திருப்பூரில் பொங்கல், தைப்புத்தாண்டு விழா ! 22012017
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் 22.01.2017 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை 8 ஆம் ஆண்டு திராவிடர் பெருவிழாவாக பொங்கல்,தைப்புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. 22.01.2017 அன்று காலை 8 மணிக்கு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பமானது.தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்,உரி அடித்தல்,குழு விளையாட்டுப்போட்டிகள் ஆகியன நடைபெற்றன. மாலை 6 மணிக்கு நிமிர்வு கலைக்குழுவினரின் ஜாதி ஒழிப்புப் பறையிசை நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.பின் காலை நடந்த விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பரிசுகளாக பெரியாரிய புத்தகங்கள்,வெற்றிக்கோப்பை,நாள்காட்டி ஆகியன வழங்கப்பட்டன. இவ்விழா அப்பகுதி பொதுமக்களிடம் பெரும் வரவேற்ப்பைப்பெற்றது. விழாவினை தோழர் அகிலன்,மாதவன்,நாகராசு,கணபதி, பிரவீன்குமார், நீதிராசன்,கருணாநிதி,தனபால்,ராஜசிங்கம் உள்ளிட்ட தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பரிசளிப்பு விழாவில் கழக பொருளாளர் துரைசாமி,அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி,மாவட்டத்தலைவர் முகில்ராசு,பாண்டியநாதன்,முத்துலட்சுமி,சங்கீதா,முத்து,பிரேம் குமார்,தனகோபால்,பல்லடம் சண்முகம்,மணி ஆகியோர் கலந்துகொண்டனர். உணவு ஏற்பாட்டினை மாதவன் குடும்பத்தினர்,அகிலன் குடும்பத்தினர்,கோமதி குடும்பத்தினர் ஆகியோர் செய்திருந்தனர். தோழர்...