Tagged: எம்ஜிஆர்

எம்.ஜி.ஆர். – நிறையும் குறையும்

அடித்தட்டு மக்களின் செல்வாக்குப் பெற்ற தலைவராகத் திகழ்ந்தவர், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ‘மக்கள் திலகம்’ என்றும், ‘புரட்சித் தலைவர்’ என்றும் அழைக்கப்பட்ட அவரது ஆட்சிக் காலத்தில் சாதனைகளும் உண்டு; கொள்கைத் தடுமாற்றங்களும் உண்டு. பெரியார் நூற்றாண்டு விழா, அவரது ஆட்சிக் காலத்தில்தான் – அரசு விழாவாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டது. பெரியார் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அரசு அங்கீகரித்தது. பெரியார் பொன் மொழிகளை நூலாக வெளியிட்டு பரப்பியதோடு, தமிழகம் முழுதும் முக்கிய நகரங்களில் பெரியார் நினைவாக ‘பகுத்தறிவுச் சுடர்’ நிறுவப் பட்டது. பெரியார் வாழ்க்கைவரலாற்றை விளக்கிடும் கலைநிகழ்வுகள் பல நகரங்களில் நடத்தப்பட்டன. வீதிகளில் இருந்த ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன.   பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியதும் எம்.ஜி.ஆர். ஆட்சியின் மகத்தான சாதனை. ஆனால், இடஒதுக்கீடு குறித்த தெளிவான புரிதல்அவருக்கு இல்லாமல் போனதால் பார்ப்பனர்கள் எம்.ஜி.ஆரிடம் தங்களுக் கிருந்த செல்வாக்கைப் பயன் படுத்தி, பிற்படுத்தப்பட்டோரை நிர்ணயிக்க பொருளாதார வரம்பை அமுலாக்க...

ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு

தமிழ்நாட்டில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளை செய்த பெருமை மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உண்டு. இதை எவராலும் மறுக்க முடியாது. விடுதலைப் புலிகள் இயக்கமே இதை நன்றியுடன் பதிவு செய்திருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை – அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள்; எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி, சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான். சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோது, முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான். ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடு, தனது சக அமைச்சர்களையும்...