‘பேய்’ உண்டா? சவால் விட்டவர்கள் ஓட்டம்
திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை ஒன்றியம் கோளம்பட்டி கிராமத்தில் சோழ ராஜா கோயில் இருக்கிறது. ஆடி மாதத்தில் மூன்று நாள்கள் நடக்கும் இந்தக் கோயில் திருவிழாவில் கொடூரமான சித்திரவதைகள் அரங்கேறுகின்றன. பேய் பிடித்ததாகக் கூறப்படும் பெண்களைக் கொண்டு வந்து நிறுத்தி, முகத்தில் தண்ணீரைத் தெளித்து, சாம்பிராணி புகைப்போட்டு, ‘உனக்கு பேய் பிடித்திருக்கிறது. அது எந்த ஊர் பேய்?” என்று கேட்டு சாட்டையால் இரத்தம் சொட்ட சொட்ட அடிக்கிறார்கள். அடி தாங்க முடியாத பெண்கள், ‘பேய் ஓடி விட்டது’ என்கிறார்கள். அந்தப் பெண்ணின் தலை முடியை எடுத்து ஓர் ஆணியில் சுற்றி அப்பகுதி புளிய மரத்தில் அடிக்கிறார்கள். பேயைப் பற்றி காசார் பிரைட் என்ற பிரிட்டனைச் சார்ந்தவர் ஓர் ஆய்வை நடத்தினார். 800 வருட பழமையான பங்களா ஒன்றில் ‘பேய் பிசாசு’ பிடித்தவர்கள் என்று கூறப்பட்டவர்களை கொண்டு போய் தங்க வைத்து, அவர் ஆய்வு செய்தார். குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது வழக்கத்துக்கு அதிகமான ‘காந்தப்...