Tagged: ராஜிவ் கொலை வழக்கு
மறைந்த எங்கள் தோழர் முத்துகுமாருக்கு நடக்கின்ற இந்த வீரவணக்கப் பொதுக்கூட்டத்திற்கு வந்து மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களே, அனைவருக்கும் வணக்கம். இன்று ஈழத்தில் நம்முடைய இன சொந்தங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நாடாக ஏற்றுக்கொண்டிருக்கின்ற இந்திய நாடு உதவிக்கொண்டிருக்கின்ற வேளையில், பல்வேறு சிக்கல்களைப் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றோம், உரையாடிக்கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் நான் ஒரு செய்தியை மட்டும் பேச நினைக்கிறேன். நான் பேச நினைப்பது, இந்த நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிற சில முழக்கங்கள். ‘மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்’ -இது காங்கிரஸ் முழக்கம்; ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு’ – இது மார்க்சிஸ்டு முழக்கம்; ‘சகோதர யுத்தம், சர்வாதிகாரி’ – திமுக முழக்கம். இதில் ஒரு முழக்கத்தை மட்டும், – நாம் யாரை ஒழிக்க நினைக்கிறோமோ – அந்த காங்கிரசின் முழக்கத்தை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ‘மறக்க...
23 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், “என்னுடைய கருணை மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தைக் கூறுவீர்களா?” என்று தகவல் உரிமை தலைமை ஆணையருக்கு கடிதம் எழுதினார். “அது முடியாது; குடியரசுத் தலைவருக்கு அமைச்சரவை எழுதிய குறிப்புகளையோ, குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்வதற்கான காரணங்களையோ வெளியிட வேண்டிய அவசியமில்லை. அதை சட்டம் அனுமதிக்கவில்லை” என்று கண்டிப்பாக பதில் எழுதிவிட்டார் அதிகாரி. அதுவும்கூட, ஒரு வகையில் சரிதான். கருணை காட்டுவதற்குத்தான் காரணம் வேண்டும். கருணையை மறுப்பதற்கு காரணம் ஏதும் தேவையில்லையே! கருணை உள்ளம் இல்லாமல் இருந்தாலே போதும்! குடியரசுத் தலைவர் ‘கருணையுடன் – கருணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று எழுதி யிருப்பார், போலிருக்கிறது! பேரறிவாளன் கருணை மனு நிராகரிப்பு மட்டுமல்ல, தடா நீதிமன்றத்தில் அவர் மீது நடந்த வழக்கு விசாரணைகூட ரகசியமாகத்தான் நடந்தது. அதாவது, நீதிமன்றத்தில் ராஜீவ் கொலை வழக்குப் பற்றி நடக்கும் வாதங்கள், குறுக்கு விசாரணைகள் மக்களுக்கு தெரிந்துவிடவே கூடாது என்று...
முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் முடிவை தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபோது கரைபுரண்ட உற்சாகம் – உச்சநீதிமன்றம் – இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்தபோது தலைகீழாக மாற்றி ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்திருக்கிறது. 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கு தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டிய 7 சட்டப் பிரச்சினைகளை முன் வைத்துள்ளது, தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு. சட்டங்களின் நுணுக்கங்கள் விவாதங்கள் எப்படி இருந்தாலும், ஒரு சாமான்யனின் பார்வையில் நீதி மறுக்கப்படுகிறது என்ற வேதனைதான் மிஞ்சுகிறது. ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்ட இவர்கள், 23 ஆண்டுகாலம் சிறையில் கழித்துவிட்டார்கள். மரண தண்டனையைக் குறைக்கக் கோரி கருணை மனு தாக்கல் செய்யப்பட்டு, அது 11 ஆண்டுகாலம் அது கிடப்பில் போடப்பட்டது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான உயிர் வாழும்...