வருஷப்  பிறப்பு

 

இங்கிலீஷ்  புது  வருஷம்  பிறந்தது  என்று  மக்கள்  அதை  ஒரு  பண்டிகை  போல்  கொண்டாடினார்கள்.  “”புதிய  வருஷம்  உங்களுக்கு  ஒரு  சந்தோஷகரமான  வருஷமாய்  கழிய  வேண்டும்”  என்று  ஒருவருக்கொருவர்  வாழ்த்துச்  சொல்லிக்  கொண்டார்கள்.

தமிழ்  வருஷப்  பிரப்புக்கும்  கூட  சில  இடங்களில்  இம்மாதிரி  வாழ்த்துச்  சொல்லிக்  கொள்வதும்,  சன்மானம்  வழங்கிக்  கொள்வதும்  உண்டு.

இவை  ஒருவருக்கொருவர்  கடிதம்  எழுதிக்  கொள்ளும்போது  தலைப்பில்  மகா„„ஸ்ரீ  என்று போடுவதும்,  மேல்  விலாசம்  எழுதும்  போதும்  ஒருவருக்கொருவர்  மகா„  என்று  போடுவதும்  எப்படி  ஒரு  பத்ததியாகவும்,  வழக்கமாகவும்  இருந்து  வருகின்றதோ  அதுபோல்  தான்  புதிய  வருஷப்  பிறப்பு  வாழ்த்தும்  இருந்து  வருகின்றது.

அனுபவத்தில்  எவ்வித  வாழ்த்தும்  மக்களுக்கு  யாதொரு  பயனும்  அளிப்பதில்லை.  அவனவனுடைய  நிலைமையில்  இவ்  வாழ்த்துக்களால்  எவ்வித  மாறுதலும்  ஏற்படுவதுமில்லை.

ஆகவே  இவ்வாழ்த்துக்களையும்,  புது  வருடப்  பிறப்புக்  கொண்டாட்டங் களையும்  பலவித  மூடப்  பழக்க  வழக்கங்களில்  ஒன்றாகத்தான்  கருத  வேண்டுமே  யொழிய  மற்றபடி  இதில்  எவ்வித  பிரயோஜனமும்  இல்லை.  ஆதலால்  இதை  நாம்  கொண்டாடவில்லை  என்பதோடு  புது  வருடப்  பிறப்புக்காக  நாம்  யாரையும்  வாழ்த்தவும்  போவதில்லை.

ஆனால்  புது  வருடம்  பிறக்கும்போது  இந்த  நாட்டில்  மக்களுக்கு  வேலை  இல்லாக்  கஷ்டம்  சென்ற  வருஷங்களைவிட  இரட்டிப்பாய்  இருக்கும்  நிலையில்  பிறந்திருக்கிறது.

எங்கு  பார்த்தாலும்  எந்தத்  துரையில்  ஆனாலும்  “”வேலையில்லை,  வேலையில்லை”  என்று  மக்கள்  அலைந்த  வண்ணமாக  இருக்கிறார்கள்.

அருமையான  கைத்தொழில்காரர்களும்,  நல்ல  வேலை  ஞான  முள்ளவர்களும்,  வியாபார  குமாஸ்தாக்களும்,  கு.கு.ஃ.இ., ஆ.அ., M.அ.,  படித்தவர்களும்,  மற்றும்  வக்கீல்,  வாத்தியார்,  வைத்தியர்,  இஞ்சினீர்  முதலியவற்றில்  படித்து  பட்டம்  பெற்றவர்களும்  “”வேலை  இல்லை,  வேலை  இல்லை”  என்று  அலைந்த  வண்ணமாக  இருக்கிறார்கள்.  கு.கு.ஃ.இ.  படித்தவர்  N  10  ரூபாயுக்கும்,  ஆ.அ.,  படித்தவர்  N  15,  20  ரூபாய்க்கும்,  ஆ.அ. ஆ.ஃ.,  படித்தவர்கள்  N  35,  40  ரூபாய்க்கும்  சம்பளத்துக்கு  வருவதற்கு  100க்கணக்காய்  காத்திருக்கிறார்கள்.  ஆ.அ.ஃ.கூ., கள்  25  அல்லது  30  ரூபாய்  கொடுத்தால்  போதும்  என்று  அலைகின்றவர்களும்  இருக்கிறார்கள்.  ஆ.அ.,யும்  M.அ.,யும்  போலீஸ்  கான்ஸ்டேபிளாகச்  சேருவதற்கு  அலைவதாக  மலையாளத்தில்  இருந்து  சேதிகள்  வந்திருக்கின்றன.  வைத்தியத்தில்  அசிஸ்டெண்ட்  சர்ஜன்  பாஸ்  செய்தவர்கள்  50  ரூ.  சம்பளத்துக்கு  பறக்கிறார்கள்.

இவர்கள்  நிலைமை  இப்படி  இருக்கும்போது,  வெறும்  நாலாவது  பாரம்  5  வது,  6  வது  பாரம்  வரை  படித்து  விட்டு  மேலால்  படிக்க  முடியாமலும்,  2  தரம்,  3  தரம்  பரீøக்ஷயில்  பெயிலாகிவிட்டும்  சரீரத்தால்  வேலை  செய்ய  வெட்கப்பட்டுக்  கொண்டு  எழுத்து  வேலை,  எடுபிடி  ஆள்  வேலை  ஆகியவைகளுக்காக  N  6  ரூ. 7  ரூபாயிக்கு  தொங்கிக்  கொண்டிருக்கும்  1000க்கணக்கான  மக்களின்  நிலைமையைப்  பற்றி  சொல்ல  வேண்டுமா  என்று  கேட்கின்றோம்.

நாள்தோறும் காலை நேரங்களில் படுக்கையைவிட்டு எழுந்து  கண்களைத்  துடைத்துக்  கொண்டு  முன்  வாசல்  முத்தத்துக்கு  வந்தால்  வேலை கேட்பதற்காக  வந்து  வாசற்படியண்டை  காத்து  நிற்கும்  ஆட்கள்  முகத்தில்  தான்  விழிக்க  நேருகிறது.  அவரவர்  குடும்ப  நிலையையும்,  படிப்பதற்காகப்  பட்ட  கஷ்டங்களையும்  மற்றும்  பட்டினி  கிடக்கும்  மாதிரியையும்  கேட்டால்  கேட்கும்  போதே  உலக  நிலையைப்  பற்றி  ஆத்திரம்  சொல்லி  முடியாத  அளவு  தோன்றுகின்றது.

பட்டணங்களில்  உள்ள  குடும்பங்களில்  சற்றேரக்குறைய  100க்கு  முப்பது  நாற்பது  குடும்பங்களுக்கு  மேலாகவே  இந்த  மாதிரி  கஷ்டங்களை  அனுபவித்துக் கொண்டிருக்கின்றதாக தெரிய வருகின்றது.

இந்த  நிலை  மாறுவதற்கு  புது  வருடப்  பிறப்பும்  புது  வருஷ  வாழ்த்தும்  என்ன  செய்யப்  போகின்றது  என்பது  தெரியவில்லை.

நாட்டின்  செல்வ  நிலைக்கு  இந்த  10  அல்லது  15  வருஷ  காலமாகவே  எவ்விதக்  குறைவும்  சொல்ல  முடியாமல்,  நாளுக்கு  நாள்  செல்வம்  வளர்ந்து  கொண்டே வந்திருக்கின்றது.

இந்தியாவின் வருமான வரிக் கணக்கையோ, அல்லது இந்த  மாகாணத்தின்  வருமான  வரிக்  கணக்கையோ  பார்த்தால்  செல்வவான்களுக்குச்  செல்வம்  எப்படி  வளர்ந்து  கொண்டு  வந்திருக்கின்றது  என்பதும்,  புதிய  வரும்படிக்காரர்கள்  எவ்வளவு  பேர்கள்  உயர்ந்திருக்கிறார்கள்  என்பதும்  தெரிய வரும்.

அரசாங்க  உத்தியோகஸ்தர்களுடைய  நிலைமையும்  இப்போது  எவ்வளவு  கொண்டாட்டமாய்  இருந்து  வருகின்றது  என்பதை  ஆகாரப்  பொருள், துணி, மற்ற அனுபவப் பொருள் ஆகியவை  இந்த  4,  5  வருஷங்களில்  100க்கு  50  பங்கு  வீதம்  விலைகள்  குறைந்து  வந்திருப்பதைக்  கவனித்தால்  விளங்கும்.  ஆகவே  வியாபாரிகளும்,  அரசாங்க  உத்தியோகஸ்தர்களும்  முறையே  செல்வம்  பெருகிக்  கொண்டு  சம்பளங்களில்  ஏராளமாக  மிச்சம்  செய்து  கொண்டு  போக  போக்கியங்களுடன்  வாழுவதும்  மற்றபடி  ஏராளமான  பொது  மக்கள்  வேலையில்லாமல்  கஞ்சிக்கும்,  துணிக்கும்  திண்டாடிக்  கொண்டு  கிடப்பதும்  என்றால்  இந்த  மாதிரி  வாழ்க்கை  முறையை  என்ன  வென்று  சொல்வது  என்பது  நமக்கே  விளங்கவில்லை.

புது  வருஷம்  இதற்கு  என்ன  பதில்  சொல்லப்  போகிறது  என்பதும்  நமக்கு விளங்கவில்லை.

இந்த  நிலைமையில்  உள்ள  நாட்டில்  அர்த்தமற்ற  கிளர்ச்சிக்கு  மாத்திரம்  ஒன்றும்  குறைவில்லை.

அரசியல்  சீர்திருத்தம்  வேண்டுமென்றும்,  அரசியலில்  மக்களுக்கு  அதிகமான  ஆதிக்கம்,  அதிகாரம்  இருக்க  வேண்டும்  என்றும்  ஏழை  மக்கள்  பேரால்  கிளர்ச்சி  செய்யப்படுகின்றதே  ஒழிய  இப்படிப்பட்ட  ஏழை  மக்களுக்கு  இச்சீர்திருத்தத்திலோ, அல்லது போதாது என்று கேழ்க்கப்படும் மற்ற  சீர்திருத்தத்திலோ  என்ன  மார்க்கம்  இருக்கிறது  என்பது  விளங்கவில்லை.

ஆகவே  புது  வருஷம்  இந்த  கஷ்டத்திற்கு  என்ன  செய்யப்  போகிறது  என்று  புது  வருஷ  வாழ்த்துக்காரர்களைக்  கேழ்க்கின்றோம்.

நிற்க,  புது  வருஷம்  இந்த  மாதிரி  வேலையில்லாத்  திண்டாட்டம்  பட்டினி  என்பதையே  வாகனமாய்க்  கொண்டு  வந்திருக்கிறது  என்று  சொல்வதோடு  மாத்திரமல்லாமல்  யுத்த  கோஷம்  என்னும்  உருவத்தைக்  கொண்டு  வந்திருக்கிறது.  இப்போது  உலகமெல்லாம்  யுத்த  கோஷமாகவே  இருக்கிறது.  அன்பையும்,  தயாளத்  தத்துவத்தையுமே  அடிப்படையாகக்  கொண்டது  என்று  சொல்லப்படும்  கிறிஸ்து  மதம்  தாண்டவமாடும்  தேசங்களே  இப்போது  யுத்த  பேரிகையை  முழக்குகின்றது.

யுத்த  தளவாடங்கள்,  குண்டு,  துப்பாக்கி,  பீரங்கி,  வெடிகுண்டு,  யுத்தக்  கப்பல்,  ஆகாயக்  கப்பல்  விஷப்  புகை  ஆகியவைகள்  உற்பத்தி  செய்வதில்  முனைந்திருக்கின்றன.

கிறிஸ்து  மதம்  இதை  பார்த்துக்  கொண்டே  இருக்கின்றன.  கிறிஸ்துவும்  இதற்கு  ஆசிர்வாதம்  செய்து  கொண்டே  இருக்கிறார்.

யுத்தத்தில்  நாளைக்கு  சாகப்  போகும்  மக்களுக்கு  வீர  சொர்க்கத்தில்  இடம்  ஏற்பாடு  செய்யும்  வேலையில்  கடவுள்  ஈடுபட்டு  இருக்கிறார்  போலும்.

ஆனால்  நாளைக்கு  யுத்தத்தின்  பேரால்  சாகப்  போகும்  மக்கள்  யாரென்று  பார்ப்போமேயானால்  யாதொரு  பாவமும்  அறியாத  ஏழைப்  பாமர  மக்களே  10  லட்சக்கணக்காகவும்  கோடிக்கணக்காகவும்  சாகப்  போகிறார்கள்.

யுத்தத்தில் யார் ஜெயித்தாலும் யார் தோல்வியுற்றாலும் ஏழை  மக்களுக்கு  ஒரே  ஒரு பலன்தான்  உண்டு.  அதாவது  யுத்தத்தில்  குண்டுக்கு  இறையாகி  உயிரைவிட்டு  “”வீர  சொர்க்கத்துக்கு”  போக  வேண்டியதுதான்.  ஆகவே  இந்தக்  கோலத்துடன்தான்  1935வது  வருஷம்  பிரந்திருக்கிறது.  இதற்குத்தான்  மக்கள்  வாழ்த்துக்  கூறுகிறார்கள்.

பகுத்தறிவு  தலையங்கம்  06.01.1935

You may also like...