‘அரிதிலும் அரிதான’ வழக்கு: புதிய பார்வை
சுஷில் சர்மா – டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகளடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. தனது மனைவியை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி தந்தூரி ரொட்டி சுடும் அடுப்பு நெருப்பில் போட்டு எரித்தார் என்பது குற்றச்சாட்டு. அரிதினும் அரிதான வழக்கில் மட்டும் தூக்குத் தண்டனை விதிக்கலாம் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கொடூரமான கொலைகள் தான் அரிதிலும் அரிதாக கருதப்பட வேண்டும் என்று இதற்கு தவறாக பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளி திருந்தி வாழவே முடியாது என்ற உறுதியான முடிவுக்கு வரும் நிலைக்கு குற்றம் புரிந்தால் மட்டுமே அரிதிலும் அரிதான வழக்கு என்ற முடிவுக்கு வர முடியும் என்ற கருத்தை சுஷில் சர்மா வழக்கில் இப்போது உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி யிருக்கிறது. இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சுஷில் சர்மா, எதிர்காலத்தில் திருந்தி வாழவே மாட்டார் என்பதற்கான சான்றுகளை அரசு தரப்பு...