Tagged: சேலம் மாநாட்டின் எழுச்சி

சேலம் மாநாட்டின் எழுச்சி!

சேலம் மாநாட்டின் எழுச்சி!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை” தமிழகமெங்கும் நடத்த திட்டமிடப்பட்டு முதல் மாநாடு ஈரோடு, அடுத்ததாக சென்னையில் நடைபெற்றதைத் தொடர்ந்து சேலத்தில் நடத்த அறிவிக்கப்பட்டு கழகத் தோழர்களால் மாநாட்டு பணிகள் துவங்கப்பட்டன. ”மக்களைப் பிரிக்கும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் 19.12.2015 சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் துவங்கியது. மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவுப் பாடல்களுடன் மாநாடு ஆரம்ப மானது. குமரப்பா தபேலா வாசிக்க, சீனி தவிலும், காளியப்பன் உறுமியும் வாசித்தனர். கோவிந்தராசு, முத்துகுமார், இசைமதி, அருள்மொழி ஆகியோர் சாதி ஒழிப்பு, பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினர். மாநாட்டின் முதல் அமர்வாக கருத்தரங்கம் நடைபெற்றது.”தொடரும் பார்ப்பன வல்லாதிக்கம்” எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் நெறிப்படுத்தினார்....