Tagged: மாற்றுக் கருத்து

மாற்றுக் கருத்தினரையும் மதித்த மாண்பாளர் பெரியார்

மாற்றுக் கருத்தினரையும் மதித்த மாண்பாளர் பெரியார்

1939இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட பெரியாருடன் ஒரே சிறையில் இருந்தவர் மறைமலை அடிகளாரின் மகன் மறை. திருநாவுக்கரசு. பெரியாரின் மனித நேய உணர்வுகளை வியந்து பாராட்டி, இவர் எழுதிய கட்டுரை 1991ஆம் ஆண்டு ‘இளந்தமிழன்’ ஏட்டில் வெளி வந்திருக்கிறது. கருத்து மாறுபாடுகளையும் கடந்த பெருந் தன்மையும், மனித நேயமும் தமிழினப் பார்வையில் உயர்ந்து நின்றதை பல்வேறு நிகழ்வுகளுடன் படம் பிடித்துக் காட்டுகிறது, இக்கட்டுரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) சிறை குற்றவாளிகளிடம் கனிவு சிறைச்சாலையில் இருக்கும் பொழுது, அங்கிருந்த ஏழைக் குற்றவாளிகள் இவருடைய மீசை தாடியை பார்த்து இவர் ஒரு துறவியார் (சாமியார்) என்று நினைத்துக் கொள்வார்கள். எனவே அவ்வப்பொழுது அவர்கள் வந்து இவர் கால்களில் விழுந்து கும்பிட்டு, ஐயா! பெரியவரே! சாமி! நாங்கள் ஏதோ பெரிய தீவினை (பாவம்) பண்ணிவிட்டு, சிறையிலே வந்து சேர்ந்திருக்கிறோம்; எங்களுக்கு மன்னிப்பு உண்டா? கடவுள் எங்களது தீவினையை (பாவத்தை) நீக்குவாரா? நீங்கள் எங்களுக்கொரு நல்ல...