வினாக்கள்… விடைகள்…!

12 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது.   – செய்தி

அப்படியா? 2004, 2009 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி எல்லாம் விரிவாக அலசியிருப்பாங்க.

திருப்பதி, திருமலையில் அடிக்கடி கம்ப்யூட்டர் கோளாறு ஏற்படுவதால், பக்தர்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள்.  – ‘தினமலர்’ செய்தி

இதை ‘ஏழுமலையான்’ கவனத்துக்குக் கொண்டு செல்லலாம் என்றால் அதற்கும் ‘மின்னஞ்சல்’ வேலை செய்ய வேண்டுமே! என்னதான் செய்வது?

உ.பி.யில் ‘ராம ராஜ்யம்’ அமைய வேண்டும்.   – மோடி

அமைக்கலாம்! தேர்தல் ஆணையத்தில் ‘ஸ்ரீராமன்’ கட்சியை பதிவு செய்து விட்டீர்களா?

எனக்காக வைக்கப்படும் பேனர்களை விழா முடிந்ததும் உடனே அகற்றச் சொல்லி விட்டேன்.  – அதிகாரிகள் கூட்டத்தில் ஜெயலலிதா

சரிங்க மேடம். இதையும் ஒரு பேனரில் எழுதி, பேனர்களோடு பேனர்களாக வைத்து விடலாம்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவரான கேத்ரிவால் என்ற சாதாரண மனிதரை முதல் வராக்கியது காங்கிரஸ்.  – அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பெருமிதம்

காங்கிரஸ் தனிமைப்பட்டு நிற்கிறது என்று கூறிய ப. சிதம்பரத்துக்கு, இதுதான், சரியான பதிலடி! இப்படி எல்லா மாநிலத்துலயும் பிறகட்சிக் காரர்களையே முதல்வராக்கிடுங்க. காங்கிரசை தனிப் படுத்தவே முடியாது!

இந்து கடவுள்களை அவதூறாகப் பேசிய தாக காவல்துறை இயக்குநர் அலுவல கத்தில் இந்து அமைப்புகள் புகார். -செய்தி

இதை கடவுள்களிடம் தானே முறையிட வேண்டும்? கடவுளை நம்பாமல் காவல் துறைக்குப் போய் இந்துக் கடவுள்களை நீங்களே அவமதிக்கலாமா?

காங்கிரஸ் கட்சி, பிரதமர்  வேட்பாளர் யார் என்பதை உடனே அறிவிக்க வேண்டும்.  – ப. சிதம்பரம்

என்ன புரியாம பேசுறீங்க… கட்சியே அதற்கு ஆள் தேடிக் கொண்டிருக்கும்போது, உங்கள் தலைமீதே திருப்பிப் போட்டுவிட்டால், அப்புறம் என்ன செய்வீங்க? யோசிச்சுப் பேசுங்க சார்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மெட்ரோ ரயிலில் ஏறி வந்து பதவியேற்றார்.   – செய்தி

போச்சு. எங்க நாட்டுல இனி பதவியேற்பு நடக்கிற இடத்துக்கே தனியாக சிறப்பு ரயில் பாதை அமைச்சு, அதுல, ஏறி வந்து, பதவி ஏற்க ஆரம்பிச்சுடு

வாங்கலே…

இலட்சிய தி.மு.க.வை கலைத்துவிட்டு, டி. ராஜேந்தர் தி.மு.க.வில் சேர்ந்தார். – செய்தி

இலட்சியத்தை நீக்கிக் கொண்ட இலட்சியவாதியே, வருக! வருக!

பெரியார் முழக்கம் 02012014 இதழ்

You may also like...