சிங்களருக்கும் சமநீதி கோரிய தலைவர்
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் 50 ஆவது பிறந்தநாளையொட்டி 2004 ஆம் ஆண்டு ‘ஈழ முரசு’ சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. அதில் போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தினேஷ் என்ற போராளி எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. திருகோணமலை மாவட்டத்தில் எமது கட்டுப் பாட்டிலுள்ள மூதூர் பிரதேசத்தினுள் அமைந்த காட்டுப் பகுதியினுள் அயல் எல்லைக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிங்களப் பெண்மணி வழி தவறி வந்து விட்டார். அப்போது அங்கு வைத்து அச்சிங்களப் பெண்மணிக்குத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஒரு தமிழ் வாலிபன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விடுகின்றான். இதனை அச்சிங்களப் பெண்மணி எமது இயக்கத்தின் முகாமிற்கு வந்து முறைப்பாடு செய்தாள். உடனே எமது இயக்கப் போராளிகள் அனைவரும் தேடுதலில் ஈடுபட்டு அந்த வாலிபனை இறுதியாக ஆதாரங்களுடன் தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள். அத்துடன் அச்சிங்களப் பெண்மணி யும் அவனை அடையாளங் காட்டிவிட்டார். அவ்வாலிபன்...