வெளிநாடு செல்ல விரும்பும் ஈழத் தமிழர்களிடம் அதிகாரிகளின் கெடுபிடிகளை தளர்த்துக! குடியுரிமை அதிகாரியிடம் கழக சார்பில் மனு
இலங்கை இராணுவத்தின் ஒடுக்கு முறைகளிலிருந்து தப்பித்து, ஈழத் தமிழர்கள், கடல் வழியாக படகுகள் வழியாக தாய்த் தமிழகம் நோக்கி அகதிகளாக வருகிறார்கள். படகுகளில் வர முடியாதவர்கள், சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில் ‘விசா’ பெற்று விமானம் மூலம் அகதிகளாக வருகிறார்கள். இவர்களும் அகதிகளாக தமிழகம் நோக்கி வந்தவர்கள்தான். இவர்கள் தாய்நாட்டுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ திரும்பும்போது இந்தியாவில் அனுமதித்த காலத்தைவிட கூடுதலான காலம் தங்கியதற்காக விதிக்கப்படும் அபராதத் தொகை பல மடங்கு அதிகமாக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கடும் துயரத்துக்கு உள்ளா வதை சுட்டிக்காட்டி, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை சாஸ்திரி பவனிலுள்ள தலைமை குடியுரிமை அதிகாரியிடம் பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் செப். 25 பகல் 11 மணி யளவில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. “கடந்த வருடத்திற்கு முன்பு வரை ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்திற்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்ல வேண்டுமானால் விசாக் காலம் முடிந்து தங்கியிருக்கும்...