2000 பார்ப்பனர்கள் வேதம் ஓத 20 கோடி செலவில் யாகமாம்! யாக சாலை தீ பிடிக்க தலைதெறிக்க ஓட்டம்!
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பார்ப்பன கொத்தடிமையாகவே தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். முதல்வரானவுடன் வாஸ்து பண்டிதர் ஒருவரை முதல்வரின் ஆலோசகராகவே நியமித்துக் கொண்டார். முதல்வர் அலுவலகத்தை பல கோடி அரசுப் பணத்தைப் பாழடித்து வாஸ்து அடிப்படையில் மாற்றினார். இப்போது தனது சொந்த கிராமமான ஏரவெல்லி கிராமத்தில் 5 நாள் யாகம் நடத்தியிருக்கிறார். பல்வேறு மாநிலங்களிலிருந்து 2000 பார்ப்பனர்கள் ஒன்றுகூடி, இந்த யாகத்தை நடத்தியுள்ளனர். உலக நன்மைக்காகவும் எதிரிகளை வீழ்த்தவும் நடத்தப்படும் இந்த யாகத்தின் பெயர் ‘ஆயுத சண்டி மகாயாகம்’. இதற்கு தனது சொந்தப் பணத்தையே செலவிடுவதாக முதல்வர் கூறுகிறார். யாகத்துக்கான செலவு ரூ.20 கோடி என்று ‘தினமலர்’ பார்ப்பன நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. ‘அக்னி குண்டத்தில்’ ஒவ்வொரு நாளும் பட்டுப் புடவைகள், அய்ம்பொன் ஆபரணங்கள், உணவு தானியங்கள் கொட்டப்பட்டு வருகின்றன. ஆந்திர ஆளுநர் மற்றும் சரத்பவார், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் எல்லாம் ‘யாக சாலை’க்கு வந்து பார்ப்பனர்களிடம் ‘ஆசி’ பெற்றார்களாம்....