமூக நீதி இயக்கம் சார்பாக வெள்ளமடை நாகராசு, மற்றும் கழகத் தோழர்கள் ராசாமணி, லோகு அன்னூர் முருகேசன், பிரபா கரன், விவேக், ராஜசேகர் மற்றும் வீரபாண்டி தோழர்கள் மற்றும் சமூக நீதி இயக்கம் சார்பாக வெள்ளமடை நாகராசும் கலந்து கொண்டனர்.
இளம்பிள்ளையில் பரப்புரைக் கூட்டங்கள்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக “எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் – எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்” தொடர் பரப்புரைக் கூட்டங்கள் மக்கள் ஆதரவோடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
முதலில் இரண்டு தெருமுனைக் கூட்டங்கள் மட்டும் நடத்துவதற்காக காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் அனுமதி மறுத்தும், ஒரு மாத காலத்திற்கு எந்த நிகழ்ச்சிகளுக்குமே அனுமதி இல்லை என்றும் கடிதம் கொடுத்தார். (ஆனால் அ.தி.மு.க சார்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியது)
மாவட்ட கழக பொருப்பாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து முறை யிட்டதைத் தொடர்ந்து, நாள் ஒன்றிற்கு ஒரு கூட்டம் வீதம் பத்து நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு மீண்டும் காவல் நிலையத்தில் எழுதி கொடுக்கப் பட்டது. முதலில் மனுவை பெற மறுத்த உதவி ஆய்வாளர், உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசிவிட்டு மனுவை பெற்றுக்கொண்டார். பின்னர் கூட்டங் களின் எண்ணிக்கையை அல்லது நாட்களை குறைத்து கொள்ளக் கூறினார். அதை ஏற்க மறுத்த தோழர்கள் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
செப்டம்பர் 11 ஆம் நாள் பெருமாகவுண்டம் பட்டி, 12 – கோழிப்பூர், 13 – ஊஞ்சக்காடு, 14 – மகுடஞ் சாவடி, 15 – அழகப்பம்பாளையம், செப்டம்பர் 18 – எட்டிக்குட்டைமேடு, 19 – காட்டூர், 20 – கே.கே.நகர் ஆகிய பகுதிகள் இதுவரை எட்டு கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன; 21 – காடையாம் பட்டியிலும், 22 – சித்தர் கோவிலிலும் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு நாளும் மாலை 6-00 மணி முதல் இரவு 8-00 மணி வரை நடைபெறும் இக் கூட்டங்களில், புளியம்பட்டி இரமேசு ஜாதி ஒழிப்பு பாடல் பாட, தோழர்கள் தனசேகர், தங்கதுரை, மோகன்ராஜ், தப்பகுட்டை கோபிநாத், குமார், முருங்கப்பட்டி இரமேசு, லோகவர்மன் முதலானோர் சிற்றுரை ஆற்ற, கோகுல கண்ணன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை நடத்தி விளக்க உரை ஆற்றி வருகிறார். கே.ஆர்.தோப்பூர் கண்ணன் ஒரு கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்.
அனைத்து கூட்டங்களிலும் தோழர்கள் மணிகண்டன், மோகன்ராஜ் ஆகியோர் ஒலி பெருக்கி அமைக்கும் பணியையும், முருங்கப்பட்டி இரமேசு, தங்கதுரை ஆகியோர் துண்டறிக்கை வினியோகம் செய்யும் பணியையும், விஜி பரப்புரை வாகனம் ஓட்டும் பணியையும் செய்து வருகிறார்கள். முத்து மாணிக்கம் மக்களோடு மக்களாக கலந்து நின்று அவர்கள் பேசும் கருத்துகளை அறிந்து வரு கிறார். கழக செயல்பாடுகள் சரியானது – நியாமானது என்ற கருத்தையே பெரும்பாலும் தெரிவிக்கிறார்கள்.
அனைத்து ஊர்களிலும் புதிய ஆதரவாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். அழகப்பம்பாளையம் என்ற ஊரில் மட்டும் ஒருவர் (குடிபோதையில்) எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதே ஊரைச் சார்ந்த புதிய ஆதரவாளர்கள் அந்த பகுதியில் ஒரு பெரிய பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
செய்தி : சி.மோகன்ராஜ்

பெரியார் முழக்கம் 01102015 இதழ்

You may also like...