ஈரோடு  முனிசிபாலிட்டி

 

மிருகக்  காக்ஷி  சாலை

இவ்வூர்  பீபிள்ஸ்  பார்க்கிலிருக்கும்  மிருக  காக்ஷிற்கு  முனிசிபல்  கமிஷனரின்  வேண்டுகோளுக்  கிணங்கி  சென்னை  கார்ப்பொரேஷன்  சங்கத்தார்  2  பெண்  சிங்கங்களும்,  2  மான்களும்  இலவசமாய்  அளித்ததை  இவ்வூர்  முனிசிபாலிட்டியார்  தங்களிடமிருக்கும்  லாரி  மூலம்  சென்னையி லிருந்து  அம்  மிருகங்களை  கொண்டுவந்திருக்கிறார்கள்.  ஏற்கனவே  மிருகக்  காக்ஷியில்  இருந்து  வரும்  கரடி,  முதலை  ஆகிய  நூதன  மிருகங்களுடன்  இம்மிருகங்களையும்  வைத்து  நன்கு  போஷிக்கப்பட்டு  வருவதோடு  பொதுஜனங்கள்  சொற்ப  கட்டணத்தில்  மிருகங்களைப்  பார்வையிடவும்  ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஏற்கனவே  இருக்கும்  கரடிகள்  இரண்டும்  பெண்  கரடிகளாக  விருப்பதால்  அவைகளில்  ஒரு  பெண்  கரடியைக்  கொடுத்து  ஒரு  ஆண்  கரடியை  இந்த  சிங்கம்  கொண்டு  வந்த  இடத்திற்கே  கொடுத்து  பெற்றுக்கொண்டால்  மிக  நலமாக  விருக்கும்  அதேபோல்  சிறுத்தையையும்  மாத்திக்  கொள்ளலாமென  நினைக்கிறோம்.

(பர்)

குடி அரசு  பத்திராதிபர் குறிப்பு  13.01.1935

You may also like...