பகுத்தறிவுக்கு எதிரான மதவெறி சக்திகள் – டாக்டர் பார்கவா கட்டுரை
உயிரியல் துறை விஞ்ஞானியும், தேசிய அரசு ஆணையத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் பார்கவா, ‘இந்து’ நாளேட்டில் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள். நாம் எதனை உண்ண வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எதனைப் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், யாரை நேசிக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் முடிவெடுக்க விரும்புகின்ற தற்போதைய அரசின் செயல்பாட்டில் கலாச்சார சகிப்பின்மை என்பது ஆதிக்கம் செலுத்திடும் அம்சமாக உள்ளது. இந்துத்துவா கொள்கையின் மூலாதாரமாக ஆர்.எஸ்.எஸ். எனும் ராஷ்டிரியஸ்வயம் சேவக் அமைப்பு இருக்கிறது. பாஜக அரசில் இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் செல்வாக்கு ஓங்கியுள்ள நிலையில், “பகுத்தறிவு கோட்பாடு, காரணத்தைத் தேடி விவாதித்து கேள்விக்குள்ளாக்கும் நெறி ஆகியவற்றிலிருந்து இந்திய தேசத்தை விலகச் செய்து, அதன் வாயிலாக ஜனநாயகத்திலிருந்தும் தேசத்தை விலகச் செய்கின்ற இந்து மதவாத எதேச்சாதிகாரத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோமா?” என்ற கேள்வியை நாம் எழுப்பிடலாம். அவ்வாறு நாம் நகர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. வன்முறைத் தாக்குதல்களோடு மட்டுமின்றி,...