அறிவுரைக் குழுமத்தில் தோழர்கள் நேர் நிறுத்தம்: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்குக!
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் உமாபதி, இராவணன், மனோகரன், மாரிமுத்து ஆகியோர் 2013 டிசம்பர் 9 ஆம் தேதி அறிவுரைக் குழுமத்தின் முன் பிற்பகல் 3 மணி யளவில் நேர்நிறுத்தப்பட்டனர். உமாபதி, இராவணன் ஆகியோருக்காக பொதுச்செய லாளர் விடுதலை இராசேந்திரனும், மாரிமுத்து, மனோகரனுக்காக மருத்துவர் எழிலனும் வாதுரைத்தனர். விடுதலை இராசேந்திரன் நீதிபதிகள் முன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “நாட்டின் பாதுகாப்புக்கு, பொது ஒழுங்குக்கு, சமுதாயத்துக்கு இன்றியமையாத பொருள்களை வழங்குதலுக்கு, அதற்கு சேவை ஆற்றுவதற்கு எதிராக பாதிப்புகளை ஏற்படுத்தினால் மட்டுமே தேசியப் பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படவேண்டும். அத்தகைய எந்தக் குற்றமும் சாட்டப்படாத நிலையில், தேசியப் பாதுகாப்புச் சட்டம் இந்த வழக்கில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தபால் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி யதாக பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்குகளில் பிணை வழங்கப்படவில்லை. பிணை வழங்கு வதை நீதிமன்றம் நிலுவையில் வைத்துள்ளது. ஆனால்,...