Tagged: காங்கிரஸ்

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

12 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது.   – செய்தி அப்படியா? 2004, 2009 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி எல்லாம் விரிவாக அலசியிருப்பாங்க. திருப்பதி, திருமலையில் அடிக்கடி கம்ப்யூட்டர் கோளாறு ஏற்படுவதால், பக்தர்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள்.  – ‘தினமலர்’ செய்தி இதை ‘ஏழுமலையான்’ கவனத்துக்குக் கொண்டு செல்லலாம் என்றால் அதற்கும் ‘மின்னஞ்சல்’ வேலை செய்ய வேண்டுமே! என்னதான் செய்வது? உ.பி.யில் ‘ராம ராஜ்யம்’ அமைய வேண்டும்.   – மோடி அமைக்கலாம்! தேர்தல் ஆணையத்தில் ‘ஸ்ரீராமன்’ கட்சியை பதிவு செய்து விட்டீர்களா? எனக்காக வைக்கப்படும் பேனர்களை விழா முடிந்ததும் உடனே அகற்றச் சொல்லி விட்டேன்.  – அதிகாரிகள் கூட்டத்தில் ஜெயலலிதா சரிங்க மேடம். இதையும் ஒரு பேனரில் எழுதி, பேனர்களோடு பேனர்களாக வைத்து விடலாம். ஆம் ஆத்மி கட்சித் தலைவரான கேத்ரிவால் என்ற சாதாரண மனிதரை முதல் வராக்கியது காங்கிரஸ்.  – அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பெருமிதம் காங்கிரஸ் தனிமைப்பட்டு...

ராஜிவ் கொலை விசாரணையில் காங்கிரசின்  துரோகம்

ராஜிவ் கொலை விசாரணையில் காங்கிரசின் துரோகம்

தமிழக முதல்வர் 7 பேரை விடுதலை செய்தவுடன் துள்ளி குதிக்கும் காங்கிரசார், ராஜிவ் மீது உண்மையான பற்று கொண்டவர்கள் தானா? ராஜீவ் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதோடு தவறு செய்தவர்களை காப்hபற்ற முயன்றார்கள். இதோ, ஆதாரங்களுடன்…. ராஜீவ் காந்தி கொலை நடந்தபோது மத்தியில் ராஜீவின் ‘எடுபிடி’யான சந்திரசேகர் தலைமை யிலான ஆட்சி நடந்தது. வி.பி. சிங் ஆட்சியைகவிழ்த்த காங்கிரஸ், தனது ஆதரவோடு சந்திர சேகர் தலைமையில் ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கியிருந்தது. சந்திரசேகர் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியசாமி. ராஜீவ் கொலை நடந்த அடுத்த 6வது நாளில் ஜெக்தீஷ் சரண்வர்மா (ஜெ. எஸ். வர்மா) என்ற உச்சநீதி மன்ற தலைமையில் ஒரு விசாரணை ஆணை யத்தை சந்திரசேகர் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த சுபத்காந்த் சகாய், 1991 மே 27 ஆம் தேதி அறிவித்தார். ராஜீவ் காந்திக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோளாறுகள், குறைகள் நடந்தனவா என்பது குறித்து ஆராய்வதே இந்த...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி.   – காங்கிரஸ் தலைவர் ஞான தேசிகன் நிச்சயமாக! தி.மு.க., அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் மிதக்கிறார்கள்! ஏப்.24 அன்று காலையில் குளிச்சிட்டு, சாமி கும்பிட்டு, நாடு நல்லா இருக்கணும் என்று நினைத்து, வாக்குச் சாவடிக்குப் போய் தாமரைச் சின்னத்துல ஒரு விரலால் ஒரு குத்து குத்துங்க.  – இல. கணேசன் பேச்சு அப்படியே செய்துடறோம்! ஓட்டுப் போட வரும்போது இதுக்கெல்லாம் தனித்தனியாக சான்றிதழ்களையும் கையோடு கொண்டுவரவேண்டுமா கணேசன் ‘ஜி’? பலரையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய இல.கணேசனை இந்த முறை நாம் எல்லோரும் சேர்ந்து நாடாளு மன்றத்திற்கு அனுப்பியே ஆக வேண்டும்.  – தமிழிசை சவுந்தர்ராஜன் அது முடியாதுங்க மேடம்! மக்கள்தான் ஓட்டுப் போட்டு அனுப்பணும்! நரேந்திர மோடி இரயில் என்ஜின் மாதிரி. நம்முடைய கூட்டணி கட்சிகள் ரயில் பெட்டி; மோடி எனும் என்ஜின் இல்லாவிடில் பெட்டிகள் தானாக நகர முடியாது. – பா.ஜ.க. செயலாளர் வானதி இதை, மோடிகிட்ட...

7 தமிழர் விடுதலைக்கான உரிமைக் குரலை தொடர்ந்து முன்னெடுப்போம்!

7 தமிழர் விடுதலைக்கான உரிமைக் குரலை தொடர்ந்து முன்னெடுப்போம்!

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் முடிவை தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபோது கரைபுரண்ட உற்சாகம் – உச்சநீதிமன்றம் – இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்தபோது தலைகீழாக மாற்றி ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்திருக்கிறது. 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கு தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டிய 7 சட்டப் பிரச்சினைகளை முன் வைத்துள்ளது, தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு. சட்டங்களின் நுணுக்கங்கள் விவாதங்கள் எப்படி இருந்தாலும், ஒரு சாமான்யனின் பார்வையில் நீதி மறுக்கப்படுகிறது என்ற வேதனைதான் மிஞ்சுகிறது. ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்ட இவர்கள், 23 ஆண்டுகாலம் சிறையில் கழித்துவிட்டார்கள். மரண தண்டனையைக் குறைக்கக் கோரி கருணை மனு தாக்கல் செய்யப்பட்டு, அது 11 ஆண்டுகாலம் அது கிடப்பில் போடப்பட்டது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான உயிர் வாழும்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர், தான் போட்டியிடும் கர்நாடக-கோலார் தொகுதியில் வாக்குப் பதிவு எந்திரத்தை வாஸ்து சாஸ்திரப்படி திருப்பி வைத்து வாக்களித்தார்.   – செய்தி தண்டவாளத்தில் ஓடும் ரயில் என்ஜினையும் வாஸ்துப்படி திருப்பி விடாதீங்கய்யா…. மத்தியில் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் அமைச்சரவையில் தி.மு.க.வை சேர்க்க மாட்டோம்.  – ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் தேர்தலை சந்திக்காமலேயே அமைச்சரவை அமைக்க புதுசா ஏதோ வழி கண்டுபிடிச்சிருக்கார் போலிருக்கு. சாதாரண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கார்த்தி சிதம்பரத்துக்கு வாக்களியுங்கள்.  – ப. சிதம்பரம் ‘கார்ப்பரேட்’ கம்பெனி தேவைகளை நான் பூர்த்தி செய்துவிட்டேன்; இனி எனது மகன், சாதாரண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வந்திருக்கிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை திருடிவிட்டது பா.ஜ.க.  – மத்திய அமைச்சர் ஆனந்த் வர்மா புரியுது; எங்களுக்கு ஒரே கொள்கைதான்னு சொல்ல வர்றீங்க. அதை ஏன் இவ்வளவு ஆத்திரத்தோடு சொல்றீங்க? இந்தத் தேர்தலில் வாக்களிக்காதவர்களை அடுத்த தேர்தலில்...

‘பார்ப்பனக் கட்டுப்பாட்டில்’ மத்திய அமைச்சகங்கள்

‘பார்ப்பனக் கட்டுப்பாட்டில்’ மத்திய அமைச்சகங்கள்

தனியார் துறை இடஒதுக்கீடு; முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு என்று தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் சமூக நீதி பேசியது. ஆனால், டெல்லி அதிகார மய்யங்களில் சமூக நீதியை முற்றிலுமாக புறக்கணித்தது என்ற உண்மை வெளி வந்துள்ளது. டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் முதல் நிலை ‘ஏ’ குரூப் அதிகாரிகள் பதவியில் ஒரு தாழ்த்தப்பட்டவரோ, பழங்குடியினரோ இல்லை. 2013 ஜனவரி நிலவரப்படி இந்தப் பதவிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் இரண்டே பேர் மட்டுமே! ஏனைய 49 பதவிகளில் இருப்பவர்கள் அனைவருமே பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினர்தான். அதேபோல் குடியரசு துணைத் தலைவர் அன்சாரி அலுவலகத்தில் ஒரு தலித் அதிகாரிகூட இல்லை. குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் முதல் நிலை அதிகாரியாக ஒரு பிற்படுத்தப்பட்டவர்கூட இல்லை. தலித் அதிகாரிகள் 3 பேரும் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஒருவர் மட்டுமே உள்ளனர். எஞ்சிய 27 உயர்நிலை அதிகாரிகள் பார்ப்பனர் மற்றும் உயர்சாதியினர் தான்! (இடஒதுக்கீடுப் பிரிவில் இடம் பெறாதவர்கள்) திட்டக் குழுவிலும் சமூகநீதிக்கு...