புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (3) பார்ப்பன சூழ்ச்சியில் வீழ்ந்த சிவாஜி
பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: (சென்ற இதழ் தொடர்ச்சி) கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509 – 1530) 1) தென்னகம் முழுவதையும், தனது ஆட்சிக்கு உட் படுத்திய மன்னர். பார்ப்பன தாசர். வர்ணா°ரமப் பற்றாளர். பார்ப்பனர்களுக்கே முக்கிய பதவிகளைத் தந்தார். பெரும்பாலான பார்ப்பனர்கள் சுகவாசி களாக, உண்டு உறங்கிக் கிடந்தனர். “வேத மார்க்க பிரதிஷ்டாபன சாரியா” என்று பட்டம் சூட்டிக் கொண்டனர். 2) நீண்ட காலத்துக்குப் பிறகு, அவருக்கு குழந்தைப் பிறந்தது. திருமலைராயன் என்று பெயரிட்டு, 6 ஆம் வயதிலேயே முடிசூட்டி வைத்தார். முடிசூட்டிய ஒரு மாதத்திலேயே திம்மாதண்ட நாயகன் எனும் பார்ப்பான், குழந்தைக்கு நஞ்சு ஊட்டிக் கொன்றான். இவன் சாளுவ திம்மன் எனும் பார்ப்பன முதலமைச்சரின் மகன். 3) 3 பார்ப்பனர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். திம்மா தண்டநாயகன் சிறையிலிருந்து தப்பி, தனது பார்ப்பன உறவினரான அதிகாரிகளிடம் தஞ்ச மடைந்து, சதி செய்து நாட்டில் கலகத்தை உருவாக்கினான். 4) படையினால்...