Tagged: பசுவதை

பசு மாட்டுக்கும் சமஸ்கிருதத்துக்கும் பல கோடி ரூபாய் பாழடிப்பு பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பார்ப்பனிய ஆட்சி!

பசு மாட்டுக்கும் சமஸ்கிருதத்துக்கும் பல கோடி ரூபாய் பாழடிப்பு பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பார்ப்பனிய ஆட்சி!

பார்ப்பன இந்துத்துவ சக்திகள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்வேறு மாநிலங் களில் பார்ப்பனியப் பண்பாட்டை சட்டங்களால் திணித்து மீண்டும் ‘ராமராஜ்யத்தை’ உருவாக்க முயன்று வரும் அதிர்ச்சியான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறப்பாக நிர்வாகம் நடக்கிறது என்றும், வளர்ச்சிப் பாதையில் நடை போட்டு வருகின்றன என்றும் ‘துக்ளக்’ போன்ற பார்ப்பன ஏடுகள், பரப்புரை செய்து வருகின்றன.  ஆனால் இங்கே என்ன நடக்கிறது? நித்தின் கட்காரி என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் – பா.ஜ.க.வின் தலைவரான பிறகு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் முழுமை யாகக் கொண்டுவந்துவிட்டது. இதற்காக ஆர்.எஸ். எஸ். நடத்தும் பல்வேறு ‘சங் பரிவாரங்களின்’ பிரதிநிதிகளும் பா.ஜ.க.வினரும் அவ்வப்போது கூடிப் பேசும் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு நடத்தப் படுகின்றன. ‘சமன்வயா பைதாக்’ (இணைந்து நிற்போம்) என்ற பெயரில் நடக்கும் இந்த கூட்டங் களில் பா.ஜ.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆக.2011 இல் உஜ்ஜயின் நகரில் நடந்த இந்த...

‘பசுவதைத் தடை’ச் சட்டத்தின் அரசியல் பின்னணி

பசுவதைத் தடைச் சட்டத்தின் அரசியல் வரலாறு குறித்த சுருக்கமான பின்னணி: ட           ஆக. 21, 2003 – வேளாண் அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் பசுவதை தடை மசோதா அறிமுகம் செய்ய முயன்றார். கூட்டணி கட்சிகளான தி.மு.க., பா.ம.க., தெலுங்கு தேசம் எதிர்த்தன. காங்கிரசும் எதிர்க்கவில்லை; அ.இ.அ.தி.மு.க.வும் எதிர்க்கவில்லை. ட           1924இல் காந்தி இவ்வாறு எழுதினார்: “இந்துக்கள் இந்தியாவில் விரும்புவது சுயராஜ்யமேயன்றி இந்து இராஜ்யம் அல்ல; இந்து இராஜ்யமாக இருந்த போதும் சகிப்புத் தன்மை அதன் அம்சமாக இருந்தால், அங்கே முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடம் உண்டு. கட்டாயப் படுத்தி பசுவதையை நிறுத்தாமல், கிறிஸ்தவர், முஸ்லிம், பிறரும் தாங்களாகவே முன் வந்து பசுவதையை நிறுத்தினால், அது இந்து மதத்தின் பெருமைக்கு சான்றாக இருக்கும். ஆகவே இந்து ராஜ்யம் குறித்து கனவு காண்பதுகூடத்  தேசத் துரோகம் என்றே நான் கூறுவேன்” என்றார் காந்தி. ட           சங்பரிவாரங்கள், ‘கோமாதா பக்தி’யை முஸ்லிம், கிறிஸ்தவ வெறுப்பு அரசியலுக்கே...