முட்டாள்களுக்கு வரி
சித்திரபுத்திரன் முட்டாள்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்கின்ற ஆசையின் மீதே நமது அரசாங்கத்தார் லாட்டரி சீட்டுகளையும், போட்டிப் பரிசுகளையும், குதிரைப் பந்தயங்களையும் அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தரும தேவதை சொற்பனம் அருளுகிறது. இதை மிகவும் சரி என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக ஒரு தாசி தன் தாயாரை நோக்கி எனக்கு இன்பம் கொடுக்கும் ஆடவர்கள் எனக்குப் பணத்தையும் கொடுத்து என்னை வணங்குவதும் ஏன் என்று கேட்டபோது அந்த தாசியின் தாயாரானவள் மகளைப் பார்த்து, நல்ல காரியத்துக்கு தங்கள் பணத்தைச் செலவு செய்யாத அயோக்கியர்கள் பணம் செலவாவதற்காக வேசிகளாகிய நம்மையும், கள்ளு சாறாயத்தையும், சூது ஆட்டங்களையும் கடவுள் அனுமதித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னாளாம். அதற்கு ஒரு பாட்டும் உண்டு. அன்னையே அனையதோழி அறந்தனை வளர்க்கும்மாதே, உன்னையோர் உண்மை கேட்ப்பேன், உரை தெரிந்துரைத்தல் வேண்டும், என்னையே வேண்டுவோர்கள் எனக்கும் ஓர் இன்பம் நல்கி, பொன்னையும் தந்து பாதப் போதினில் வீழ்வதேனோ? (அம்மா) பொம்மெனப்புடைத்து...
