மகாராஷ்டிராவின் மாட்டிறைச்சி அரசியல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பார்ப்பன முதல்வர் தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி பதவிக்கு வந்தவுடன் மாட்டிறைச்சிக்கு முழுமையான தடை விதித்தது. மாட்டிறைச்சியை சாப்பிட்டதாக ஒரு புகார் வந்தால் அதற்காக அவரை கைது செய்து சிறையில் தள்ள முடியும் என்ற அளவுக்கு உணவு உரிமைக்கே சவால் விட்டது அந்த சட்டம். மாடுகளை வெட்டக் கூடாது; வீட்டில் மாட்டிறைச் சியையும் வைத்திருக்கக் கூடாது என்று சட்டம் கூறியது. ஏதோ, இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கையாக பா.ஜ.க. கருதியது. உண்மை என்னவென்றால் தலித் மக்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் உணவு மாட்டிறைச்சி. மிகக் குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய புரதச் சத்துணவு. சட்டமன்றத் தேர்தல்களில் தலித் மக்களின் ஓட்டுகளை தங்கள் பக்கம் இழுக்க அம்பேத்கருக்கு உரிமை கொண்டாடும் பா.ஜ.க., தலித் மக்களின் உணவு உரிமைக்கு தடை போட்டு பார்ப்பனிய உணவு கலாச்சாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணிக்கிறது. பார்ப்பனர்களே மாட்டுக்கறியை சாப்பிட்டவர்கள்தான். புத்தர் இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகுதான் பார்ப்பனர்களே மாட்டிறைச்சி...