வஞ்சகம் – பார்ப்பன சூழ்ச்சிக்கு பலியானவர்! அப்சல்குருவை நினைவு கூர்வது தேசத் துரோகமா?
தொலைக்காட்சி விவாதங்களில் சங்பரிவாரங் களின் பிரச்சார பீரங்கிகள் செவிப் பறைகளைக் கிழிக்கிறார்கள். “அப்சல் குருக்களாக மாறுவோம்; ஓராயிரம் அப்சல்குருக்கள் உருவாகுவார்கள்” என்று முழக்கமிட்டவர்கள் தேச துரோகிகளா? இல்லையா? இதை எப்படி ஒரு தேசம் அனுமதிக்க முடியும்? மீண்டும் மீண்டும் இதே கேள்விதான். அப்சல் குரு உண்மையிலே தேசத் துரோகி தானா? நாடாளுமன்றத் தாக்குதலில் அவர் பங்கு பெற்றவரா? அப்படியெல்லாம் எதுவும் இல்லை; கையில் சிக்கிய ஒரு அப்பாவியை வஞ்சகமாக பொய்யாகக் காவு கொடுத்தக் கயவர்கள் இவர்கள் என்பதை இந்த வழக்கின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் தெரிய வரும். இந்த வழக்கில் நடந்த முறைகேடுகளை – மோசடிகளை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறோம். • 2001, டிசம்பர் 3 ஆம் தேதி, நாடாளுமன்றத்தின் முன் தாக்குதல் நடந்தது. இந்த கொடும் குற்றத்தில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகளும் அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாடாளுமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 7 பேரும் இதில் கொல்லப்பட்டனர்....