Tagged: சார்லஸ் டார்வின்

அறிவியலாளர்களை கொலை செய்த மதவெறி

சந்திரன் ஒரு தெய்வம் அல்ல; அது அறிவியல் பார்வையில் ஒரு கோள்! சந்திரன் மீது பூமியின் நிழல்படுவதே (கிரகணம்) என்று கூறினார், கி.மு. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிவியலாளர் ஆனக்ஸாகரஸ். ஏதன்சு நகரத்து மதவாதிகள் இவரது கருத்து மத விரோதமானது என்று கூறி இவரைக் கொல்ல முயன்றனர். ஏதன்சு நகர மன்னர் பெரிக்ளீஸ் இவரது நண்பராக இருந்ததால், கொலை முயற்சி தடுக்கப்பட்டது. இவரை ஏதன்சு நகரை விட்டே துரத்தி விட்டனர். சூரியன் தான் இயங்குகிறது என்ற மத நம்பிக்கைக்கு மாறாக, சூரியனைச் சுற்றி பூமிதான் இயங்குகின்றது என்ற உண்மையை வெளியிட்டார், கோபர்நிகஸ். மதவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்; கலகம் செய்தனர். புராட்டஸ்டண்ட்  மதத்தை நிறுவிய மார்ட்டின் லூதர், கோபர்நிகசை ‘முட்டாள்!’ என்று கூறி  இழிவுபடுத்தினார். எதிர்ப்புக்காக தனது முடிவை விட்டுக் கொடுக்காத  கோப்பர்நிகஸ், படுத்த படுக்கையாக கிடக்கும் போதும் தனது கொள்கைகளை நூலாக வெளியிட்டுப் பரப்பினார். விண்வெளியில் விண் கோள்களின் இயக்க விதிகளைக்...

உயிர் தோன்றியது கடவுள் சக்தியால் அல்ல!

உயிர் தோன்றியது கடவுள் சக்தியால் அல்ல!

உலகப் புகழ் பெற்ற தனது மூலதனம் நூலை “உங்களுடைய தீவிர அபிமானி” என்று கையெழுத் திட்டு கார்ல் மார்க்ஸ் ஒருவருக்கு அனுப்பி வைத்தார். அந்த நபர் “பரிணாமவியலின் தந்தை” சார்லஸ் டார்வின். டார்வின் எழுதிய “உயிரினங்களின் தோற்றம்” என்ற நூலைப் படித்துவிட்டு, வரலாற்றுப் பொருள் முதல் வாதத்துக்கு அந்த நூல் அடிப்படையாக இருந்ததாக மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். டார்வின் கண்டறிதல் அந்த அளவுக்குத் தாக்கம் செலுத்தியிருந்தது. கடவுளே மனித இனத்தைத் தோற்றுவித்ததாக நம்பப்பட்டு வந்த நிலையில், “இல்லை, அனைத்து உயிரினங்களும் இயற்கை நடைமுறையின் ஒரு பகுதியாகப் பரிணாம வளர்ச்சியில் உருவானவை” என்பதை அறிவியல் ஆதாரங்களுடன் டார்வின் நிறுவினார். அதற்காக இன்றுவரை தூற்றப்பட்டு வருகிறார். அறிவியல் உலகின் இரண்டாவது புரட்சி என்று டார்வின் பரிணாம வியல் தத்துவத்தைக் கூறலாம். பூவுலகில் உயிரும் மனித இனமும் எங்கிருந்து வந்தன என்ற அடிப் படைக்  கேள்விக்கான விடையை, பரிணாம வளர்ச்சிக் கொள்கை சொல்கிறது. சரி, பரிணாம வளர்ச்சிக்...