குடி அரசு”

குடி அரசு  பத்திரிகை  துவக்கப்பட்டு  இன்றைக்கு  11வது  வருஷம்  நடக்கின்றது.  மத்தியில்  ஒரு வருஷ  காலம்  அது  அஞ்ஞாத  வாசம்  செய்ய  வேண்டி  ஏற்பட்டு  அதன்  கொள்கைகள் “புரட்சி’,  “பகுத்தறிவு’  என்னும்  பெயரால்  வெளியிடப்பட்டு  வந்து  இப்போது  மறுபடியும்  1935வது  வருஷம்  ஜனவரி  N  முதல்  பழயபடி  குடி அரசு  என்னும்  பெயராலேயே  அது  வெளியாக்கப்பட்டு  முன்  நிறுத்தப்பட்டதிலிருந்தே  தொடர்ந்து  9ம்  மாலை  23வது  மலராய்  வெளி  வருகிறது.  ஆதியில்  “”குடி அரசு”  மனித  சமூகத்துக்கு  என்ன  தொண்டு  செய்ய  முன்  வந்ததோ,  அதே  தொண்டை  எப்படிப்பட்ட  கஷ்டமான  காலத்திலும்,  நெருக்கடியான  காலத்திலும்  பின்னடையாமல்  செய்து  வந்திருப்பதோடு  இப்போதும்  அதையே  கடைப் பிடித்து  தன்னாலான  தொண்டாற்ற  துணிவுடன்  முன்  வந்திருக்கிறது.

குடி அரசு  அறிவிப்பு  13.01.1935

You may also like...